உலகின் கொடிய விஷமுள்ள ஆபத்தான பாம்புகள் .

வணக்கம் நண்பர்களே ! இந்த உலகம் முழுவதும் 3000 வகையான பாம்பு இனங்கள் உள்ளன . அவற்றுள்  600 பாம்புகள் தான் நச்சுத்தன்மை வாய்ந்தவை . அதிலும் குறிப்பாக 200 பாம்புகள் தான் மனிதர்களுக்கு கடுமையான ஆபத்தை விளைவிக்க கூடியது.

 உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றின்படி அந்த 200 பாம்புகளில் 6 பாம்புகள் தான் மனிதர்களுக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய கொடிய நஞ்சுள்ள பாம்புகள் என்று சொல்லப்படுகிறது .

6 . BLACK MAMBA .

ஆப்பிரிக்கா மக்களிடம் சென்று உங்களை அச்சுறுத்தக்கூடிய கொடிய வகை பாம்பு எதுவென்று கேட்டால் அவர்கள் சொல்லக்கூடிய பதில் பிளாக் மாம்பா என்பதாகத்தான் இருக்கும் .

இது சராசரியாக 8.2 அடி நீளம் இருந்தாலும் சில பாம்புகள் 14 அடி வளருமாம் . இந்த பாம்பு ஒரு மணி நேரத்தில் சராசரியாக 12.5 மைல் வேகத்தில் ஊர்ந்து செல்லும் திறன் கொண்டது . ஆகையால் இந்த ப்ளாக் மாம்பா விரட்டினால் ஜமைக்கன் தடகள வீரரான உசைன் போல்டால் கூட வேகமாக ஓடி தப்பிக்க முடியாது .

இந்தப் பாம்பு மிகவும் கூச்ச சுபாவம் உள்ளது அதனால் இது முடிந்த அளவு தப்பித்து செல்ல தான் முயற்சி செய்யும் .  ஆனால் அச்சுறுத்தல் அதிகமாகும் போது தான் பாய்ந்து வந்து தாக்கி விஷத்தை உடம்பில் செலுத்தி விடும். இது ஒரே தாக்குதலில் 12 முறை கொத்தி விஷத்தை உடம்பில் செலுத்தும் திறன் கொண்டது .

இந்தப் பாம்பு கடித்த சில நேரத்திலேயே சுவாச மண்டலம் பாதிப்படைந்து மாரடைப்பு ஏற்பட்டு 15 நிமிடத்திலேயே இறந்து விடுவார்களாம். இதற்கு ANTI VENOM உள்ளது. ஆனால் சரியான நேரத்தில் சிகிச்சை மேற்கொள்ளவில்லை என்றால் உயிர்பிழைப்பது மிகவும் கடினம் .

5. SAW SCALED VIPER .

இந்த SAW SCALED VIPER - ஐ சுருட்டை விரியன் என்று அழைப்பார்கள் . இது ஆப்பிரிக்கா , இந்தியா , இலங்கை போன்ற நாடுகளின் வறண்ட பகுதியில் தான் அதிகமாக காணப்படுகிறது .

இந்தப் பாம்புகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் போது ஒரு வித சத்தத்தை எழுப்பி எச்சரிக்கும். அந்த சத்தம் எப்படி இருக்குமென்றால் சூடாக இருக்கும் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றினால் வரக்கூடிய சத்தம் போல் இருக்கும் .

இந்த பாம்பு தாக்கும்போது அதன் உடம்பை S வடிவில் வளைத்து தான் தாக்கும் . இது மற்ற பாம்புகள் மாதிரி வேகமாக ஊர்ந்து வந்து தாக்காது. ஆனால் இதன் ஒரு மில்லி கிராம் விஷம் 6 மனிதர்களைக் கொல்லும் அளவு ஆபத்தானது . 

இந்தப் பாம்பு கடித்து சரியாக 45 நிமிடத்திற்குள் சிகிச்சை எடுக்கவில்லை என்றால் உடலில் உள்ள திசுக்கள் சேதமடைந்து இறந்து விடுவார்கள். இந்த சுருட்டை விரியன் பாம்பு கடியால் மட்டும் வருடத்திற்கு 4000 முதல் 5000 மரணங்கள் ஏற்படுகிறதாம் . 

4 . BLUE KRAIT SNAKE .

