வணக்கம் நண்பர்களே !
இந்த மீனின் உடலமைப்பு பார்ப்பதற்கு பெட்டி மாதிரியே இருப்பதால் இதற்கு பெட்டி மீன் என்று பெயர் வந்தது . இது சராசரியாக 25cm முதல் 60cm நீளம் வரைக்கும் வளரக்கூடியது . இது பாறை மற்றும் பவளப்பாறை இருக்கும் இடங்களில் தான் அதிகமாக உயிர்வாழும்.
இந்தப் பதிவில் மனிதர்களை சாகடிக்கக் கூடிய மிகவும் ஆபத்தான கொலைகார மீன்களை பற்றி பார்க்கலாம் .
1. CANDIRU ( காட்டேரி மீன் )
இந்த மீன் பார்ப்பதற்கு 1 இன்ச் நீளத்தில் மிகவும் சிறியதாக இருக்கும் . ஆனால் கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல் இது செய்யும் வேலை மிகவும் பயங்கரமானது .
இந்த காட்டேரி மீன் தண்ணீரில் இருக்கும் போது நம்மால் அவற்றை பார்க்க முடியாது .இந்த மீன் இருக்கும் இடத்தில் குளிப்பது மிகவும் தவறு . ஏனென்றால் இது நம்முடைய உடலில் அட்டையைப் போல் ஒட்டிக் கொண்டு இரத்தத்தை கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சி குடித்து விடும் .
அதுமட்டுமில்லாமல் இது சில நேரங்களில் மனிதர்களுடைய சிறுநீர் குழாய்க்குள் சென்றுவிடும் .அப்படி ஒருவேளை உள்ளே சென்று விட்டால் அது கொஞ்சம் கொஞ்சமாக நீந்தி சிறுநீர்ப்பைக்குள் சென்று அங்கே முட்டையிட்டு குஞ்சு பொரித்து வாழ ஆரம்பித்து விடும்.
அதற்கு உணவாக நம்முடைய மியூக்கஸ் மெம்பரைனையும் இரத்தத்தையும் எடுத்துக் கொள்ளும். இப்படி இது சாப்பிட ஆரம்பித்தால் மனிதர்கள் உயிரோடு இருப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு . இதை அவ்வளவு சீக்கிரமாக அறுவை சிகிச்சை செய்தும் வெளியேற்ற முடியாது .
2. BOX FISH ( பெட்டி மீன் )
இந்த மீனின் உடலமைப்பு பார்ப்பதற்கு பெட்டி மாதிரியே இருப்பதால் இதற்கு பெட்டி மீன் என்று பெயர் வந்தது . இது சராசரியாக 25cm முதல் 60cm நீளம் வரைக்கும் வளரக்கூடியது . இது பாறை மற்றும் பவளப்பாறை இருக்கும் இடங்களில் தான் அதிகமாக உயிர்வாழும்.
இது மனிதர்களை அவ்வளவு சீக்கிரம் தாக்காது . ஆனால் யாராவது இதை தொந்தரவு செய்வது போல் இது உணர்ந்தால் இது தன்னுடைய உடம்பிலிருந்து OSTRACITOXIN என்ற விஷத்தை வெளிவிடும் . அந்த விஷயத்தை தெரியாமல் மனிதர்கள் தொட்டால் அது நம்முடைய சிவப்பணுக்களை பாதிப்படைய செய்யும் .
இதற்கு சரியான நேரத்தில் சிகிச்சை மேற்கொள்ளவில்லை என்றால் உயிர் போவதற்கு அதிக வாய்ப்புள்ளது .
3. GREAT WHITE SHARK ( பெரிய வெள்ளை சுறா )
ஆபத்தான மீன்களைப் பற்றிப் பேசும்போது சுறா மீன்கள் இடம்பெறாமல் இருக்கும் ! அதிலும் இந்த கிரேட் ஒயிட் சாரக் மிகவும் மோசமானது .
இதற்கு சராசரியாக 300 பற்கள் இருக்கும் . அதேபோல இதனுடைய உடல் எடை கிட்டத்தட்ட 200 கிலோ கிராம் ஆகும் . இது கடலில் ஒரு சொட்டு இரத்தம் சிந்தினாலும் ஒரு கிலோமீட்டர் முன்பிருந்தே மோப்பம் பிடித்து இறை எங்குள்ளது என்பதை கண்டுபிடித்து விடும் .
இந்த சுறாக்களிடம் நாம் மாட்டினால் இது ஆக்ரோஷமாக தாக்கும். இந்த சுறா 300 பற்களை வைத்து கடித்தால் உயிர் தப்புவது மிகவும் சிரமம் .
4. PUFFER FISH ( கோள மீன் )
உலகின் விஷத்தன்மை வாய்ந்த மீன்களில் மிகவும் மோசமான மீன் தான் இந்த PUFFER FISH . இதனுடைய விஷம் சையனைடை விட 1200 மடங்கு வீரியமானது . இந்த மீனை யாராவது பிடிக்க நினைத்தாலோ அல்லது இது பக்கத்தில் சென்றாலோ இது தன்னுடைய உடலை பெறியதாக பந்து போல மாற்றிக் கொண்டு தன்னுடைய உடம்பிலிருந்து விஷத்தை வெளியேற்றும் .
இதனுடைய விஷம் ஒரே நேரத்தில் 30 மனிதர்களை கொல்லும் அளவு வீரியமானது .
