ஆளி விதைகள் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்


ஆளி விதைகள் ( FLAX SEEDS ) பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை. இந்த ஆளிவிதையானது அதிக சத்துக்களை கொண்ட விதையாகும்.



இது எகிப்தில் நெபர்டிடி இராணியின் காலத்திலிருந்தே அதாவது கிபி 13ஆம் நூற்றாண்டிலேயே பயன்படுத்தப்பட்டு வந்ததாக தொல்பொருள் ஆதாரங்கள் கூறுகின்றன.

இப்போது இந்த ஆளி விதையில் அடங்கியிருக்கக்கூடிய சத்துக்கள் மற்றும் இதை தொடர்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றியும் விவரமாக பார்க்கலாம்.

1. சீரான உடல் சூடு .

ஆளி விதைகள்  நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்கும் தன்மை கொண்டது . மேலும் இது உடலுக்குத் தேவையான வெப்பத்தை கொடுத்து உடலை எப்போதும் சீரான வைப்பதோடு வைத்திருக்க உதவும் .

2. புற்றுநோய் வராமல் தடுக்கும் .

இதில் உள்ள பைட்டோ கெமிக்கல் ( PHYTOCHEMICALS ) ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளைப் போல செயல்பட்டு புற்றுநோயின் தாக்கத்தை எதிர்த்துப் போராடும் . மேலும் இதிலுள்ள லிக்னன்கள் உடலில் உள்ள  ஹார்மோன்களின் சுரப்பை சீராக வைத்திருக்கும். இது புரோஸ்டேட் மற்றும் குடல் புற்றுநோய் அபாயத்தை குறைக்க உதவுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

3. சிறுநீரக ஆரோக்கியம் .

ஆளி விதைகளை சாப்பிட்டால் சிறுநீரகங்களில் ஏற்படும் அலர்ஜியை குறைத்து சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். மேலும் இந்த விதைகளில் நார்ச்சத்து , புரோட்டின் , வைட்டமின்கள், மெக்னீசியம், இரும்பு, பொட்டாசியம் முதலானவை கணிசமான அளவில் இருப்பதால் சருமம், எலும்பு, நரம்புகள்,  இரத்த சிவப்பணுக்கள்,  கண்கள் என ஒட்டுமொத்த  உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் .

4. கருப்பை செயலிழப்பை குறைக்கும் .

ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனை உள்ளவர்கள் மற்றும் மாதவிடாய் நின்ற பெண்கள் தொடர்ச்சியாக இந்த ஆளி விதைகளை உட்கொண்டு வந்தால் கருப்பை செயலிழப்பு ஏற்படுவதை குறைத்து கருப்பையை ஆரோக்கியமாக வைத்திருக்கும் .

5. உடல் ஆற்றல் அதிகரிக்கும்.

இரண்டு தேக்கரண்டி ஆளி விதைகளில் நம் உடலுக்குத் தேவையான அளவு ஒமேகா- 3 என்று சொல்லப்படும் நல்ல கொழுப்பு அமிலங்கள் உள்ளன . அதாவது சால்மன் மற்றும் சூரை மீன்களில் உள்ள அளவு ஒமேகா-3 அமிலம் இந்த ஆளி விதைகளும் உண்டு. ஆகையால் மீன் சாப்பிடாதவர்கள் இந்த ஆளி விதைகளை சாப்பிட்டால் போதும்.  மீனில் உள்ள சத்துக்களை இந்த விதையின் மூலமே நாம் பெறலாம்.  இது உடலுக்கு போதிய அளவு ஆற்றலைக் கொடுக்கும்.

6. மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கும் .

பொதுவாக நம் உடலில் நல்ல கொழுப்புகள் மற்றும் கெட்ட கொழுப்புகள் என இரண்டு வகையான கொழுப்புகள் உள்ளன. இந்த நல்ல கொழுப்பானது உடலில் தங்கி இருக்கக்கூடிய கெட்ட கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. ஆளி விதைகளை தொடர்ந்து சாப்பிடும்போது இதிலுள்ள ஒமேகா-3 ( OMEGA -3 ) இதயத் தமனிகளில் இருக்கக்கடிய கெட்ட கொழுப்பு  கரைத்து இரத்த ஓட்டத்தை சீராக்கும். இதய நோய் மற்றும்  மாரடைப்பு வராமலும்  தடுக்கும். 


குறிப்பு :

● ஆளி விதைகளை வறுத்து பொடி செய்து சப்பாத்தி , தோசை மாவில் சேர்த்து கொள்ளலாம்.  அல்லது மில்க் ஷேக் , ஜூஸ் என அனைத்திலும் சேர்த்து பயன்படுத்தலாம்.

● கர்ப்ப காலத்தின் ஆரம்ப காலகட்டத்தில் இதை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் . இல்லையென்றால் இனப்பெருக்க அமைப்பின் வளர்ச்சியை இது பாதிக்கும் . ஆகையால் கர்ப்பிணி பெண்கள் , எட்டு வயதிற்கு கீழ் உள்ள  குழந்தைகள் இதை சாப்பிட வேண்டாம் .

● ஆளி விதையை சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்கள் தண்ணீரில் ஊற வைத்தோ அல்லது வறுத்து பொடி செய்தோ சாப்பிடுங்கள். 

● இதில் நிறைய நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் ஆளி விதைகளை அதிகமாக சேர்த்துக் கொள்ளக் கூடாது.ஒருவர்  20 கிராம்  அளவு சாப்பிட்டால் போதும். 

● மேலும்  இதை சாப்பிடும் போது அதிகமாக தண்ணீர் குடியுங்கள் இல்லையென்றால் மலச்சிக்கல் , வாயுத்தொல்லை போன்ற உடல் உபாதைகளை ஏற்படுத்தும் .


           நன்றி வணக்கம்

கருத்துரையிடுக

thankyou for reading the post ... visit again for more information

புதியது பழையவை