இந்த வகை பாம்புகள் ஆசியா கண்டத்தில் மட்டும்தான் உள்ளது . இந்த BLUE KRAIT SNAKE இரவு நேரங்களில் தான் வேட்டையாடும் . இதனுடைய முக்கியமான உணவே இதை விட சிறியதாய் இருக்கக்கூடிய பாம்புகள் தான் அவை விஷம் உள்ளதாக இருந்தாலும் சரி விஷமற்றதாக இருந்தாலும் சரி .

 இதனுடைய விஷம் கிங் கோப்ராவின் விஷத்தை விட 16 மடங்கு அதிக விஷத்தன்மை வாய்ந்தது . இந்தப் பாம்பு கடித்து சரியாக 30 நிமிடத்திற்குள் முறையான சிகிச்சை எடுக்கவில்லை என்றால் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு .  ஒரு வேலை சிகிச்சை எடுத்தாலும் 70 முதல் 80 சதவீதம் பேர்கள் இறந்துள்ளார்கள் என்று சொல்லப்படுகிறது . 

3 . KING COBRA .

இந்தியாவின் சமவெளி பகுதிகள் , மழைக்காடுகள் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் வாழக்கூடிய உலகின் மிகப்பெரிய விஷப்பாம்பு இனம் தான் கிங் கோப்ரா என்று சொல்லக்கூடிய ராஜ நாகம் .

இது சராசரியாக 18 அடி நீளம் வரைக்கும் வளரக்கூடியது. இது மனிதர்களை அவ்வளவு சீக்கிரமாக தாக்காது ஆனால் இதை யாராவது தொந்தரவு செய்து அச்சுறுத்தினால் தன்னுடைய உடம்பின் மூன்றில் ஒரு பாகத்தை தூக்கி காட்டி எச்சரிக்கும் .  அதையும் மீறி அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் போது தான் தாக்கவே ஆரம்பிக்கும் .

கிங் கோப்ராவின் விஷம் சக்தி வாய்ந்த NEURO TOXIN வகையை சார்ந்தது . இது ஒரு முறை கடிக்கும் போது   500 மில்லி கிராம் விசத்தை உடம்பில் செலுத்தி விடும் . இதனுடைய விஷம் 11 மனிதர்கள் அல்லது ஒரு பெரிய யானையை கொல்லும் அளவிற்கு ஆபத்தானது .

2 . INLAND TAIPAN .

நிலத்தில் வாழக்கூடிய மிகக் கொடிய நஞ்சுள்ள பாம்பு தான் இந்த INLAND TAIPAN . இது ஆஸ்திரேலியாவில் தான் அதிகமாக காணப்படுகிறது . இந்தப் பாம்பின் விஷம் கிங் கோப்ராவின் விஷத்தை விட 50 மடங்கு அதிக நச்சுத்தன்மை வாய்ந்தது என்று சொல்லப்படுகிறது .

இது கடிக்கும் போது மூன்றில் ஒரு பங்கு விஷத்தை உடலில் செலுத்தும் . ஆனால் இதன் ஒரு மில்லி கிராம் விஷம் 100 மனிதர்களையோ அல்லது 25,000 எலிகளையோ கொள்ளும் திறன் கொண்டது .

INLAND TAIPAN கடித்து சரியாக 20 நிமிடத்திற்குள் சிகிச்சை எடுக்கவில்லை என்றால் இதயம் செயலிழந்து இறந்து விடுவார்களாம் .

1. BELCHER SEA SNAKE .

இந்த உலகில் வாழக்கூடிய எல்லா விஷப்பாம்புகளை விடவும் அதிக விஷத்தன்மை வாய்ந்த பாம்பு இனம் தான் இந்த BELCHER SEA SNAKE .

இந்தப் பாம்பின் ஒரு துளி விஷம் 1800 மனிதர்களை கொல்லும் அளவிற்கு பயங்கரமானது. இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் இது ஒரு கடல் பாம்பு .

இந்த வகை பாம்புகள் இந்திய பெருங்கடலில் தான் அதிகம் காணப்படுகின்றன . ஒருவேளை  இந்தப் பாம்பு யாரையாவது கடித்தால் 30 நிமிடத்திலேயே நிலை குலைந்து இறந்து விடுவார்களாம் .



இது போன்ற  பதிவுகளை காண நம்முடைய BLOG - ஐ பின்தொடருங்கள் .




 நன்றி வணக்கம்



கருத்துரையிடுக

thankyou for reading the post ... visit again for more information

புதியது பழையவை