இரண்டு எலும்புகளில் முனைகளை மூடியுள்ள குருத்தெலும்புகள், யூரிக் அமிலங்கள் மற்றும் சில அமிலங்களால் அரிக்கப்பட்டு இரண்டு எலும்புகளும் ஒன்றோடு ஒன்று உராய்வதால் ஏற்படக்கூடிய பிரச்சனையே மூட்டு வலி ஆகும்.
மூட்டு வலி வருவதற்கு மிக முக்கியமான காரணங்களாக பரம்பரை , அதிக உடல் எடை , சத்தான உணவுகளை உண்ணாதது. எலும்பு முறிவு, அதிக நேரம் சம்மணமிட்டு உட்கார்ந்து வேலை பார்த்தல் , போன்றவையே ஆகும்.
1. மூட்டுவலி பிரச்சனை இருப்பவர்கள் வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயில் சிறிது கற்பூரத்தை போட்டு மூட்டில் நன்கு தேய்த்தால் வலி குறையும்.
2. குப்பைமேனி இலையை சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து அரைத்து பற்று போடலாம் அல்லது, சுக்கை எலுமிச்சை சாறு விட்டு அரைத்து பற்றுப் போடலாம் இப்படி தொடர்ந்து பத்து போட்டு வர மூட்டு வலி குறையும்
3. அரை ஸ்பூன் கருப்பு எள்ளைக் இரவில், ஒரு டம்ளர் தண்ணீரில் ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் யூரிக் அமில சுரப்பு கட்டுக்குள் இருக்கும் மூட்டுவலியும் குறையும்.
4. பாசிப்பருப்பை பூண்டுடன் சேர்த்து வேகவத்து சூப் செய்து காலை மாலை என இரண்டு முறை சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி குறையும்.
5. சிற்றாமணக்கு இலையை விளக்கெண்ணெய் சேர்த்து வதக்கி வெதுவெதுப்பான உடன் நன்றாக துணி வைத்து கட்டினால் மூட்டுவலி குறையும்.
நன்றி வணக்கம்