அதாவது சிம்பி என்றால் " பொட்டி " என்று அர்த்தம். தானியத்தை உடைத்தால் பொட்டி போன்று இரண்டாக சமமாக பிளக்க முடியுமானால் அதற்கு சிம்பி தானியம் என்று பெயர்.
சிம்பி தானியத்திற்கு உதாரணமாக பச்சைப்பயிறு , பொட்டுகடலை உளுந்து, மொச்சை, சுண்டல் , தட்டைபயிறு முதலானவற்றை சொல்லலாம்.
பொதுவாக இந்த தானியங்கள், எளிதில் ஜீரணமாகாதவை , அதிக குளிர்ச்சி தன்மை கொண்டவை, மேலும் இது உடலில் வாயுத்தொல்லையை அதிகரிக்கும் தன்மை கொண்டவை என்பதால் இதை தினமும் சாப்பிடக்கூடாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
இவற்றுள் பச்சைப்பயிறு மட்டும் விதிவிலக்கு . ஏனெனில் இது எளிதில் ஜீரணமாகும், கண்களுக்கு குளிர்ச்சி மற்றும் பாதுகாப்பை தரும்.
ஆனால் மொச்சை கொட்டையை அளவாக பயன்படுத்துங்கள் . சிம்பி தானியங்களிலேயே அதிக அளவு வாயு தொல்லையை தரக்கூடியது இந்த மொச்சை . அதற்காக இதில் ஆரோக்கியத்திற்கு ஒன்றும் குறைவில்லை . அளவாக பயன்படுத்த வேண்டும் அவ்வளவுதான்.
மாதம் இரண்டு முறை மட்டும் மொச்சைக் கொட்டையை சாப்பிட்டால் பெரிதாக பிரச்சனைகள் இல்லை . முடிந்த அளவு வாயுத்தொல்லை உள்ளவர்கள் இதை தவிர்ப்பது நல்லது.
சிம்பி தானியத்திற்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவது பொட்டுக்கடலை . இதை உடைத்தால் இரண்டாக சரிபாதியாக பிரியும்.
இந்த பொட்டுக்கடலையில் இறைச்சியில் உள்ள அளவு புரதசத்து நிறைந்துள்ளது. இதை அளவாக சாப்பிட்டால் நரம்பு மற்றும் தோல்களுக்கு நன்மை தரும்.
அதனால் சிம்பி தானியத்தை முடிந்தளவு அளவாக பயன்படுத்துங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்.
நன்றி வணக்கம்