காபி குடிக்கலாமா ? வேண்டாமா ?


காலையில் எழுந்ததும் சூடாக ஒரு கப் காபி குடித்தால் தான் அன்றைய நாள் ஒரு சிலருக்கு விடியவே ஆரம்பிக்கும்.



சிலருக்கு காலை உணவு சாப்பிட்டு முடித்ததும் காபி குடித்தால்  தான் திருப்தியாக உணர்வார்கள்.இன்னும் சிலருக்கு  வெயில்காலம், மழைக் காலம் எதுவாக இருந்தாலும்  கண்டிப்பாக காபி குடிச்சே ஆகணும்.. ஏன் எனக்கும் சேர்த்துதான்...

இப்படி காபி நம்மை ஆட்சி செய்து கொண்டிருக்கும் அதே வேளையில்,  காபி நம் உடலுக்கு நல்லதா ? கெட்டதா ? என்று  பல ஆண்டுகளாக விவாதம் நடைபெற்றுக் கொண்டே தான் இருக்கிறது. 

 ● காபி குடிப்பது உடலுக்கு தீங்கானது அதில் இருக்கக்கூடிய காஃபின் (Caffine) நம்மை காபி அருந்தும் பழக்கத்திற்கு அடிமைப்படுத்தி விடும் என்று சிலர் கூறுகிறார்கள். 

● இன்னும் சிலர் காபி குடிப்பது மூளையை சுறுசுறுப்பாக வைத்திருப்பதுடன் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குவதாகவும் கூறுகிறார்கள்.

எதுவாக இருப்பினும் , இன்று உலக மக்களில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் காபி குடிப்பதை தன்னுடைய வாழ்நாள் பழக்கமாக வைத்திருக்கிறார்கள் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்..

சரி , இப்பொழுது காபி குடிப்பது நல்லதா ? கெட்டதா ? என்பதை பற்றி பார்க்கலாம்..

ஒரு ஆய்வின் முடிவில் காபி குடிப்பவர்கள்,  காபி குடிக்காதவர்களை விட பல நிலைகளில் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள் . ஆனால் அதுவும் சரியான அளவில் அருந்தினால் மட்டுமே நன்மைகள் கிடைக்கும். அளவிற்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு தானே. அதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஹார்வர்டு பல்கலைகழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் காபி குடிக்காதவர்களை விட காபி குடிப்பவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு 20% குறைவாக உள்ளதாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். அதே சமயம் ஒரு நாளைக்கு இரண்டு கப் காபிக்கு மேல் குடிக்கவும் கூடாது.

தினமும் இரண்டு கப் காபி குடிக்கும் பெண்களுக்கு தோல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு 20 சதவீதம் குறைவு.  இது உங்கள் நரம்புகளுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும்,  பசியை தற்காலிகமாகப் போக்கும் அது மட்டுமல்லாமல் உங்கள் உடலில் உள்ள அதிக கலோரிகளை எரிக்கவும் உதவும்.

தினமும் இரண்டு கப் காபிக்கு மேல் குடிப்பவர்களுக்கு மன அழுத்தம்,  தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளும் ஏற்படும்.


ஆகவே,  அளவுடன் காபி குடித்தால் நன்மைகள் அதிகமாக இருக்கும்.  எனவே தினமும் 2 கப் காபி பருகுங்கள். முடிந்தளவு சர்க்கரையை குறைத்துக் கொள்ளுங்கள்.

          
                     நன்றி வணக்கம்



கருத்துரையிடுக

thankyou for reading the post ... visit again for more information

புதியது பழையவை