அதிலும் 69% பேர், காலை , இரவு என ஒரு நாளைக்கு இரண்டு முறை ப்ரஸ் பண்ணுகிறார்கள். இன்றைய காலகட்டத்தில் பற்கூச்சம், ஈறுகளில் வலி , சொத்தைப்பல் , பற்களுக்கு வெண்மை, ஹெர்பல் பிளேவர் என பல காரணங்களுக்காக பல விதமான பேஸ்ட்கள் சந்தையில் விற்பனைக்கு உள்ளன.
ஒரு நாளைக்கு இரண்டு முறை ப்ரஸ் பண்ணினாலும் பல் சம்பந்தமான பிரச்சனைகள் நமக்கு வராமல் இருக்கிறதா ? என்று கேட்டால் , நிச்சயமாக இல்லை என்பது தான் பலரின் பதிலாக இருக்கும் .
நாம் பயன்படுத்தக்கூடிய பேஸ்ட் நம்முடைய பற்களை பாதுகாக்கும் என்று நம்புகிறோம் . ஆனால் அவற்றுள் சில டூத்பேஸ்டுகளில், உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய சில முக்கிய உயிர்க் கொல்லிகளும் கலக்கப்படுகிறது என்று நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் .
இந்த பதிவில் எது போன்ற வேதிப் பொருள்கள் அடங்கிய பேஸ்டுகளைப் பயன்படுத்தக் கூடாது என்பதைப் பற்றி விவரமாக பார்க்கலாம்.
1. FLURIDE (ஃபுளுரைடு).
பெரும்பாலான டூத் பேஸ்டுகளில் ஃபுளூரைடு கலந்திருக்கும். ஃபுளூரைடு அதிகமாக கலந்திருக்கும் டூத் பேஸ்டை பயன்படுத்தினால், பற்களின் எனாமல் கரைந்து விடுவது மட்டுமல்லாமல் , நாளடைவில் பற்களின் நிறமும் மங்கிவிடும்.
2. SODIUM LAURYL SULPHATE ( சோடியம் லாரில் சல்பேட் )
இந்த சோடியம் லாரியல் சல்பேட் என்பது டிடர்ஜென்ட் - இல் . தரையை சுத்தம் செய்ய பயன்படும் ஒரு வேதிப்பொருள். ஆனால் இது டூத் பேஸ்டில் நுரை வருவதற்காக சேர்க்கப்படுகிறது . இதனால் நாக்கில் வெள்ளை நிறத்தில் புள்ளிகள் உண்டாகக்கூடும்.
3. PROPALIN GLYCOL ( ப்ரோபலின் க்ளைக்கால் ).
இந்தப் ப்ரோபலின் க்ளைக்கால் என்பது , டூத்பேஸ்ட் உறைந்து போகாமல் இருப்பதற்காக பயன்படுத்தப்படுவது. பொதுவாக இது காஸ்மெட்டிக்ஸ் மற்றும் அழகுசாதன பொருட்களுக்கு மென்மை உணர்வை தருவதற்காக பயன்படுத்தப்படுகிறது. இதை டூத் பேஸ்டில் பயன்படுத்துவதால் நரம்பு மண்டலம் ,கல்லீரல், இதயம் ஆகியவை பாதிப்புக்குள்ளாகும்.
4. TRICLOSON ( ட்ரைக்குலோசன் ).
பாக்டீரியா தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக டிரைக்ளோசன் என்ற வேதிப்பொருள் பற்பசையில் கலக்கப்படுகிறது. அமெரிக்க சுகாதார நிறுவனம் டிரைக்ளோசன் கலந்த சோப், பாடிவாஸ், டூத்பேஸ்ட் ஆகியவற்றை உபயோகிக்க தடைவிதித்துள்ளது. ஆனால் நம் நாட்டில் பிரபலமான டூத்பேஸ்ட் நிறுவனம் இன்றளவிலும் டிரைக்ளோசனைப் பயன்படுத்திக் கொண்டே தான் இருக்கிறது. இதனால் நம் உடலில் நோய்எதிர்ப்புத்திறன் பாதிப்படையும்,தைராய்டு ஹார்மோன் சுரப்பு குறையும்.
5. ARTIFICIAL COLORS (செயற்கை நிறமிகள்).
பெரும்பாலும் செயற்கை நிறமிகள் மற்றும் இனிப்பு சுவை அதிகமுள்ள பேஸ்ட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்த நிறமிகள் பெரும்பாலும் நிலக்கரி கழிவுகளிலிருந்து பிரித்தெடக்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக மஞ்சள் நிற டூத் பேஸ்ட்களை சுத்தமாக பயன்படுத்தக்கூடாது. காரணம் இந்த நிறத்தில் உள்ள கெமிக்கல் நமக்கு ஒற்றைத் தலைவலி , இரத்த அழுத்தம் , கேன்சர் ஆகியவற்றை உண்டு பண்ணும்.
● மேலே சொன்ன அனைத்து வேதிப் பொருட்களும் ஏதாவது ஒரு பற்பசையில் கலந்து கொண்டே தான் இருக்கிறது.
● சரி , இப்படியே சொன்னால் எந்த மாதிரியான பேஸ்டுகளை தான் வாங்கி யூஸ் பண்ணுவது என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம் . ஆதாவது மூலிகை, உப்பு, லவங்கப்பட்டை, வேம்பு போன்றவைகளால் தயாரிக்கப்பட்ட பேஸ்ட்களை பயன்படுத்துங்கள். அதுவும் மிகக் குறைந்த அளவில் பயன்படுத்துங்கள் . காரணம் அதில் கலந்து இருப்பதும் கெமிக்கல்ஸ் தான் இருந்தாலும் கொஞ்சம் தாக்கம் குறையும் .
● அதை தவிர்த்து நாம் செய்ய வேண்டியது என்னவெனில் ,
தினமும் இலவங்க எண்ணெய் , தேங்காய் எண்ணெய் , புதினா எண்ணெய் நல்லெண்ணெய் , இது போன்ற எண்ணெய்களை வாங்கி தினமும் இரவில் தூங்குவதற்கு முன் அரை மணி நேரத்திற்கு முன்பு OIL PULLING செய்யுங்கள் (வாயை கொப்பளியுங்கள்) . இதை தொடர்ந்து செய்தால் பற்கள் மற்றும் ஈறுகள் ஆரோக்கியமாக இருக்கும்.
● முடிந்தளவு இயற்கை அங்காடிகளில் கிடைக்கக்கூடிய பல்பொடிகளை வாங்கி பயன்படுத்துங்கள். இது பற்களை மட்டுமல்லாமல் நம் உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.
நன்றி வணக்கம்