இந்த பதிவில் மூளையில் உள்ள கழிவுகளை சுத்தம் செய்வது எப்படி என்பதைப் பற்றி விவரமாகப் பார்க்கலாம் .
மனிதனுடைய நரம்பு மண்டலத்தில் மிகவும் முதன்மையானதும் , மனித உறுப்புகளில் மிகவும் சிக்கலானதும் மூளை தான் .
மூளையின் அமைப்பானது மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன . அவை முன்மூளை, நடுமூளை மற்றும் பின்மூளை ஆகும் .
நம்முடைய நினைவாற்றல் , ஆளுமைத் திறன் , அறிவாற்றல் , நடவடிக்கைகள் என எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்துவது மூளையின் வேலை . மூளையின் கழிவுகள் சேரும் போது நம்முடைய அன்றாட நடவடிக்கைகள் மற்றும் உடலில் பல விதமான மாற்றங்கள் ஏற்படும் .
மூளை கழிவுகளை வெளிக்காட்டும் அறிகுறிகள்.
மூளையில் கழிவுகள் சேரும் போது பல விதமான அறிகுறிகளை வெளிக்காட்டும் அவை ,
1. சோம்பல் அதிகரிக்கும் .
2. தினமும் காலை முதல் இரவு வரை சுறுசுறுப்பு உணர்வு இல்லாமல் உடல் மந்த நிலையிலேயே இருக்கும்.
3. அடிக்கடி ஞாபகமறதி ஏற்படுதல் .
4. தூக்கமின்மை .
5. அடிக்கடி தலைவலி ஏற்படுதல் .
இவை அனைத்தும் மூளையில் கழிவு சேர்ந்துள்ளன என்பதை வெளிக்காட்டும் அறிகுறிகளாகும் .
இன்றைய காலகட்டத்தில் 6 வயதிலிருந்து 60 வயது உள்ளவர்கள் அனைவருக்கும் ( BRAIN FOG ) என்று சொல்லக்கூடிய மூளை கழிவுகள் ஏற்படுகிறது . இதைத் தடுப்பதற்காக தான் ( BRAIN DETOX ) செய்ய வேண்டும் .
மூளை கழிவுகளை வெளியேற்றும் வழிமுறைகள் .
1. இயற்கையோடு ஒன்றி இருக்க வேண்டும் .
கணினி மயமான இவ்வுலகில் நேரம் கிடைக்கும்போதெல்லாம் இயற்கையோடு ஒன்றி வாழ வேண்டும் .
உதாரணமாக பூங்காவிற்கு சென்று அங்குள்ள விஷயங்களை பார்த்து மகிழுங்கள் இதனால் உங்களுக்கு மன அழுத்தம் குறையும் .கிராமங்களில் கிணறு, ஆறு , குளங்கள் இருந்தால் அங்கு இருப்பவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து மனமகிழ்ச்சியுடன் மீன் பிடிப்பது , குளத்தில் கிணற்றில் குளிப்பது போன்ற விஷயங்களை செய்து மகிழ்வார்கள் அல்லவா ? அவர்களுக்கு மனச்சோர்வு , உடல் சோர்வு , மூளை கழிவு சேர்தல் போன்ற பிரச்சனைகள் மிகுதியாக ஏற்படாது .
ஆனால் நகர்ப்புறங்களில் இருப்பவர்களால் அது முடியாது எப்பொழுதும் கணினி முன் வேலை பார்த்து பார்த்து மன அழுத்தத்திற்கு உள்ளாகும் நிலைமை ஏற்படுவது தான் மிச்சம்.
அதனால் வேலை முடிந்ததும் வீடு , பிறகு சாப்பாடு ,அதன்பிறகு தூக்கம் என்று வாழ்க்கை ஒழுங்கு முறையற்று போய்கொண்டிருக்கிறது. இதுதான் நிதர்சனமான உண்மை .
இதனால் மூளை சற்று அதிகமாகவே சோர்வடையும். இப்படி வேலை பார்ப்பவர்கள் விடுமுறை நாட்களில் இயற்கை சூழல் நிறைந்த இடத்திற்கு சென்று வாருங்கள். அங்கும் சென்று கைபேசி , மற்றும் இதர மின்சாதனங்கள் போன்றவற்றை பயன்படுத்தாதீர்கள்.
