" பூண்டு கைவசம் இருந்தால் போருக்கே செல்லலாம் " என்று கிராமப் புரங்களில் பலர் கூறி கேள்விப்பட்டதுண்டு . தினமும் இரவில் தூங்கப் போவதற்கு முன்பு பசும்பாலில் இரண்டு பூண்டை வேகவைத்து குடித்தால் அதைவிட நலம் சேர்க்கும் விஷயம் வேறொன்றும் இல்லை என்று கவிஞர் கண்ணதாசன் தன்னுடைய அர்த்தமுள்ள இந்து மதம் புத்தகத்தில் கூறியுள்ளார் .
இந்தப் பதிவில் பூண்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நமக்கு கிடைக்கக்கூடிய ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி விவரமாக பார்க்கலாம் .
1. வாயுக் கோளாறு .
வாயுக் கோளாறு உள்ளவர்கள் பூண்டு, பனை வெல்லம் மற்றும் மிளகு இந்த மூன்றையும் இரண்டு கிராம் என சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட்டு வந்தால் இந்த பிரச்சனைகள் மறையும் .
2. நோய் எதிர்ப்பு சக்தி .
பூண்டில் அலிசின் ( Allicin ) என்னும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் உள்ளது . இது நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் செயல்பாட்டை மேம்படுத்தும் .
3. மார்புச் சளி .
மார்பு சளி பிரச்சனை உள்ளவர்கள் தினமும் மூன்று பூண்டு பற்களை தோல் நீக்கி எடுத்து 100 ml பசும்பாலில் போட்டு வேக வைத்து அதை பனங்கற்கண்டுடன் கலந்து குடித்து வந்தால் மார்பு சளி பிரச்சனை, மூச்சுத் திணறல் , மார்பு வலி போன்ற பிரச்சனைகள் நீங்கும் .
4. முட்டி வலி .
தேங்காய் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெய்யில் பூண்டை போட்டு காய்ச்சி அது நன்கு ஆறியவுடன் அதை எடுத்து முட்டி வலி , நரம்பு வலி உள்ள இடத்தில் நன்றாக பூசி தேய்த்து வந்தால் சீக்கிரம் நல்ல நிவாரனம் கிடைக்கும் .
5. வயிறு உப்புசம் .
பூண்டு , கரிசாலை இலை மற்றும் மிளகு இந்த மூன்றையும் 2 கிராம் அளவில் எடுத்து அரைத்து விழுதாக்கி அதை சிறிதளவு எடுத்து உணவிற்குப்பின் சாப்பிட்டு வந்தால் வயிறு உப்புசம் சரியாகும் .
6. உடல் பருமன் .
இரண்டு பூண்டு பற்கள் , கால் தேக்கரண்டி ஓமம் மற்றும் மூன்று மிளகு இவற்றை நன்றாக தண்ணீர் விட்டு அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள புழுக்கள் நீங்கும் . மேலும் கெட்ட கொழுப்புகள் கரைந்து உடல் பருமன் குறையும் .
தினமும் இரவில் பூண்டை தேனில் ஊரவைத்து அதை அதிகாலையில் சாப்பிட்டால் உடலில் கெட்ட கொழுப்புகள் தாங்காது. மேலும் இதய தமனிகளில் உள்ள அடைப்புகள் நீங்கும் .
7. தலைவலி .
பூண்டு , இஞ்சி , சீரகம் இந்த மூன்றையும் சம அளவு எடுத்து காய்ச்சி கசாயம் செய்து பனைவெல்லம் சேர்த்து குடித்து வந்தால் தலைபாரம் , தலைவலி சரியாகும் . மேலும் பூண்டு சாறு எடுத்து எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்து வந்தால் சளி , இருமல் குணமாகும் .
8. சொறி சிரங்கு .
சின்ன சின்ன பூச்சிகள் அல்லது சிற்றுண்ணிகள் சருமத்தின் ஆழத்தில் சென்று ஊடுருவுவதால் சொறி சிரங்கு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இந்தப் பிரச்சனை உள்ளவர்கள் பூண்டு சாறு மற்றும் எலுமிச்சை சாறு ஆகிய இரண்டையும் சம அளவு எடுத்து பாதிப்பு உள்ள இடத்தில் தேய்த்து வந்தால் சரியாகும் .
9. காது வலி .
நல்லெண்ணெயுடன் பூண்டு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி நன்றாக குளிர்ந்தப் பின்பு காதில் இரண்டு சொட்டு ஊற்றினால் காது மந்தம் , காது இரைச்சல் , காது வலி போன்றவை சரியாகும்.
10. இரத்த ஓட்டம் .
சுக்கு , மிளகு , திப்பிலி இந்த மூன்றையும் 5 கிராம் எடுத்து பொடி செய்து பூண்டு சேர்த்து வேகவைத்த பாலுடன் கலந்து குடித்து வந்தால் சீரற்ற இரத்த ஓட்டம், இரத்த அழுத்தம் , இரத்த உறைவு ஆகியவற்றிற்கு நல்ல தீர்வு தரும் .
11 . நீரிழிவு நோய் .
நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் உணவில் பூண்டை சேர்த்துக் கொண்டால் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவு அதிகரிக்காமல் கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும் . நீரிழிவு நோயின் தாக்கமும் குறையும்.
12 . மன அழுத்தம் .
தினமும் காலையில் வெறும் வயிற்றில் வதக்கிய பூண்டை சாப்பிட்டு வந்தால் மன அழுத்த பிரச்சனை நீங்கும் . நம் உடலில் உள்ள நச்சு கழிவுகள் வெளியேறும் , இதயம் வலிமை பெறும் .
13. எலும்புகள் ஆரோக்கியம் .
45 வயதுக்கு மேலாக இருக்கக்கூடிய பெண்கள் பலரும் எலும்பு புரை நோய் அதாவது OSTEOPOROSIS பிரச்சனையால் பாதிக்கப்படுகிறார்கள். இவர்கள் தங்களுடைய உணவில் வெங்காயம் மற்றும் பூண்டினை அதிக அளவில் சேர்த்துக் கொண்டால் உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரித்து எலும்புகளுக்கு வலிமை தரும் .
இதுபோன்ற ஆரோக்கிய பதிவுகளை காண நம்முடைய BLOG - ஐ பின்தொடருங்கள் .
நன்றி வணக்கம்
Tags:
Natural theraphy