அனைவருக்கும் வணக்கம் , இன்று நம்முடைய ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய 10 ஆரோக்கிய தகவல்களைப் பற்றிப் பார்க்கலாம்.
2. வாரத்தில் இரண்டு நாட்கள் காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் தேங்காய் பாலுடன், கருப்பட்டி சேர்த்து குடித்து வந்தால் வயிறு தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். அல்சர் போன்ற பிரச்சனைகள் வராது.
3. செவ்வாழைப் பழத்தை தினமும் இரவு நேரங்களில் உணவிற்குப்பின் சாப்பிட்டு வந்தால் , பல்லில் ஏற்படக்கூடிய இரத்தக்கசிவு நீங்கும் . பல் சொத்தை போன்ற பிரச்சனைகளும் வராது.
4. கருவேப்பிலையை துவையல் செய்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மூளையின் செயல்பாடுகள் சீராகும். நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் இருக்கவும் உதவி செய்யும்.
5. முகம் பளபளப்பாகவும் , முகப்பறு மறையவும் சந்தனக் கட்டையை இழைத்து அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து இரவு நேரங்களில் தூங்குவதற்கு முன் பூசி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
6. மலக்குடல் பிரச்சனைகள் வராமல் தடுக்க, அகத்திகீரையை வாரம் ஒரு முறை சமைத்து சாப்பிடலாம்.குறிப்பாக அகத்தி கீரையை நன்றாக வேகவைத்து சமைத்து சாப்பிடுங்கள்.
7. சம அளவு தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெயை கலந்து பாதத்தில் தடவி வந்தால் பாதம் மிருதுவாக இருக்கும், பாத எரிச்சல் சரியாகும் .
8. தேனில் ஊரவைத்த நெல்லிக்காயை வாரம் இரண்டு முறை சாப்பிட்டு வர இதயம் மற்றும் நுரையீரல் வலிமை பெறும்.
9. வேப்ப எண்ணெயை லேசாக சூடு செய்து கை மற்றும் கால்விரல் இடுக்குகலில் தடவினால் சேற்றுப் புண்கள் குணமாகும் .
10. வாரம் ஒருமுறை இஞ்சி சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தாலோ (அல்லது) வாரம் ஒருமுறை திராட்சை சாறு குடித்துவந்தாலோ இரத்தம் சுத்தமாகும் .
நன்றி வணக்கம்