சங்கிலையின் மருத்துவ பயன்கள்


சங்கிலை  நாம் மறந்து கொண்டிருக்கக் கூடிய ஒரு மிக முக்கியமான மருத்துவப் பொருள். இந்த சங்கிலை சர்வ விஷங்களையும் வியாதிகளையும் நீக்கும் தன்மை கொண்டது. 

சங்கிலை காடுமேடு, மலை, பள்ளங்கள் புதர்கள் போன்ற இடங்களில் வளரக்கூடியது. இதன் இலையின் நுனி மிகவும் கூர்மையாக இருக்கும் அதேபோல் இந்தச் செடியில் இலைகளும் முட்களும் சேர்ந்தே இருக்கும். 


ஆக்சிஜன் பற்றாக்குறை , சுவாச கோளாறு போன்ற பிரச்சனை இருப்பவர்கள் சங்கிலை, மிளகு,  திப்பிலி இந்த மூன்றையும் ஒரு ஸ்பூன் அளவு என சமமாக எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டு காய்ச்ச வேண்டும் அந்த தண்ணீர் 200 மில்லி அளவு  வந்தவுடன் அதை ஆற வைத்து பருகி வந்தால் பிரச்சனைகள் தீரும். நுரையீரலும் வலிமை பெறும். 

இரண்டு கையளவு சங்கிலையை பறித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்து வந்தால் சொறி சிரங்கு போன்ற தோல் நோய்கள் சீக்கிரமாக நீங்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க சங்கிலை மிகவும் உதவுகிறது. சங்கிலியை பறித்து நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து அதை தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை பெறும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

சங்கிலையுடன் அரை ஸ்பூன் அளவு சீரகம் சேர்த்து அரைத்து. 3 முதல் 5 கிராம்  எடுத்து காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் இரத்தம் தூய்மையாகும். 

சங்கஞ் செடியின் வேர்ப்பட்டையை காய வைத்து பொடி செய்து 3 கிராம் அளவு எடுத்து தண்ணீருடன் கலந்து காலை மாலை என தொடர்ந்து 21 நாட்கள் குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும் .

எனவே சங்கிலையை இவ்வாறாக பயன்படுத்தி ஆரோக்கியத்தை மேம்படுத்துவோம்.



                நன்றி வணக்கம்


2 கருத்துகள்

thankyou for reading the post ... visit again for more information

புதியது பழையவை