5. ELECTRIC EEL ( மின் விலாங்கு மீன் )
இந்த மீன்கள் பெரும்பாலும் தென்னாப்பிரிக்காவின் சதுப்பு நிலங்களிலும் , அமேசான் காடுகளிலும் தான் அதிகமாக காணப்படுகிறது . இந்த மீன் சராசரியாக 2.7 மீட்டர் நீளமும் 22 கிலோகிராம் எடை வரைக்கும் வளரக்கூடியது .
இந்த மீன்கள் வேட்டையாடுவதற்காகவும் , தன்னை மற்ற உயிரினங்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காகவும் தன்னுடைய உடம்பிலிருந்து மின்சாரத்தை வெளியேற்றும் . ஒரு மனிதன் நிலைகுலைந்து கீழே விழுவதற்கு 110 வோல்ட் மின்சாரமே போதுமானது .
ஒருவேளை மனிதர்கள் யாராவது இதனிடம் மாட்டிக் கொண்டால் இது சராசரியாக 330 லிருந்து 650 வோல்ட் மின்சாரத்தை செலுத்தும் .110 வோல்டையே நம்மால் தாங்கிக் கொள்ள முடியாத போது 650 வோல்டை செலுத்தினால் உயிர்பிழைப்பதற்கு எந்த ஒரு வாய்ப்பும் இருக்காது .
6. PIRANHA ( பிரானா )
இந்த மீன்களைப் பற்றி சொல்லி தான் தெரிய வேண்டும் என்பதில்லை நிறைய திரைப்படங்களில் பார்த்திருப்போம் . இவற்றிற்கு சராசரியாக 20 பற்கள் கத்தி போன்று கூர்மையாக இருக்கும் . ஒவ்வொரு பற்களும் நான்கு மில்லி மீட்டர் (4 mm) நீளம் வரைக்கும் வளரக்கூடியது .
இந்த மீன் கடிக்கும் போது தன்னுடைய உடல் எடையை விட 20 முதல் 30 மடங்கு அதிவேகமான வலிமை கொடுத்து கடிக்கும் . இதனுடைய கடிக்கும் திறன் 70 PSI வரை இருக்குமாம் . இந்த மீனிடம் நாம் மாட்டிக் கொண்டால் இது மிகவும் வெறித்தனமாக தாக்கி ஆளையே காலி செய்து விடும் .
7 . STONE FISH ( கல் மீன் )
இது கடலின் ஆழமான பகுதிகளில் கல்லோடு கல்லாக பார்ப்பதற்கு கல் மாதிரியே இருப்பதால் இதற்கு கல் மீன் ( STONE FISH ) என்று பெயர் வந்தது .
இது ஒருவரை தாக்கும்போது தான் இது கல் அல்ல மீன் என்று தெரியும். இதன் தோல் பகுதியில் பிளேடு போன்ற சின்ன சின்ன அமைப்புகள் இருக்கும் அதே மாதிரி இதனுடைய வால் பகுதியும் மிகக் கூர்மையாக இருக்கும் .
இது மற்ற உயிரினங்களிடமிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக வால் பகுதியில் இருந்து விஷத்தை வெளியேற்றும் இதன் விஷம் நம்மேல் பட்டு சரியாக ஒரு மணி நேரத்தில் சிகிச்சை எடுத்தால் தான் உயிர் பிழைக்க முடியும் . இல்லையென்றால் இந்த விஷம் உடம்பில் சீக்கிரமாக பரவி பக்கவாதம் , இதய செயலிழப்பு மற்றும் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் .
8 . LION FISH ( சிங்க மீன் )
இந்த மீன் பார்ப்பதற்கு மிகவும் வித்தியாசமாகவும் அழகாகவும் இருக்கும் ஆனால் ஆபத்தானதும் கூட . இந்த மீனில் சராசரியாக 18 விஷ முட்கள் இருக்கும் . மனிதர்கள் இதைத் தொட நேர்ந்தாலோ அல்லது திடீரென இது நம்மை தாக்கினாலோ இதன் விஷம் ஏற்படத்தக் கூடிய வலி ஒரு வாரம் வரைக்கும் தாங்கிக் கொள்ள முடியாதவாரு இருக்கும் .
சரியான நேரத்தில் சிகிச்சை எடுக்கவில்லை என்றால் நிலைமை மிகவும் மோசமாகிவிடும் என்று சொல்லப்படுகிறது . இந்த மீன்கள் பசிபிக் பெருங்கடலில் தான் அதிகமாக வாழ்கிறது .
9. MORAY EEL ( அஞ்சாலை மீன் )
இந்த உலகம் முழுக்க சராசரியாக 200 வகையான மோரே ஈல் இனங்கள் உள்ளன . இது சராசரியாக 3 மீட்டர் நீளமும் 30 கிலோ கிராம் எடை வரைக்கும் வளரக்கூடியது . இந்த மீன்களுக்கு பற்கள் மிகவும் கூர்மையானதாக இருக்கும்.
ஒருவேளை இது யாரையாவது கடித்தால் அந்த இடத்திலிருந்து சதைப்பகுதி அப்படியே துண்டாக வந்து விடுமாம் . மேலும் கடித்தது மட்டுமல்லாமல் தன்னுடைய உடம்பிலிருந்து ஒரு விதமான விஷத்தையும் மனிதர்களின் உடலில் செலுத்தி விடுமாம். அதனால் நமக்கு நிறைய பக்கவிளைவுகளும் , பாதிப்புகளும் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது .
இதுபோன்ற பதிவுகளை காண நம்முடைய BLOG - ஐ பின்தொடருங்கள் .
நன்றி வணக்கம்