● சமீப காலமாகவே, ஆரோக்கியத்திற்காக மட்டுமல்லாமல் அழகை மேம்படுத்துவதற்காக பீட்ரூட்டை ஜூஸ் செய்து குடிக்கும் பழக்கம் மக்கள் மத்தியில் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
● பீட்ரூட் ஒரு மிகச்சிறந்த மருத்துவ நன்மைகளை கொண்டுள்ளது என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை . ஆனால் தினமும் பீட்ரூட் ஜூஸ் குடித்தால் ஒரு சில பக்க விளைவுகளை நாம் சந்திக்க வேண்டியது இருக்கும்.
● தினமும் பீட்ரூட் ஜூஸ் குடித்தால் ஏற்படும் பக்க விளைவுகளைப் பற்றி விவரமாகப் பார்க்கலாம்.
1. கால்சியம் குறைவு.
பீட்ரூட் ஜூஸை தொடர்ந்து குடிக்கும் போது உடலில் கால்சியம் சத்து குறைந்து பற்கள் மற்றும் எலும்புகள் பலவீனமாகும் . இதன் விளைவாக எலும்பு தேய்மானம் போன்ற பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம்.
2. வயிற்றுப்போக்கு.
பீட்ரூட்டை உணவில் அதிகமாக சேர்த்துக் கொண்டால் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம் என்று ஒரு சிலர் சொல்லிக் கேட்டிருப்போம் இது உண்மைதான். ஆனால் இதை ஜூஸ் செய்து தினமும் குடித்தால் வயிற்றுப்போக்கு சம்பந்தமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
3. கல்லீரல் பாதிப்பு .
பீட்ரூட் ஜூஸை தினமும் குடிக்கும் போது நம் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறாமல் கல்லீரலில் தேங்கி விடும். பிறகு படிப்படியாக கல்லீரலின் செயல்பாடு குறைந்து பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.
4. கர்ப்பகால பிரச்சனைகள் .
பெண்கள் கர்ப்ப காலத்தில் , தாங்கள் சாப்பிடும் உணவில் அதிகமாக கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியம். கர்ப்பகால பெண்கள் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. காரணம் பீட்ரூட்டில் பீட்டனின் (BETANIN) என்னும் மூலப்பொருள் உள்ளது இது உடலுக்கு பல விதமான தீங்குகளை விளைவிக்கும்.
5. இரத்த அழுத்தம் .
பீட்ரூட் பொதுவாக இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க உதவும் என்பது நிறைய பேருக்கு தெரியாத உண்மை. இது ஒரு நல்ல விஷயம் தான். ஆனால் உயர் இரத்தம் அழுத்தம் உள்ளவர்களுக்கு நல்லது. குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு ஆபத்தானது, காரணம் இது இரத்த அழுத்தத்தை மேலும் குறைக்கும்.
6. வாந்தி , காய்ச்சல், அரிப்பு .
சகிப்புத்திறன் குறைவாக உள்ளவர்கள் இந்த ஜூஸை குடிக்க வேண்டாம். தொடர்ந்து இந்த பீட்ரூட் ஜூஸை குடிக்கும் போது உடல் பலவீனம், குமட்டல், வாந்தி, காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாக ஆய்வு ஒன்றில் சொல்லப்படுகிறது . மேலும் காய்ச்சலை போலவே ஒரு சிலருக்கு அரிப்பு ஏற்படுவதாகவும் சொல்லப்படுகிறது.
குறிப்பு :
• கல்லீரல் பாதிப்பு , இரத்த அழுத்த பிரச்சனை , சிறுநீரக கோளாறு உள்ளவர்கள் இந்த ஜூஸை தினமும் தொடர்ந்து குடிக்க வேண்டாம் .
நன்றி வணக்கம்