நாம் கிடைக்கும் நேரங்களில் இயற்கையோடு ஒன்றி இருந்தாலே நம்முடைய மூளை சீராக இயங்கத் துவங்கும் மன நிலையும் மாறும் . இப்படி செய்தால் மூளையில் கழிவுகள் வெளியேறும் என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர் .
2. உங்களுக்காக தினமும் 20 நிமிடம் .
அனுதினமும் நீங்கள் உங்களுக்காக ஒரு இருபது நிமிடம் ஒதுக்குங்கள். அந்த இருபது நிமிடம் தெய்வவழிபாடு செய்யுங்கள்.
தெய்வ நம்பிக்கையற்றவர்கள் உங்களுக்கு பிடித்த விஷயங்கள் ஏதாவது செய்யுங்கள் உதாரணமாக புத்தகம் படித்தல், படம் வரைதல், விளையாட்டு என தினமும் 20 நிமிடம் ஒதுக்கினால் உங்களுடைய மூளை மனநிம்மதியும் புத்துணர்வும் அடையும் .
மேலும் வாரம் ஒரு முறை ஒரு வேளையாவது ஃபாஸ்டிங் ( உண்ணாவிரதம் ) இருங்கள்.
3. முறையான தூக்கம் .
தினமும் 7 முதல் 8 மணி நேரம் தூக்கம் மிகவும் அவசியம். முறையான தூக்கம் நம்முடைய மூளையை சுறுசுறுப்பாக இயங்கச் செய்யும் , மூளையில் உள்ள கழிவுகளை சுத்தப்படுத்தும் . அதைப்போல தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு எந்தவித மின் சாதனங்களையும் பயன்படுத்தாமல் இருங்கள் .
4 . சாப்பிட வேண்டிய உணவுகள் .
அடிக்கடி தக்காளி , ஆரஞ்சு, எலுமிச்சம்பழம் , பச்சைக் காய்கறிகள், சர்க்கரைவள்ளிக்கழங்கு , மஞ்சள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள் . இவை மூளையில் உள்ள கழிவுகளை போக்கி மூளையை ஆற்றலுடன் இயங்கச்செய்யும் .
5. தவிர்க்க வேண்டிய உணவுகள் .
வெள்ளை சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகள் ஆகியவற்றை முடிந்த அளவுக்கு தவிர்த்தல் வேண்டும். மேலும் தூங்குவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்புவரை காபி , டீ போன்றவற்றை குடிக்காமல் தவிர்ப்பது மிகவும் நல்லது .
அதைப்போல இரவு நேரங்களில் மிகக் குறைவான அளவே சாப்பிட வேண்டும் .
மது அருந்தும் பழக்கம் உடையவர்கள் தூங்குவதற்கு முன்பு மது அருந்த வேண்டாம் இது மூளையை பழுதடைய செய்யும் .
6. உடற்பயிற்சி .
மூளையில் உள்ள கழிவுகளை நீக்க மிகச்சிறந்த மற்றும் எளிமையான வழி தினமும் காலையில் உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை செய்வதாகும் .
தினமும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் நம் உடலுக்கு தேவையான அளவு ஆக்சிஜன் கிடைத்து மூளையில் உள்ள செல்களை புத்துணர்வுடன் இருக்கும். இரத்த ஓட்டமும் சீராகும். இதன் மூலம் மூளையில் உள்ள கழிவுகள் அனைத்தும் நீங்கும் . உடற்பயிற்சி செய்ய முடியாதவர்கள் தினமும் 20 நிமிடம் நடைப்பயிற்சி செய்யுங்கள்.
இந்த ஆறு வழிமுறைகளையும் பின்பற்றி மூளையில் உள்ள கழிவுகளை வெளியேற்றி நலமுடன் வாழ்வோம் .
இதுபோன்ற ஆரோக்கிய பதிவுகளை காண நம்முடைய BLOG - ஐ பின்தொடருங்கள் .
நன்றி வணக்கம்