ஆண்கள் உடலளவில் வலிமையானவர்கள் என்றால் பெண்கள் மனதளவில் வலிமையானவர்கள் என்பதை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும் .
இப்போது பெண்களைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை பற்றி பார்க்கலாம்..
1. பல கோடி பெண்கள் இவ்வுலகில் இருந்தாலும் , மொத்த பெண்களில் வெறும் 2% பெண்கள் தான் தங்களை தாங்களே அழகு என்று சொல்லிக் கொள்கிறார்கள் என்று ஒரு ஆய்வு கூறுகிறது.
2. வழக்கமாக லிப்ஸ்டிக் பயன்படுத்தும் பெண்கள் விடுமுறை மற்றும் வீட்டில் இருக்கும் நாட்களை தவிர, வருடத்திற்கு சராசரியாக 260 நாட்கள் பயன்படுத்துவார்களாம். அதுமட்டுமல்லாமல் லிப்ஸ்டிக் பயன்படுத்தும் பெண்கள் தங்களை அறியாமலேயே வருடத்திற்கு 450 கிராம் உதட்டு சாயத்தை சாப்பிடுகிறார்களாம் .
3. பெண்கள் வருடத்திற்கு சராசரியாக 30 முதல் 64 முறை கண்ணீர் விட்டு அழுகிறார்கள். ஆண்கள் வருடத்திற்கு சராசரியாக 6 முதல் 17 முறை அழுகிறார்களாம் .
4. சாதாரணமாகவே பெண்களுக்கு உற்று நோக்கும் திறன் சற்று அதிகம். மேலும் வாசனை மற்றும் சுவை உணர்வும் மிக அதிகமாகவே இருக்குமாம் . அதுமட்டுமல்லாமல் ஆண்களை விட பெண்களால் 20% அதிக நிறங்களைக் காண முடியும். சிறு நிற வேறுபாடு உடைய ஆடைகளை கூட அவர்களால் எளிமையாக கண்டுபிடித்து விட முடியுமாம் .
5. பெண்கள் சற்று அதிகமாக பேசுபவர்கள் என்று நாம் எல்லோருக்கும் தெரியும். அப்படிப் பெண்கள் ஒரு நாளைக்கு சுமார் 20,000 வார்த்தைகளைப் பேசுகிறார்களாம் ஆனால் ஆண்கள் வெறும் 7000 வார்த்தைகள் வரை மட்டும் தான் பேசுகிறார்கள் .
6. சராசரியாக பெண்கள் தினமும் ஒரு நாளைக்கு ஒன்பது முறையாவது தனது தோற்றம் எப்படி இருக்கிறது என்று கண்ணாடியில் பார்த்து சரி செய்து கொள்வார்களாம் .
7. பெண்கள் சராசரியாக ஒரு நிமிடத்திற்கு 19 முறை கண்ணிமைக்கிறார்கள் . ஆண்கள் சராசரியாக ஒரு நிமிடத்திற்கு 11 முறை தான் கண்ணிமைக்கிறார்கள் .
8. பெண்கள் ஜவுளி கடைக்கு சென்றால் அவ்வளவு எளிதில் திரும்பி வர மாட்டார்கள் என்பது உலகறிந்ததே . அப்படிப் பெண்கள் தங்கள் ஆடைகளை தேர்வு செய்வதில் தங்களுடைய வாழ்நாளில் ஒரு வருடம் காலத்தை செலவழிக்கிறார்கள்.
9. இதுவரை ஒரு பெண் ஒரே பிரசவத்தில் அதிகபட்சமாக 69 குழந்தைகளை 1782 - ம் ஆண்டு பெற்றெடுத்துள்ளார். இவர் Feodor Vassilvev என்பவரின் முதல் மனைவி . Feodor Vassilyev - ன் இரண்டாவது மனைவிக்கு ஒரே பிரசவத்தில் 18 குழந்தைகள் பிறந்துள்ளது . மொத்தம் இவருக்கு 87 குழந்தைகள் .
10. ஆண்களின் இதயத்துடிப்பை விட பெண்களின் இதயத்துடிப்பு சற்று அதிகமாக இருக்கும்.
11. ரஷ்யாவில் ஆண்களை விட 10 மில்லியன் பெண்கள் அதிகமாக இருக்கிறார்களாம் .
மேலும் பெண்களைப் பற்றி நான் குறிப்பிடாத சுவாரஸ்யமான தகவல்கள் உங்களுக்கு தெரிந்தால் மறக்காமல் கமெண்ட் செய்யுங்கள்.
நன்றி வணக்கம்