ஆனால் உண்மையில் வயிற்றுக்கும் பசிக்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது. பசியை உண்டாக்குவது என்னவோ மூளைதான் .
நம்முடைய இரத்தத்தில் குளுக்கோஸ் , கொழுப்பு வைட்டமின்கள் , அமினோ அமிலங்கள் , போன்ற பொருள்கள் சீரான அளவில் இருக்கிறதா என்பதை மூளை கவனித்துக் கொண்டே இருக்கும்.
இதில் ஏதாவது ஒன்று குறைந்து விட்டால் அதை ஈடுசெய்ய நாம் சாப்பிட வேண்டும் தானே ! அதனால் மூளை நமக்கு பசியை தூண்டுகிறது .
2. நம் இந்தியாவில் எதிர்ப்பையும் துக்கத்தையும் வெளிப்படுத்த கருப்புக் கொடிகளையோ அல்லது கருப்பு ஆடைகளையோ அணிந்து நம்முடைய உணர்வை வெளிப்படுத்துவதுவார்கள் அதுபோல.
எகிப்தில் மஞ்சள் நிறத்தையும், சீனாவில் வெள்ளை நிறத்தையும், துருக்கியில் நீல நிறத்தையும், தங்களுடைய துக்க அடையாளச் சின்னங்களாக கொண்டுள்ளார்கள்.
3. இன்றைய காலகட்டத்தில் ஆண் பெண் இருவருமே சட்டைகள் போட ஆரம்பித்துவிட்டோம். ஆனால் இரண்டு சட்டைகளுக்கும் ஒரு சிறிய வித்தியாசம் உள்ளது அது என்னவென்றால் ,
ஆண்களுடைய சட்டையில் பட்டன்கள் வலது பக்கத்தில் இருக்கும் . ஆனால் பெண்கள் அணியும் சட்டையில் பட்டன்கள் இடதுபக்கத்தில் இருக்குமாம்.
4. பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை தங்கம் , வைரம்- னு கொஞ்சுவாங்க தானே ! ஆனால் குழந்தைகளுக்கு மட்டுமல்ல மனிதர்கள் எல்லோருமே தங்கம் தான்.
ஆம் நம்முடைய உடம்பில் சராசரியாக 0.2 மில்லிகிராம் அளவு தங்கம் உள்ளது.
.... நன்றி வணக்கம் ....