தலைமுடியை வெட்டினால் வலிப்பதில்லை ! ஆனால் பிடித்து இழுத்தால் மட்டும் வலிக்கிறதே ஏன் ?


● முடி மற்றும் நகம் இந்த இரண்டுமே கெராட்டின் (KERATIN) என்று சொல்லப்படக்கூடிய கெட்டியான புரதத்தினால் ஆனது. 

● மேலும் முடி மற்றும் நகம் இவை இரண்டுமே உருமாற்றம் பெற்ற தோல் தான்.


● நம்முடைய தலைமீதுள்ள தோலின் கீழே முடியின் வேர் இருக்கும், இங்குள்ள செல்கள் எல்லாமே தனித்தனியாக பிரிந்து பெருகி தோலின் வழியே வெளியே தள்ளப்படும். 

● அப்படி தள்ளப்படும் போது தலை முடியாக உருமாற்றம் செய்யப்பட்டு வெளியே வருகிறது.

● அப்படி வெளியே தள்ளப்பட்டு மேலே  வரும்போது  தலைமுடியில்  இருக்கக்கூடிய செல்கள் இறந்து போய் விடும் . ஆனால் தோலின் கீழ் இருக்கும் முடியின் வேர் பகுதியில் உள்ள செல்களுக்கு உயிர் இருக்கும்.

● நாம் வெட்டும் தலைமுடிகள் அனைத்துமே இறந்துபோன செல்களால் ஆனது. அதனால் தான் நாம் முடியை வெட்டும்போது வலிப்பதில்லை. 

 ● ஆனால் முடியை பிடித்து இழுக்கும் போதோ அல்லது தலைசீவும் போது முடி சிக்கிக் கொண்டாலோ அதிகமாக வலிக்கும் அதற்கு காரணம் , முடியை இழுக்கும் போது வேர்ப்பகுதையும் சேர்த்து இழுக்கப்படுகிறது . 

● அந்த வேர் பகுதியில் இருக்கக்கூடிய முடி செல்களுக்கு உயிர் இருப்பதால் நம்மால் வலியை உணர முடிகிறது.


நன்றி வணக்கம்




கருத்துரையிடுக

thankyou for reading the post ... visit again for more information

புதியது பழையவை