வணக்கம் நண்பர்களே இன்று ஆரோக்கியத்தை மேம்படுத்த கூடிய ஒரு 5 குறிப்புகளைப் பற்றி ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்..
1. ஆண்மை பெருக .
ஆண்மையை அதிகரிக்க தூதுவளை ஒரு மிகச் சிறந்த மருந்தாக செயல்படுகிறது. தூதுவளையின் வேர்ப்பகுதி, தண்டு , இலை ஆகிய அனைத்தையும் அரைத்து சாறெடுத்து அதை வடிகட்டி வெதுவெதுப்பான பாலில் கலந்து இரவு நேரங்களில் குடித்து வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.
2. இதய ஆரோக்கியம் மேம்பட.
கிராமபுறங்களில் கொடியாக படர்ந்திருக்கும் கோவைக்கொடியை உங்களில் எத்தனை பேர் பார்த்துள்ளீர்கள் ? . இதன் காய் ,பழம் மற்றும் இலை அனைத்தும் மருத்துவ குணங்கள் கொண்டது. இந்த கோவை இலையை பரித்து , வதக்கியோ அல்லது கூட்டாகவோ செய்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இருதயம் வலிமை பெறும். அடிக்கடி உணவில் கோவை காயையும் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது. முடிந்தால் கோவை பழத்தையும் சாப்பிட்டு பாருங்கள்.
3. உடல் சோர்வு நீங்க.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் 50 மில்லி அளவு அருகம்புல் சாறு எடுத்து குடித்து வந்தால் உடல் சோர்வு, இரத்த சோகை , சித்த பிரம்மை , கை கால் வலி போன்ற பிரச்சனைகள் நீங்கும்.
4. முழங்கால் வீக்கம் குறைய.
தினமும் நாட்டு வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி முழங்கால் வலி போன்ற பிரச்சனகள்
படிப்படியாக சரியாகும்.
5. வாய் துர்நாற்றம் நீங்க.
வாய் துர்நாற்றம் ஏற்படும்போது ஒரு ஏலக்காயை நன்றாக மென்று பிறகு வாயை கொப்பளியுங்கள் இப்படி செய்தால் வாய் துர்நாற்றம் நீங்கும். மேலும் வாய் புண் மற்றும் வாய் துர்நாற்றம் இருந்தால் பொன்னாங்கண்ணிக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிடலாம் . நல்ல பலன் கிடைக்கும்.
நன்றி வணக்கம்