இந்த பதிவில் கல்லீரலில் நச்சுத்தன்மை அதிகரித்துள்ளது என்பதை வெளிக்காட்டக் கூடிய அறிகுறிகள் மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்தை பாதுகாக்க நாம் எந்தெந்த உணவுகளை சாப்பிட வேண்டும் ? எந்தெந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் ? அதேபோல கல்லீரலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற கூடிய ஆயுர்வேத வழி முறைகளைப் பற்றி விவரமாகப் பார்க்கலாம் .
நம்முடைய உடம்பில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றும் உறுப்புதான் கல்லீரல். இது உடலில் உள்ள நச்சுக்களை கழிவுகளாக மாற்றி வியர்வையின் மூலமாகவும் , சிறுநீர் மற்றும் மலத்தின் மூலமாகவும் வெளியேற்றுகிறது .
ஒருவேளை கல்லீரல் தன்னுடைய வேலைகளை சரியாக செய்யவில்லை என்றால் நச்சுப்பொருட்கள் உடம்பில் அதிகமாக தேங்கி HEMOCHROMATOSIS ( தேங்குவது ) , HEPATITIS A,B,C , கல்லீரல் கொழுப்பு நோய் மற்றும் கல்லீரல் புற்றுநோய் போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் .
சரி கல்லீரல் தன்னுடைய வேலையை சரியாக செய்யவில்லை என்று நமக்கு எப்படித் தெரியும் என்று யோசிக்கிறீர்களா ?
அதாவது, கல்லீரல் தான் நம்முடைய உடம்பில் நீ கடினமாக உழைக்கக் கூடிய உறுப்பு இது ஒரு நாளைக்கு சராசரியாக 500 வேலைகளை செய்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா ?
ஒருவேளை கல்லீரலில் ஏதாவது பிரச்சினைகள் இருந்தால் நம்முடைய உடம்பு ஏராளமான அறிகுறிகளை வெளிக்காட்டும் உதாரணமாக சொல்ல வேண்டுமென்றால், முகத்தில் திடீரென்று கரும்புள்ளிகள் மற்றும் இளநரை வருகிறது என்றால் கல்லீரலில் வெப்பம் அதிகமாக உள்ளது என்று அர்த்தம் .
அடுத்ததாக கல்லீரலில் மிக முக்கியமான வேலைகளில் ஒன்று உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை உடைத்து வெளியேற்றுவது தான் .
கல்லீரலில் பிரச்சனைகள் ஏற்படும்போது இந்த வேலையை சரியாக செய்ய முடியாமல் போய்விடும் . அதனால் திடீரென்று உடல் எடை அதிகரிக்கலாம் அல்லது திடீரென்று உடல் எடை குறையலாம் இந்தப் பிரச்சினைகள் இருந்தாலும் கல்லீரலிலை சுத்தம் செய்ய வேண்டும் என்று அர்த்தம் .
கல்லீரல்தான் இரும்புச் சத்துக்களை சேர்த்து வைக்கக் கூடிய உறுப்பு நம்முடைய உடலில் இரும்பு சத்து குறைபாடு இருந்தால் ANEMIA என்று சொல்லக்கூடிய ரத்த சோகை பிரச்சனை ஏற்படும் . யாருக்காவது இரத்தசோகை பிரச்சனைகள் இருந்தால் கல்லீரலின் ஆரோக்கியத்தை கவனிக்க வேண்டியது அவசியம் .
அதேபோல நாள்பட்ட சோர்வு , அடிக்கடி வாய்துர்நாற்றம் , முகம் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாக இருப்பது, மஞ்சள்காமாலை அடர்மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறுவது, பசியின்மை , கை கால்களில் வீக்கம், சரும அரிப்பு , வெளிர் அல்லது ஆரஞ்சு நிறத்தில் மலம் வெளியேறுவது . இது எல்லாமே கல்லீரல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்பதை வெளிக்காட்டக் கூடிய அறிகுறிகளாகும் .
கல்லீரலில் நச்சுக்கள் சேருவதற்கான காரணங்கள் .
சரி இதெல்லாம் கல்லீரலில் நச்சுக்கள் அதிகரிப்பதால் தானே வருகிறது ஆனால் கல்லீரலில் ஏன் நச்சுக்கள் சேருகிறது அதற்கு என்ன காரணம் என்று யோசிக்கிறீர்களா ?
கல்லீரலுக்கு பொதுவாக சகிப்புத் தன்மை சற்று அதிகம் உள்ள உறுப்பு தான் இது 40% பாதிக்கப்பட்டால் கூட அதை தானாகவே சரிசெய்து கொள்ளும் .
