பொதுவாக கொழுப்புகள் இரண்டு வகைப்படும் . அவை,
1. HIGH DENSITY LIPO PROTEIN (HDL)
2. LOW DENSITY LIPO PROTEIN (LDL)
இதில் HDL என்பது நல்ல கொழுப்பு அமிலம் , LDL என்பது கெட்ட கொழுப்பு அமிலம். கெட்ட கொழுப்பானது நம்முடைய இதயத் தமனிகளில் அடைப்பு, இரத்த ஓட்ட பாதிப்பு, மாரடைப்பு போன்ற பல பாதிப்புகளை கொடுக்கும்.
ஆனால் நல்ல கொழுப்பானது இதயத் தமனிகளில் தங்கியிருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைத்து இரத்தக் குழாயையும், இதயத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். அப்படிப்பட்ட நல்ல கொழுப்புகளில் ஒன்றுதான் இந்த ஒமேகா - 3 கொழுப்பமிலம் .
இனி, ஒமேகா - 3 நிறைந்த உணவுகள் பற்றியும், அவற்றை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் விவரமாகப் பார்க்கலாம்.
1. மூளையைப் பாதுகாக்கும்.
ஒமேகா-3 நிறைந்த உணவுகளை தினமும் சாப்பிடுவதால் மூளையின் தொய்வுகளை சரிசெய்து மூளையைப் பாதுகாக்கும். அதுமட்டுமல்லாமல் கவனக் குறைவு, மனச்சோர்வு, போன்ற பிரச்சனைகள் வராமலும் தடுக்கும் .
2. பிரசவ கால பிரச்சனைகள் குறையும்.
பெண்களுக்கு பிரசவ காலத்தில் ஏற்படும் சில பிரச்சனைகளை தடுக்கவும், குழந்தைகளின் மூளைவளர்ச்சி, நினைவாற்றல் மற்றும் அறிவுத்திறனை அதிகரிக்கவும், ஒமேகா -3 மிகவும் பயன்படுகிறது. மேலும் இரத்த நாள நோய் , ஒற்றைத் தலைவலி, மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் வராமலும் தடுக்கும்.
ஒமேகா -3 நிறைந்த உணவுகள்.
1. ஆலிவ் ஆயில்.
எண்ணெய் வகைகள் பல இருந்தாலும் Refined செய்யாத ஆலிவ் ஆயிலை சமையலுக்கு பயன்படுத்தினால் ஒமேகா-3 - யை அதிகமாக பெறமுடியும்.
2. அவகேடோ .
ஒரு அவகேடோ பழத்தில் 250 மில்லிகிராம் அளவிலான ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. எனவே இந்தப் பழத்தை கிடைக்கும் போதெல்லாம் வாங்கி சாப்பிடுவது மிகவும் நல்லது. அதிலும் குறிப்பாக பழத்தை வாங்கியதும் சிறிது நேரத்திலேயே சாப்பிட்டு விடுங்கள் குளிர்சாதன பெட்டியில் வைத்து பதப்படுத்தி சாப்பிட வேண்டாம் காரணம், அதனுடைய ஆரோக்கியத் தன்மை கெட்டுவிடும் .
3. வால்நட் .
வால்நட்டில் வைட்டமின் ஈ மற்றும் ஒமேகா-3 கொழுப்பமிலங்கள் அதிகமாக உள்ளன. இது இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும், சருமத்தில் தோன்றும் முதுமைத் தன்மையையும் மறையவும் செய்யும்.
4. பூசணி விதைகள்.
ஆளி விதைக்கு அடுத்தப்படியாக சரியான அளவில் ஒமேகா-3 நிறைந்திருப்பது பூசணி விதைகளில் தான் . அதனால் இதை பொடி செய்து தண்ணீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
5. ஆளி விதைகள் .
ஆளி விதைகள், சரியான அளவு ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நிறைந்த உணவு. இது இதயத்திற்கு தேவையான EPA மற்றும் DHA என்னும் பேட்டி ஆசிட்களையும் கொண்டுள்ளது .
6. சால்மன் மற்றும் சூரை மீன் .
பொதுவாக அனைத்து வகையான மீன்களிலும் ஒமேகா-3 அமிலங்கள் நிறைந்துள்ளன. ஆனால் சால்மன் மற்றும் சூரை மீன்களில் இந்த சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது .
ஆகையால் இதய நோயாளிகள் இதை தொடர்ந்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். இப்போதெல்லாம் ஒமேகா - 3 என்று சொல்லப்படும் மீன் எண்ணெய் மாத்திரைகள் மருந்தகங்களில் கிடைக்கிறது . அதை வாரம் ஒருமுறை பயன்படுத்தினாலே போதும்.
குறிப்பு :
எதுவாக இருப்பினும் உணவே மருந்து. எனவே உணவின் மூலமே உடலுக்கு ஒமேகா-3 - யை பெற முயற்சி செய்வோம் ! நலம் பெறுவோம் !
நன்றி வணக்கம்