இரும்புசத்து குறைபாடு வராமல் இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள்.


நம் உடலில் இருக்கும் இரத்த சிவப்பணுக்களின் அளவு குறைவாக இருக்கும் போது ஏற்படக்கூடிய பிரச்சனை தான் அனீமியா என்று சொல்லப்படக்கூடிய இரத்தசோகை . இது இரும்பு சத்து குறைபாட்டினால் ஏற்படக்கூடியது . பெரும்பாலும் இந்திய பெண்கள் தான் இரத்தசோகையால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்று ஆய்வு சொல்கிறது.




இந்த பிரச்சனை உள்ளவர்களின் உடலில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருப்பதால்  ஒரு சில முக்கிய அறிகுறிகளை வெளிப்படுத்தும் குறிப்பாக , மிகுந்த களைப்பு, வெளிறய சருமம் , மூச்சு விடுவதில் சிரமம், அவ்வப்போது லேசான தலைவலி , வேகமான இதயத் துடிப்பு போன்றவை குறிப்பிடத்தக்கவை.

யாருக்கெல்லாம் இரத்தசோகை பிரச்சனை வர வாய்ப்புள்ளது என்றால்,

* வைட்டமின் குறைபாடு உள்ளவர்கள்.
* குடல் சம்பந்தமான பிரச்சனை உள்ளவர்கள் .
* கர்ப்பிணி பெண்கள் .
* சிறுநீரக செயலிழப்பு உள்ளவர்கள் .
* புற்று நோய் போன்ற பிரச்சினைகள் உள்ளவர்கள்.

 பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.

இந்த இரத்த சோகை பிரச்சனைக்கு முறையான சிகிச்சை பெறாமல் இருந்தால் கருத்தரிப்பதில் சிரமம்,  இதய பிரச்சனகள் மற்றும் சில நேரங்களில் மரணம் கூட ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. 

அதற்காக பயப்பட வேண்டாம் , இந்தப் பிரச்சனையில் இருந்து விடுபடவும்,  இந்த பிரச்சனை வாழ்நாள் முழுவதும் வராமல் இருக்கவும் , என்னென்ன உணவுகளை பின்பற்ற வேண்டும் என்பதைப் பற்றி பார்ப்போம்.

1. பச்சை இலைக் காய்கறிகள்.


பச்சை இலைக் காய்கறிகளான,  பசலைக் கீரை,  முருங்கைக் கீரை,  கொத்தமல்லி போன்றவற்றில் இரும்புச்சத்து ,  ஃபோலிக் அமிலம் அதிகமாக உள்ளது . இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் இரத்த சிவப்பணுக்கள் அதிகரிக்கும் .

2. பேரிச்சம்பழம்.



பேரிச்சம்பழத்தில் , டயட்டரி நார்ச்சத்துக்கள்,  ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் , வைட்டமின் சி,  இரும்புச்சத்து அதிகமாக உள்ளது.

 ஆகையால் தினமும் 2  முதல் 4  பேரிச்சம்பழம் சாப்பிட்டு வந்தாலே அனீமியா பிரச்சனை ஏற்படுவதை தவிர்க்கலாம்.

3. மாதுளை.


மாதுளையில் இரும்புச்சத்து,  கால்சியம்,  மெக்னீசியம் போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளன. மேலும்  இதில் இரும்புச்சத்தை உறிஞ்சுவதற்கு தேவையான அளவு வைட்டமின் சி உள்ளது . அதனால் மாதுளையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்தசோகை பிரச்சனைகள் வராது.


4. தண்ணீர்விட்டான் கிழங்கு. 



தண்ணீர்விட்டான் கிழங்கு (ASPARAGUS) , அல்லது தண்ணீர்வட்டான் கிழங்கு பொடி.  இது அனைத்து  நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கிறது. இந்தப் பொடியை இரவில் தூங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு பாலில் சேர்த்து நன்றாக கலந்து குடித்து வந்தால் இரத்தசோகை பிரச்சனைகள் வராது.



மேலும் அத்திப்பழம்,  பனவெல்லம்,  ஆப்பிள் , வாழைப்பழம், ரோஜா குல்கந்து,  பாதாம் , வால்நட், ஆட்டு ஈரல்,  ப்ரோக்கோலி இவை அனைத்துமே இரத்தசோகையில் இருந்து விடுபட உதவக்கடிய மிக முக்கிய உணவுகள் . 

எனவே இதில் ஏதாவது ஒன்றை தினமும் சாப்பிட்டு வந்தால் வாழ்நாள் முழுவதும் இரும்புச்சத்து குறைபாடு மற்றும் இரத்தசோகை பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.

           
                   நன்றி வணக்கம்

கருத்துரையிடுக

thankyou for reading the post ... visit again for more information

புதியது பழையவை