இந்த பதிவில் ஆரோக்கியம் சம்பந்தமான ஒரு சில குறிப்புகளை பற்றி பார்க்கலாம் .
1. விஷக்கடியால் பாதிக்கப்பட்டவர்கள் சிறியாநங்கை சூரணத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விஷக்கடி நீங்கும் உடல் மினுமினுப்பு பெறும் . சிறியாநங்கை இலைகளை தண்ணீர் விட்டு அரைத்து ஒரு சிறிய பாக்கு அளவு எடுத்து பாலில் கலந்து காலை வேலையில் குடித்து வந்தால் உடல் வலிமை பெறும் .
2. கை கால் எரிச்சல் , பல் சம்பந்தமான நோய்கள், மலச்சிக்கல் , வாய்ப்புண் போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் கடுக்காய் பொடியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும் . கடுக்காய் பொடியை தண்ணீரில் கலந்து காலை அல்லது மாலை நேரங்களில் குடித்து வந்தால் ஆண்களுக்கு உயிரணு குறைபாடுகள் நீங்கும் .
3. பித்தத்தையும் கபத்தையும் குறைக்கும் தன்மை ஏலக்காய்க்கு உண்டு ஏலக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இந்த பிரச்சனைகள் நீங்கும். வாரம் மூன்று முறை ஏலக்காயை நன்றாக மென்று அந்த சாறை விழுங்கி அதன்பின் வாய் கொப்பளித்து வந்தால் பல்வலி, ஈறுகளில் ஏற்படக்கூடிய வீக்கம் ஆகியவற்றை குறைக்கும் .
4. உடல் சூடு மற்றும் உடல் வீக்கம் உள்ளவர்கள் மிளகு தக்காளி இலையை வதக்கி சாப்பிட்டு வந்தால் குணமாகும் . மூட்டு வலி மூட்டு பகுதியில் ஏற்படும் வீக்கம் ஆகியவற்றை குறைக்க மணத்தக்காளி இலையை வதக்கி ஒத்தடம் கொடுத்து வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும் .
5. வாடாத பன்னீர் ரோஜா மலரின் இதழ்களை சுத்தம் செய்து சிறிதளவு எடுத்து காலை மற்றும் மாலை என சாப்பிட்டு வந்தால் சீதபேதி , வயிற்றுக் கடுப்பு ஆகியவை குணமாகும் . ரோஜா இதழ்களை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வந்தால் பித்த நீர் வெளியேறும் இதய ஆரோக்கியம் மேம்படும் .
6. பொன்னாங்கண்ணி கீரையை தொடர்ந்து உணவில் சேர்த்து கொண்டால் மூலநோய் குணமாகும், கண்ணுக்கு குளிர்ச்சி உண்டாகும், உடல் சூடு குறையும் .
7. உடலில் அரிப்பு சிறு புண்கள் ஏற்பட்டால் கீழாநெல்லி இலையை எடுத்து அரைத்து உடம்பில் தேய்த்து குளித்து வந்தால் சீக்கிரம் குணமாகும் .
8. அடிக்கடி வயிற்று எரிச்சல் பிரச்சனை உள்ளவர்கள் முள்ளங்கியை உணவில் சேர்த்து கொண்டால் நல்ல தீர்வு கிடைக்கும் .
9. கிராம்பு மற்றும் சித்தரத்தை இந்த இரண்டையும் சிறிதளவு எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்துவந்தால் காய்ச்சல் குணமாகும் .
10. குப்பைமேனி இலைகளை நன்றாக அரைத்து நெஞ்சில் பூசி வர சளித்தொல்லை நீங்கும் . மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் குப்பைமேனி இலையை பிழிந்து 20 மில்லி சாறெடுத்து அத்துடன் சிறிதளவு உப்பு சேர்த்து குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும் .
11. கொள்ளு பருப்பை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் கண்வலி, சிறுநீரகக்கற்கள் , இதயம் சம்பந்தப்பட்ட நோய் , மூச்சுக்கழாய் நோய் போன்றவை நாளடைவில் நீங்கும் . மேலும் கொள்ளு பருப்பை வேக வைத்த தண்ணீரை குடித்து வந்தால் வயிற்றில் உள்ள கொழுப்புக்கள் குறையும் பெண்களுக்கு மாதாந்திர ஒழுங்கை சரிப்படுத்தும் .
12 . கோவைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் தாய்மார்களுக்கு அதிகமாக பால் சுரக்கும், மேலும் கோவக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் ரத்த சர்க்கரை அளவை குறைக்கும் .
13. ஆவாரம் பூவை தண்ணீரில் ஊற்றி கொதிக்க வைத்து அதை வடிகட்டி குடித்துவந்தால் நீர்கடுப்பு , குடற்புண் போன்றவை நீங்கும். மேலும் இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு மிகச்சிறந்த மருந்து. இது இரத்தத்தை சுத்தப்படுத்தும் . உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வியர்வை மூலம் வெளியேற்றும் .
14 . சீரகத்தை தண்ணீரில் போட்டுக் கொதிக்கவைத்து தினமும் குடித்து வந்தால் தொண்டை எரிச்சல் , அல்சர் போன்ற பிரச்சினைகள் தீரும் . மேலும் வயிறு உப்புசம் உள்ளவர்கள் சீரகம் மற்றும் ஏலக்காய் இந்த இரண்டையும் சமபங்கு எடுத்து அரைத்து பொடி செய்து உணவிற்குப்பின்
அரை ஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் வயிறு உப்புசம் பிரச்சனை நீங்கும் .
15. மிளகை பொடி செய்து மோரில் கலந்து குடித்து வந்தால் வயிற்றுப்போக்கு பிரச்சனை நீங்கும். மிளகை பொடி செய்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டத்தில் தடை ஏற்படாது. இதயத் தமனிகளில் இருக்கும் அடைப்புகளையும் நீக்கும் .
16. தினமும் வெறும் வயிற்றில் சிறிதளவு சோம்பை மென்று அதன் சாறை முழுங்கினால் ஜீரண சக்தி அதிகரிக்கும். மேலும் இது இரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பை கட்டுப்படுத்த உதவும் .
17. வறட்டு இருமல் பிரச்சனைகள் நீங்க அதிமதுரம் , வால்மிளகு , சித்தரத்தை இம்மூன்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து தண்ணீரில் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீர் நன்றாக சுண்டி வந்த பின் வடிகட்டி காலை மற்றும் மாலை என இரண்டு வேளையும் ஆறவைத்து குடித்து வந்தால் வறட்டு இருமல் பிரச்சனை நீங்கும் .
இதுபோன்ற ஆரோக்கிய பதிவுகளை காண நம்முடைய BLOG - ஐ பின்தொடருங்கள் .
நன்றி வணக்கம்