நம்முடைய வீட்டில் பணவரவு இல்லை , மன நிம்மதி இல்லை , ஒரு பிரச்சனை போனால் இன்னொரு பிரச்சனை வருகிறது , வீண் வம்பு வழக்கு ஏற்படுகிறது, குழந்தைகளுக்குள் ஒற்றுமை இன்மை, தொழிலில் முன்னேற்றம் இன்மை. போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் நம்முடைய வீட்டில் குலதெய்வம் மற்றும் இதர தெய்வங்கள் இல்லாதது தான் .
நாம் யாரிடம் குறி கேட்டாலும் சரி , ஜோதிடம் பார்த்தாலும் சரி. அவர்கள் கூறும் ஒரே பதில் உங்களுடைய வீட்டிற்கு உள்ளே கடவுள் வரவில்லை என்பதாகத் தான் இருக்கும் .
வீட்டில் தெய்வ சக்தியை அதிகரிக்க முடியுமா இதற்கு தீர்வு உண்டா ? என்று கேட்டால் நிச்சயமாக தீர்வுண்டு. வீட்டில் தெய்வ சக்தியை அதிகரிக்க நாம் சில மாற்றங்கள் மற்றும் சில விஷயங்களைச் செய்தாலே போதும் தெய்வ சக்தி மேலோங்கும் .
இந்தப் பதிவில் வீட்டில் தெய்வ சக்தியை அதிகரிக்க நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான விஷயங்களைப் பற்றிப் பார்க்கலாம்.
1. தெய்வீக மந்திரங்கள் சொல்ல வேண்டும் .
Good vibration மற்றும் Bad vibration என இரண்டு வகைகள் உள்ளன. நாம் ஒரு கல்லை சிற்பமாக வடித்து அதற்கு சக்தி வாய்ந்த மந்திரங்கள் ,ஸ்லோகங்களை சொல்லி உருவேற்றிய பிறகு தான் அதில் தெய்வம் குடியிருக்கும் என்பது உண்மை.
அதுபோல தான் நம்முடைய இல்லத்தில் தெய்வம் குடியேற வேண்டுமென்றால் நம்முடைய இல்லத்தில் தினமும் மங்கள இசை, மந்திரங்கள், ஸ்லோகங்கள், காலை எழுந்ததும் சுப்ரபாதம் , கந்த சஷ்டி கவசம், சிவபுராணம் , ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம், ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் . போன்றவற்றை பாடவேண்டும் .
எனக்கு தெய்வீக மந்திரங்கள் அவ்வளவாகத் தெரியாது என்றால் ஒரு பிரச்சனையும் இல்லை. காலை மற்றும் மாலையில் விளக்கேற்றி தெய்வப்பாடல்கள் , மற்றும் மந்திரங்களை வீட்டில் ஒலிக்க செய்தால் போதும் . வீட்டில் ( Good Vibration ) தெய்வீக சக்தி ஏற்படும் .
2 . வீட்டில் நறுமணம் வீச வேண்டும் .
ஒருவர் நம்முடைய வீட்டிற்கு வந்தால் அவர்களை முதலில் ஈர்ப்பது நல்ல நறுமணம் தான் . அதன் பிறகு தான் வீட்டின் அலங்காரங்கள் மற்றும் பொருள்களை பார்ப்பார்கள் . இவ்வளவு ஏன் நம்முடைய வீட்டிற்கு யாராவது விருந்தாளிகள் வந்தால் நாம் வாங்கக்கூடிய முதல் பொருள் Room Spray தான்.
அது போல தான் தெய்வம் வீட்டிற்குள் வர வேண்டுமென்றால் நாம் முக்கியமாக செய்ய வேண்டிய ஒன்று நம்முடைய வீட்டில் தினமும் சாம்பிராணி போட்டு வீட்டை நறுமணம் மிக்கதாக வைத்துக்கொள்ள வேண்டும் .
சாம்பிராணி புகையை தினமும் வீடு முழுவதும் காட்டுவதால் எதிர்மறை சக்திகள் அனைத்தும் நீங்கும். வீட்டில் மன நிம்மதி கிடைக்கும் , தெய்வ சக்தி அதிகரிக்கும்.
3. தீபமேற்றி வழிபட வேண்டும் .
ஒளி இருக்கும் இடத்தில் இருள் நீங்கும் . இறைவன் ஒளியில் இருக்கிறார் என்பது ஐதீகம் . அதேபோல காற்றும் சூரிய ஒளியும் புகும் வீட்டில் காலன் வர பயப்படுவான் என்று ஒரு பழமொழியும் உண்டு . நாம் தினமும் காலை மாலை என விளக்கேற்றி வழிபட்டு வந்தால் நம்மை சூழ்ந்துள்ள தீய விஷயங்கள் யாவும் மறையும் .
