நாம் எல்லோருக்கும் ஆரோக்கியமாகவும் , அதேசமயம் இளமையுடனும் வாழ வேண்டும் என்று ஒரு ஆசை இருக்கும் . இது நியாயமான ஆசை தானே !
ஆனால் இன்றைக்கு இருக்கக்கூடிய வாழ்வியல் முறை, உணவு பழக்கவழக்கம் , போதிய உடல் உழைப்பின்மை போன்ற பல காரணங்களால் இந்த ஆசையெல்லாம் நிராசையாகி விடுகிறது என்பது தான் உண்மை .
சரி இதெல்லாம் தாண்டி நாம் எப்படியாவது ஆரோக்கியமாகவும், இளமையாகவும் வாழ வழி இருக்கிறதா என்று கேட்டால் நிச்சயமாக வழி இருக்கிறது .
அது என்ன வழி தெரியுமா ! பாரம்பரிய மருந்தான திரிபலா சூரணத்தை சாப்பிடுவது தான் .
கடுக்காய் - 1 பங்கு
தான்றிக்காய் - 2 பங்கு
நெல்லிக்காய் - 3 பங்கு .
இந்த மூன்று பொருட்களும் சேர்ந்த ஒரு கலவை தான் திரிபலா சூரணம் . இது எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கிறது .
திரிபலா சூரணம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன ?
1. திரிபலா சூரணத்தை கோடைக்காலங்களில் சாதாரண தண்ணீருடனும், குளிர்கலத்தில் தேனுடனும், மழைக்காலத்தில் வெந்நீருடனும் கலந்து இரவு நேரங்களில் சாப்பிட வேண்டும் . இப்படி தினமும் சாப்பிட்டால் நம்முடைய உடலில் உள்ள இரத்த ஓட்டம் சீராகும் .
அத்தோடு இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் . இதனால் இரத்தசோகை பிரச்சனைகள் தடுக்கப்படுகிறது. மேலும் இது இரத்தத்தை சுத்தம் செய்வதுமட்டுமில்லாமல் சரும பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது . மேலும் சருமம் பளபளப்புத் தன்மையும் அடையும் .
2. DIABETES ( நீரிழிவு நோய் ) பிரச்சனை உள்ளவர்கள் இரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க திரிபலா சூரணத்தை தொடர்ந்து சாப்பிடலாம் . இது கணையத்தின் வேலையை சீராக்கி இன்சுலின் சுரப்பை அதிகரிக்க செய்யும் . மேலும் இது உடலில் குளுகோஸின் அளவை சமநிலையில் வைத்துக்கொள்ள உதவுகிறது .
3. அடிக்கடி செரிமான கோளாறு உள்ளவர்களுக்கு குடல் சம்பந்தமான பிரச்சனைகள் இருக்கலாம். இந்த பிரச்சனை உள்ளவர்கள் தொடர்ந்து திரிபலா சூரணத்தை சாப்பிட்டு வந்தால் உணவுப்பாதை மற்றும் குடலியக்கத்தை சீராக செயல்பட வைப்பது மட்டுமல்லாமல் செரிமானப் பிரச்சனைகளையும் போக்கும் .
4. திரிபலா சூரணத்தில் சற்று கசப்பு தன்மை அதிகம் . இரத்தத்தில் சர்க்கரை அளவை எப்போதும் கட்டுக்குள் வைத்துக்கொள்ளவும் , இரத்தக் கொதிப்பை சீராக்கவும் 5 கிராம் திரிபலா சூரணத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து அதை சிறிது நேரம் கழித்து வெதுவதுப்பாக குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
5. அதிகமான கெட்ட கொழுப்புகள் சேர்வதால் உடல் எடை அதிகரிக்கிறது . எடையை எந்தவித பக்க விளைவும் இல்லாமல் குறைக்க வேண்டுமென்று நினைப்பவர்கள் திரிபலா சூரணத்தை தொடர்ந்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும் .
இதை வாரம் மூன்று முறை இரவில் தூங்கப் போவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பு தண்ணீரில் கலந்து குடித்தால் உடலில் கொழுப்பை உண்டாக்கும் அடிபோஸ் செல்களோடு போராடி கொலஸ்ட்ராலின் அளவை சேரவிடாமல் தடுக்கும் .
6. உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை சீராக்கும் தன்மை திரிபலாசூரணத்திற்குண்டு . அடிக்கடி இந்த சூரணத்தை சாப்பிட்டு வந்தால் வளர்சிதை மாற்றத்தால் ஏற்படக்கூடிய கண்பார்வை கோளாறுகள் , தலைவலி பிரச்சனை போன்ற பல பிரச்சனைகள் தீரும் .
திரிபலா சூரணத்தை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது ?
1. கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் இந்த திரிபலா சூரணத்தை சாப்பிடக்கூடாது . மேலும் 10 வயதிற்கு கீழே உள்ள குழந்தைகள் இதை தவிர்ப்பது நல்லது .
2. ஒரு சில முக்கியமான நோய்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை நீங்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் இந்த சூரணத்தை மருத்துவரின் ஆலோசனை பெற்ற பின்பு இதை பயன்படுத்துங்கள் . இல்லையென்றால் பயன்படுத்த வேண்டாம் . காரணம் நீங்கள் ஏற்கனவே எடுத்துக்கொண்டிருக்கும் மருந்துகளின் நடவடிக்கைகளில் இந்த திரிபலா சூரணம் தலையிட வாய்ப்புள்ளது . அதனால் மருத்துவர் ஆலோசனை பெற்ற பின்பு பயன்படுத்துங்கள் .
3. திரிபலா சூரணம் ஒரு மிகச்சிறந்த மலமிளக்கி என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை . ஆனால் தினமும் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால் வயிற்றுப் போக்கு மற்றும் வயிற்று கடுப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும் .
திரிபலா சூரணத்தை பயன்படுத்தும் முறை .
இப்போது திரிபலா சூரணத்தை பயன்படுத்தும் முறை மற்றும் அதன் அளவைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
திரிபலாவை வெறும் வயிற்றிலோ அல்லது தூங்கப் போவதற்கு முன்போ அரை தேக்கரண்டி அளவு எடுத்து சாதாரணமான தண்ணீர் ,வெந்நீர் அல்லது தேன் கலந்து குடிக்கலாம் .
இந்தத் திரிபலா சூரணத்தை தினசரி இரண்டு தேக்கரண்டி அளவை விட அதிகமாக பயன்படுத்தக்கூடாது .
திரிபலா சூரணத்தை தினமும் பயன்படுத்தாமல் ஒருநாள் விட்டு ஒரு நாள் அல்லது வாரம் மூன்றுமுறை என்று அளவாக பயன்படுத்தினால் உங்கள் ஆரோக்கியம் அதிகரிக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
இந்த வழிமுறைகளை பின்பற்றினாலே நலமுடன் வாழலாம் .
இதுபோன்ற ஆரோக்கிய பதிவுகளை காண நம்முடைய BLOG - ஐ பின்தொடருங்கள் .
நன்றி வணக்கம்