சுக்கை இப்படி சாப்பிட்டு பாருங்கள்..



எல்லோரும் சொல்லுவது போல நானும் இந்த பழமொழியில் இருந்தே துவங்குகிறேன்,

" சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை,  சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய கடவுளும் இல்லை "

சரி , ஏன் இந்த சுக்கிற்கு மட்டும் இவ்வளவு பெரிய அறிமுகம்.  அப்படி என்ன மருத்துவ குணங்களை இந்த சுக்கு கொண்டுள்ளது என்பது பற்றியும் அதை பயன்படுத்தும் முறை பற்றியும்  பார்க்கலாம் .



1. சித்தா , ஆயுர்வேதம் மட்டுமல்லாமல் ஜப்பான் , கொரியா,  சீன மருத்துவத்திலும் கூட சுக்குக்கு என்று ஒரு தனி இடம் உண்டு. நம்முடைய உடலில் , பித்தம் அதிகமானால் குடற்புண்கள் ,  மலச்சிக்கல், வயிற்று உப்புசம் , இரத்தக் கொதிப்பு,  தலைவலி ,  உளவியல் சார்ந்த பிரச்சனை என பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் .

 பித்தம் சமநிலையில் இருக்க வேண்டுமென்றால் சுக்கு மற்றும் கொத்தமல்லி விதையை  எடுத்து,  கசாயம் போல் காய்ச்சி பனை வெல்லத்துடன் சேர்த்து வாரம் இருமுறை என  மாலை வேளைகளில் குடித்துவந்தால் பித்தம் சீரான நிலையில் இருக்கும்.

2. கருவுற்ற காலத்தில் ஏற்படக்கூடிய பித்தவாந்திக்கு , மிகச் சிறிய அளவு சுக்கு தூளை எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். 

மேலும்  மலை பயணங்களில் ஏற்படக்கூடிய குமட்டலுக்கும் இது மிகச் சிறந்த மருந்து.

3. லேசான காய்ச்சல் மற்றும் தலைவலிக்கு ,  அரை டீஸ்பூன் அளவு சுக்குத் தூளை வெறும் தண்ணீரோடு கலந்து நெற்றியில் பற்று போட்டால்  சரியாகிவிடும் .

 எட்டு வயது இருக்கும் கீழே இருக்கக்கூடிய குழந்தைகளுக்கு இதை பயன்படுத்த வேண்டாம் , காரணம் என்னவெனில் இதில் இருக்கக்கூடிய காட்டத்தன்மை குழந்தைகளின் தோலை புண்ணாக்கக் கூடும் ‌‌‌.

4. நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கக்கூடிய சுக்கு தைலத்தை வாங்கி தலையில் தேய்த்தால் சைனஸால் ஏற்படக்கூடிய தலைவலி நீங்கும் .

 மேலும் சுக்கு தைலத்தை தண்ணீரில் கலந்து குளித்துவந்தால் , காதுக்குள் ஏற்படக்கூடிய இரைச்சல் பிரச்சனை, காதில் சீழ் ஏற்படுதல் , போன்ற பிரச்சனைகள் படிப்படியாக குணமாகும் .


                       நன்றி வணக்கம்


கருத்துரையிடுக

thankyou for reading the post ... visit again for more information

புதியது பழையவை