தினமும் மாலை 6 மணிக்கு மேல் அதாவது சூரியன் அஸ்தமனம் ஆன பின்பு. வாசலில் மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்கை கொண்டு தீபம் ஏற்றி வீட்டிற்கு வெளியேயும் பூஜை அறையிலும் வைத்து வழிபட்டு வந்தால் இறைவன் நம் வீடு தேடி வருவார் .
வீட்டிலுள்ள ஜன்னல்களை எப்போதும் அடைத்து வைக்காமல் சிறிது நேரமாவது திறந்து வைத்து அனைத்து அறையிலும் சூரிய ஒளியை வரவிடுங்கள் . அப்படி சூரிய ஒளி உள்ளே புகும்போது தூர் தேவதைகள் வராது .
தினமும் விளக்கேற்ற வேண்டுமா ? என்று கேட்டால் கண்டிப்பாக விளக்கேற்றி தான் ஆக வேண்டும். ஏனென்றால் தினமும் எந்த வீட்டில் விளக்கேற்றி வழிபடுகிறோமோ அந்த வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்வாள் .
4. நெய்வேத்தியம் மற்றும் மணியோசை ஒலிக்க வேண்டும் .
தினமும் நெய்வேத்தியம் செய்து மணியோசை ஒலிக்க செய்து வழிபட்டால் நம்முடைய வீட்டிலுள்ள துர் கிரியைகள், துர் தேவதைகள் யாவும் பயந்து வெளியேறும் . வீட்டிற்குள் அண்டாது.
நெய்வேத்தியம் என்றால் பெரிதாக யோசிக்க தேவையில்லை. வாழைப் பழம், கற்கண்டு , எச்சில் படாமல் வடித்த சாதம் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதைவைத்து இறைவனிடம் வழிபட்டு நீர் விலகிய பின்பு. மணி ஓசை ஒலிக்க செய்ய வேண்டும் . மணியோசை ஒலிக்கும்போது வீட்டினுள் தெய்வ சக்தி அதிகரிக்கும் . மன நிம்மதி பிறக்கும்.
5. வீட்டின் நிலை வாசலை கவனிக்க வேண்டும் .
புதிதாக வீடு கட்டுவோர் முதலில் நிலை வாசல் தான் வைப்பார்கள். அதற்கு காரணம் நம்முடைய வீடு மற்றும் வாழ்க்கை நிலைக்க வேண்டும் என்பதற்காக தான் . பொதுவாக நல்ல சக்தியாக இருந்தாலும் சரி , தீய சக்தியாக இருந்தாலும் சரி வீட்டின் நிலையைத் தாண்டி தான் உள்ளே வர முடியும் அல்லவா ?
நம்முடைய வீடு செழிப்படைய வேண்டுமென்றால் குலதெய்வத்தின் அனுகிரகம் கிடைக்க வேண்டும் . நம் குலத்தை பாதுகாக்கும் குலதய்வம் நின்று காவல் காக்க கூடிய இடம் வீட்டின் நிலை வாசல் முன் தான் .
ஆகையால் நிலைவாசலை அடிக்கடி நன்றாகத் துடைத்து சுத்தம் செய்து மஞ்சளை தண்ணீர் விட்டுக் குழப்பி குங்குமம் வைக்க வேண்டும் . அதன்பிறகு மாவிலைத் தோரணம் கட்ட வேண்டும் . பிறகு பூஜை அறையில் ஊதுபத்தி காட்டுவது போல தினமும் நிலை கதவு முன்பும் ஊதுபத்தி, சாம்பிராணி காட்டி வழிபட வேண்டும் . அப்படி வழிபடுவது மிகவும் சிறந்தது.
வீட்டின் நிலையில் மாவிலைத் தோரணம் கட்டுவது கூடுதல் சிறப்பு. மாவிலைத் தோரணம் கிடைக்கவில்லையென்றால் வேப்பிலை தோரணம் கூட கட்டலாம் . ஆனால் அலங்காரத்திற்காக செய்யப்பட்ட பிளாஸ்டிக் மாவிலைத் தோரணத்தை வீட்டின் முன் கட்ட வேண்டாம் அது பயன் அளிக்காது .
6. தீய சொற்கள் பேசாதீர்கள் .
நம்முடைய வீட்டில் தெய்வம் குடியேற வேண்டும் என்றால் இவற்றை மட்டும் செய்தால் பத்தாது . நம்முடைய எண்ணங்களும் நம்முடைய மனதும் தூய்மையாக இருக்க வேண்டும் . குறிப்பாக வீட்டினுள் தீய சொற்களை பேசாதீர்கள்.
இவற்றையெல்லாம் பின்பற்றினால் தெய்வம் நம்முடைய வீட்டில் நிச்சயம் வாசம் செய்வார் . தெய்வ சக்தியும் வீட்டில் அதிகரிக்கும் என்பதில் எந்த ஒரு ஐயமும் கிடையாது .
நன்றி வணக்கம்