பொதுவாக தைராய்டு இரண்டு வகைப்படும்.
1. ஹைபோ தைராய்டு ( T4)
2. ஹைப்பர் தைராய்டு (T3)
அதாவது தைராய்டு சுரப்பியில் ஹார்மோன்களின் அளவு அதிகமாக சுரப்பதை ஹைப்பர் தைராய்டிசம் என்றும் ஹார்மோன்களின் அளவு குறைவாக சுரப்பதை ஹைப்போ தைராய்டிசம் என்றும் சொல்வார்கள்.
இப்போது ஹைப்போதைராய்டிசம் இருப்பவர்கள் சாப்பிடக்கூடாத மிக முக்கிய உணவுகளைப் பற்றி விவரமாக பார்க்கலாம்.
1. சோயா .
சோயா பீன்ஸ் மற்றும் சோயா பொருட்களில் உள்ள வேதிப் பொருட்கள் தைராய்டு செயல்பாடுகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி ஹார்மோன் சுரப்பின் அளவை குறைத்து விடும். அதனால் ஹைப்போ தைராய்டிசம் பிரச்சனை இருப்பவர்கள் சோயா பீன்ஸ் சாப்பிடுவதை தவிர்ப்பது மிகவும் நல்லது.
2. க்ருசிஃபரஸ் காய்கறிகள்.
கடுகு குடும்பத்தை சேர்ந்த காய்கறிகளான , முட்டைக்கோஸ் காலிஃப்ளவர் ப்ரோக்கோலி,டர்னிப் ஆகியவற்றை தான் "க்ருசிஃபரஸ் காய்கறிகள்" என்று சொல்கிறோம். இந்த காய்கறிகள் நம் உடலில் அயோடின் உறிஞ்சுவதை தடுத்து ஹார்மோன் சுரப்பில் ஏற்றத்தழ்வை ஏற்படுத்தும்.
அதனால் முடிந்தளவு இந்த காய்கறிகளை தவிர்ப்பது நல்லது. இல்லை என்றால் ஒரு நாளைக்கு, 5 அவுன்ஸ் அளவு வரை அதாவது 140 முதல் 145 கிராம் வரை மட்டுமே சாப்பிடுங்கள்.
3. சோளம் , ஆளி விதைகள்.
சல்பர் சத்து மிகுதியாக உள்ள உணவுகள் உதாரணமாக சோளம் , ஆளி விதைகள், கிழங்கு வகைகள் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. காரணம் இது அயோடின் சத்தை உறிஞ்சுவதில் சிரமத்தை ஏற்படுத்தும். எனவே ஹைப்போ தைராய்டிசம் பிரச்சனை உள்ளவர்கள் சல்பர் சத்து நிறைந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.
4. குளூட்டன் நிறைந்த உணவுகள்.
பிரட் , கேக் , பிஸ்கட் போன்ற பேக்கரி உணவுகளில் குளூட்டன் சத்து அதிகமாக இருக்கும். இந்தக் குளூட்டன் சிறுகுடலை பாதிப்படைய செய்வது மட்டுமல்லாமல் தைராய்டு ஹார்மோனின் சுரப்பையும் பாதிப்படையச் செய்யும்.
5. காபி
காபியில் உள்ள கேஃப்பைன் ஆனது T4 ஹார்மோன் சுரப்பில் மாற்றத்தை ஏற்படுத்திவிடும். அதனால் முடிந்த அளவு காபி குடிப்பதை தவிர்ப்பது நல்லது.
மேலும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஃபாஸ்ட் ஃபுட், இறைச்சி ஆகியவற்றை முடிந்தளவு தவிர்ப்பது நல்லது.
ஹைப்போ தைராய்டிசம் பிரச்சனை உள்ளவர்கள் செலினியம் சத்து நிறைந்த உணவுகள் , கீரைகள், தானியங்கள் , ஸ்ட்ராபெர்ரி , ப்ளூபெர்ரி போன்ற பெர்ரி பழங்கள் ஆகியவற்றை அதிகமாக சாப்பிடுங்கள்.
நன்றி வணக்கம்