நன் தினமும் வேலைக்கு என்னுடைய இருசக்கர வாகனத்தில் செல்லும் போது அவர் குடியிருக்கும் வீட்டை கடந்து தான் செல்ல வேண்டும் .
ஒரு சில நேரம் அவரை பார்க்க நேரிடும் , ஒரு சில நேரம் அவரை பார்க்க முடியாது. எப்போதாவது அவரைப் பார்க்க நேர்ந்தால் லைட்டா ஒரு சின்ன ஸ்மைல் பன்னிட்டு கிளம்பிடுவேன்.அவர் என்னை கண்டுக்கவே மாட்டார். ஐயையோ பல்ப் வாங்கிட்டோமேடானு நினைப்பேன்.
சொல்லப்போனால் மூன்று வருடம் ஆகியும் அவருடைய பெயர் கூட இன்னும் எனக்கு தெரியாது . எனக்கும் அவருக்கும் எந்தவிதமான பகையோ வேறுபாடோ இல்லை என்றாலும் , அவரைப் பார்க்கும்போது கடுப்பேத்துறார் மை லார்ட்-னு தோனும்.
ஒருநாள் நான் சாலையில் நடந்து போகும் போது, அவர் பயங்கர சத்தத்துடன் கதவை அடைத்தார் அப்போது, இந்தாளு ஏன் இப்படி இருக்காரு நான் சும்மா ரோட்ல தான நடந்துபோறேன் இவரு ஏன் தேவையில்லாம இவ்வளவு சத்தத்தோட கதவ அடைக்கிறார் .
நான் என்ன இவரிடம் அஞ்சு பத்து காசு வாங்கவா வந்தேன் என்று நினைத்தது உண்டு. உண்மையை சொல்லப்போனால் , நான் அன்று சாலையில் நடந்து செல்லவில்லை என்றாலும் கூட அவர் கதவை அப்படித்தான் அடைத்திருப்பார். அது அவருடைய இயல்பு.
அவர் இதுவரை என்னிடம் பேசியது கிடையாது, பழகியது கிடையாது, முன்விரோதம் எதுவும் கிடையாது ஆனால் ஏதோ ஒருவிதமான கோபம் அவர் மேல் , அவரை பார்க்கும்பதெல்லாம் வரும் அவரைப்போலவே எனக்கும்..
இது எல்லாவற்றிற்கும் என்ன காரணம் என்று யோசித்தேன்?
சிறிதுநேரம் கழித்து விடை கிடைத்தது.. அதற்கு காரணம் , அவர் எப்போதும் தன்னுடைய வீட்டாரிடமும் , பிறரிடமும் கோவமாக பேசிக் கொண்டிருப்பது தான் என்று தோன்றியது.
என்னுடைய இந்த சிந்தனையால் அவருக்கு ஒன்றும் நஷ்டம் ஏற்படப்போவதில்லை , ஏற்படவும் வேண்டாம்..
ஆனால் ஒரு மனிதனிடம் பேசாமல், பழகாமல் இருக்கும்போதே அவரைப் பற்றி எனக்குத் வெறுப்பு தோன்றுகிறது என்றால், அவரையே நம்பி இருக்கக்கூடிய அவருடைய குடும்பத்தாரின் மனநிலை எப்படி இருக்கும் ?? என்று அவர்தான் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
கொடையாய் இருந்தாலும் சரி , கோபமாய் இருந்தாலும் அளவாய் வைத்துக்கொள்வது நமக்கும் நல்லது.
நம்மை சார்ந்து இருப்போருக்கும் நல்லது..
ஆகவே , நிலையில்லா இவ்வுலகில் கோபமும் நிலையற்றது என்பதை புரிந்து கொள்வோம் .
அதற்கான கோபப்படவே வேண்டாம், அன்பை மட்டுமே செலுத்துங்கள் என்று நான் சொல்லவில்லை.
கோபம் வந்தாலும் அதை அளவாக வெளிப்படுத்துங்கள் குறிப்பாக உங்களுடைய குடும்பத்தாருடன்...
" நெருப்புல சுட்டா ஆறிடும் ஆனா வெறுப்புல சுட்டா ஆறாது பாஸ் "
நன்றி வணக்கம்
Tags:
STORIES