ஆனால் அதுக்கு மேலே பாதிக்கப்படும் போது தான் தன்னுடைய சகிப்பு திறனை இழந்துவிடும் . இதற்கு முக்கியமான காரணம் காற்றுமாசு , சுகாதாரமற்ற தண்ணீர் குடிப்பது , குறிப்பாக குடிப்பழக்கம் மற்றும் புகையிலைப் பழக்கம், சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய் பயன்படுத்துவது, பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் துரித உணவு சாப்பிடுவது, சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை உணவுகள் சாப்பிடுவது, அதிகமான கொழுப்பு சத்து நிறைந்த உணவுகள் சாப்பிடுவது, அதிகமாக கோபம் மற்றும் மன அழுத்தமாக இருப்பது.
இதெல்லாம் கல்லீரலில் நச்சுத்தன்மை அதிகரிப்பது மற்றும் கல்லீரலின் திறனை பாதிக்கக்கூடிய காரணிகளாகும் .
பொதுவாக கல்லீரல் இரவு நேரத்தில் நாம் தூங்கும் போது தான் நச்சுக்களை வெளியேற்ற கூடிய வேலையை செய்ய ஆரம்பிக்கும் நாம் அடிக்கடி இரவு நேரங்களில் துங்காமல் வெகுநேரம் முழித்துக்கண்டு இருந்தால் கல்லீரல் பாதிப்படையும் .
கல்லீரல் நச்சுக்களை வெளியேற்றும் வழி முறைகள் .
1. கரும்புச்சாறு .
தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் நிறைய கரும்பு சாறை 15 நாளைக்கு தொடர்ந்து குடித்து வரவேண்டும் .
ஏனென்றால் கல்லீரலைப் பலப்படுத்தக்கூடிய ஒரு மிகச்சிறந்த உணவு கரும்புச் சாறு. இவ்வளவு ஏன் பெரும்பாலான மருத்துவர்கள் கூட மஞ்சள்காமாலை வருபவர்களுக்கு கரும்புச்சாறு குடிக்க சொல்லி தான் அறிவுறுத்துவார்கள்.
ஏனென்றால் இதில் இருக்கக்கூடிய ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் கல்லீரலை பாதுகாப்பது மட்டும் அல்லாமல் பிலிருபின் அளவையும் சீராக வைத்துக் கொள்ள உதவும் .
2. பிருங்கராஜா மூலிகை .
பிருங்கராஜ மூலிகை தலைமுடிக்கு மட்டுமல்லாமல் கல்லீரலுக்கும் மிகச் சிறந்த மருந்து . நம்முடைய நாட்டு மருந்து கடைகளில் பிருங்கராஜ் மூலிகை SYRUP கிடைக்கிறது . இந்தச் SYRUP - ஐ ஒரு டீ ஸ்பூன் எடுத்து தண்ணீரில் கலந்து மதிய உணவிற்கு 30 நிமிடத்திற்கு முன்பு குடித்து வந்தால் கல்லீரலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும் .
3. கடுகுரோகிணி .
கல்லீரலைப் பலப்படுத்தக்கூடிய மிகச் சிறந்த மூலிகை கடுகுரோகிணி. இது எல்லா நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது. அரை டீஸ்பூன் கடுகு ரோகிணி பொடியை கொஞ்சமாக தேன் கலந்து காலை சாப்பாட்டிற்கு 30 நிமிடத்திற்கு முன் சாப்பிட்டு வந்தால் கல்லீரல் நச்சுக்கள் வெளியேறும் . குறிப்பாக இதில் எந்தவித பக்கவிளைவுகளும் கிடையாது .
இந்த மூன்று வழிமுறைகளில் உங்களால் எதைப் பின்பற்ற முடிகிறதோ அதை பின்பற்றினால் நல்ல பலன் கிடைக்கும் .
அதுமட்டுமில்லாமல் கல்லீரலை பாதுகாக்கும் உணவுகளான மஞ்சள், வெந்தயம் , இஞ்சி, பனைவெல்லம் திராட்சை , பேரிக்காய் , எலுமிச்சை நெல்லிக்காய் , கீரைகள் , நவதானியங்கள் ஆகியவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளுங்கள் .
மேலும் பீட்ரூட் மற்றும் கேரட் ஜூஸை வாரம் இரண்டு முறை 100 மில்லி அளவு தண்ணீர் கலந்து குடிக்கலாம் .
இந்த வழிமுறைகளைப் பின்பற்றினால் கல்லீரல் பாதுகாப்பாக இருக்கும் .
இதுபோன்ற ஆரோக்கிய பதிவுகளை காண நம்முடைய BLOG - ஐ பின்தொடருங்கள் .
நன்றி வணக்கம்