1. மயில்களை கண்டால் யாருக்குதான் பிடிக்காது அதுவும் தோகை விரித்து ஆடும் அழகைப் பார்க்க இரண்டு கண்கள் போதாது. இந்த உலகத்திலேயே , " இந்திய நீல மயில், பச்சை மயில், ஆப்பிரிக்கா அல்லது காங்கோ மயில்" என மூன்று வகையான மயில் இனங்கள் தான் உள்ளன.
நம்மில் பலரும் வெள்ளை மயில்களை பார்த்திருப்போம் தானே ! அப்பறம் ஏன் வெள்ளை மயிலை இந்த பட்டியலில் சேர்க்கவில்லை என்று தெரியுமா?
ஏனென்றால் வெள்ளை மயில் என்பது ஒரு அரிய வகை உயிரினம் கிடையாது. அது நிற குறைபாட்டுடன் பிறந்த சாதாரண மயில் தான் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்..
ஆம், தென் அமெரிக்கா கண்டத்தில் உள்ள பராகுவே என்னும் நாட்டில் கைபிபெண்டி என்னும் பள்ளத்தாக்கில் " சேன் " என்று ஒரு பழங்குடி இனம் உள்ளது. அங்குள்ள மக்களுக்கு ஏரியில் உள்ள தண்ணீர் உப்பாக இருப்பதால் அவர்கள் தண்ணீர் குடிப்பதே இல்லையாம்.
அதற்கு பதிலாக சோளம் இங்கு அதிகமாக விளைவதால் அதிலிருந்து பீர் தயாரித்து அதைதான் அருந்துகிறார்கள்..
3. உலகிலேயே மிக உயரமான பூவின் பெயர் " அமோர் போபாலஸ் " . இந்த பூ கிட்டத்தட்ட 2 மீட்டருக்கு மேல் வளரக்கூடியது . இந்தோனேசியா நாட்டில் ஒரு சில பகுதிகளில் மட்டுமே காணப்படுகிறது.
இந்தப் பூ பார்ப்பதற்கு பிரம்மாண்டமாக இருந்தாலும் இதிலிருந்து வெளியேறக்கூடிய துர்நாற்றம் சகித்துக்கொள்ளவே முடியாது.
4. அதிகமான பற்கள் இருக்கக்கூடிய உயிரினம் எது ? என்று உங்களிடமோ அல்லது என்னிடமோ கேட்டால் கண்டிப்பாக சிங்கம் ,புலி , முதலை, டைனோசர் என்று வேட்டையாடும் உயிரினங்களை தான் சொல்லத் தோன்றும் அல்லவா ?.
ஆனால் ஏனோ தெரியவில்லை நத்தைகளுக்கு தான் அதிக பற்கள் இருக்கின்றது.. எவ்வளவு பற்கள் தெரியுமா ? சுமார் 14000 முதல் 20000 பற்கள் இருக்குமாம்.
நன்றி வணக்கம்