இப்பொழுது நம்முடைய உடலுக்கு அதிகப்படியான ஆற்றல் மற்றும் வலிமையை தரக்கூடியது மிக முக்கியமான ஐந்து விதைகளைப் பற்றி பார்க்கலாம்.
1. சியா விதைகள்.
சியா விதைகள் சிறியதாக கருப்பாக இருக்கும். இவை மாயன் கலாச்சாரத்தில் வாழ்ந்த மக்களின் மிக முக்கிய உணவாக இருந்துள்ளது .
அதிக நேரம் போர் புரிய வேண்டும் என்றால் உடலில் அதிக ஆற்றல் தேவைப்படும் என்பதற்காக , இவர்கள் சியா விதையை தங்களுடைய உணவு முறையில் பின்பற்றி வந்துள்ளார்கள் என்று சொல்லப்படுகிறது.
தினமும் ஒரு ஸ்பூன் அதாவது 10 கிராம் அளவு சியா விதைகளை நான்கு மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்த பிறகு அதை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
இதில் கால்சியம் , மெக்னீசியம், இரும்புச்சத்து, நார்சத்து , ஒமேகா-3 அமிலங்கள் அதிகமாகவே உள்ளது.
இதை பழச்சாறுகளிலோ, அல்லது வறுத்துப் பொடி செய்து தோசை மாவிலோ கலந்து சாப்பிட்டாலாம் .
2. பூசணி விதைகள்.
பூசணி விதைகள் மிகவும் சுவையானவை. மேலும் இதில் அதிக அளவு ஊட்டச்சத்துக்களும் அடங்கியுள்ளன. உதாரணமாக ஒரு ஸ்பூன் பூசணி விதையை சாப்பிட்டால் ஒருநாளைக்கு உங்களுடைய உடலுக்குத் தேவையான அளவு இரும்பு சத்து கிடைத்துவிடும்.
மேலும் இதில் 5 கிராம் அளவு நார்சத்து , அமினோ அமிலங்கள், புரதம், ஒமேகா-3 , துத்தநாகம், மெக்னீசியம் போன்ற தாதுக்களும் அடங்கியுள்ளன.
பூசணி விதையை நன்றாக வறுத்து சிற்றுண்டி போல சாப்பிடலாம் அல்லது வறுத்த பூசணி விதையைப் பொடி செய்து பாலிலோ, தண்ணீரிலோ அல்லது பழச்சாறுடனோ கலந்து குடிக்கலாம்.
3. ஆளி விதைகள்.
ஆளி விதைகளை ( FLAX SEEDS ) என்று சொல்லுவார்கள். இதில் ஆல்பா லினோலினிக் அமிலம் அடங்கியுள்ளது. இது ஒரு வகை ஒமேகா - 3 என்று சொல்லப்படக்கூடிய நல்ல கொழுப்பு அமிலம் . இது மாரடைப்பு மற்றும் இதயம் சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கவல்லது.
மேலும் இதில் லிக்னன்ஸ் (LIGNANS ) உள்ளது. இது புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைக்கும் தன்மை கொண்டது .
ஆளி விதைகளையும் , நீங்கள் வருத்து பொடி செய்து பால் , தயிர் பழச்சாறுகள் என எதில் வேண்டுமானாலும் கலந்து குடிக்கலாம்.
4. சனல் விதைகள்.
சனல் விதைகளில் கிட்டத்தட்ட எட்டு மிக முக்கியமான அமினோ அமிலங்கள் மற்றும் டெட்ரா ஹைட்ரோகண்ணா பினோல் அடங்கியுள்ளது. இதில் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் அளிக்க வல்லது.
இந்த விதைகளை பச்சையாகவோ, சமைத்தோ அல்லது அரைத்து பால் எடுத்தோ முளைக்கட்டிய பிறகோ சாப்பிடலாம்.
அப்படி தினமும் சாப்பிட்டு வரும்போது மாரடைப்பு வருவதற்கான தாக்கம் குறையும், ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனைகள் சரியாகும் , ஜீரண சக்தி மேம்படும்.
5. சூரியகாந்தி விதை.
சூரியகாந்தி விதைகளில் புரதம்,. நார்ச்சத்து , செலினியம் , காப்பர் மெக்னீசியம் , வைட்டமின் ஈ மற்றும் மேலும் பல முக்கிய சத்துக்கள் அடங்கியுள்ளன.
இதை தினமும் சாப்பிட்டு வந்தால் டைப் 2 சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படக்கூடிய அலர்ஜி , தடிப்பு, உடலில் தெம்பில்லாமல் உணருவது போன்ற பிரச்சனைகள் நீங்கும்.
மேலும் இது இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் வராமலும் தடுக்கும் எனவே இதய நோயாளிகள் இதை தாராளமாக சாப்பிடலாம்.
எந்த விதையாக இருந்தாலும் நன்றாக வறுத்து பொடிசெய்தோ, பழச்சாறுகளில்கலந்தோ, முளைகட்டிய பிறகோ அல்லது ஊறவைத்து அரைத்து பால் எடுத்து சாப்பிட்டால் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
நன்றி வணக்கம்
Tags:
தெரிந்து கொள்வோம்
பாட்டி வைத்தியம்
Health tips
Natural therapy
tamil info library
tamil library