சமையலில் மணம் சேர்ப்பதற்கு மட்டுமல்லாமல் நம்முடைய ஆரோக்கியத்தை காக்கவும் பயன்படுத்தப்படும் ஒரு மருத்துவப் பொருள் தான் சீரகம்.
சீரகம் = சீர் + அகம் . அக உறுப்புகள் அதாவது உடல் உள்ளுறுப்புகளை சீர்படுத்தும் தன்மை இருப்பதால் , இதற்கு சீரகம் என்ற காரணப் பெயர் வந்தது.
வரலாற்றை திரும்பிப் பார்த்தால் லத்தீன், ரோம், கிரேக்கம் இங்கிருந்து தான் சீரகம் இந்தியாவிற்கு வந்தது என்று சொல்லப்படுகிறது.
அல்சர், வயிறு வீங்குதல் , வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகளுக்கு சீரகத்தை நன்கு பொடி செய்து வெண்ணெயில் கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சரியாகும்.
ஒரு சிலர் சரியாக சாப்பிடவே இல்லை என்றாலும் கூட வயிறு ஊதுவது போலவே இருக்கும். இத நினைத்து வருத்தப்படுபவர்கள் இனி கவலைப்பட வேண்டாம். இதற்கு ஒரு டீஸ்பூன் சீரகம் மற்றும் இரண்டு ஏலக்காய் ஆகியவற்றை இளம் வறுப்பாக வறுத்து பொடி செய்து அதை இரவில் உணவிற்குப் பின் அரை மணி நேரம் கழித்து சாப்பிட்டு வந்தால் வயிறு ஊதுதல் போன்ற பிரச்சனைகள் நீங்கும்.
பெரும்பான்மையான பெண்களுக்கு மெனோபாஸ் ( Menopause ) அதாவது மாதவிடாய் முடியும் காலகட்டத்தில் , எலும்பின் அடர்த்தி குறைந்து எலும்புகளில் புரையோடும் பிரச்சனை ஏற்படுகிறது. இதை ஆஸ்டியோபொரோசிஸ் ( osteoporosis ) என்று சொல்வார்கள். இந்த பிரச்சனை உள்ளவர்கள் தினமும் சீரகத்தை உணவில் பயன்படுத்தி வந்தால் மிகச் சிறந்த தீர்வாக அமையும்.
சீரகத்தில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி ஆகியவை குடல் புற்றுநோய் வருவதை தடுக்கும் ஆற்றல் கொண்டது . மேலும் சர்க்கரை நோயாளிகள் சீரகத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயின் பின்விளைவுகளில் ஒன்றான கண்புரை நோய் பிரச்சனை ஏற்படுவதை முடிந்த அளவு தடுக்கும்.
சீரகத்தை நல்லெண்ணையில் போட்டு காய்ச்சி, வாரம் ஒரு முறை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் தலைவலி, இரத்த கொதிப்பு ,பித்தம் , கிறுகிறுப்பு போன்ற பிரச்சனைகள் தீரும்.
எனவே தினமும் சீரகத்தை உணவிலோ, அல்லது சீரகத்தை கொதிக்கவைத்து சீரகத் தண்ணீராகவோ குடித்து ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள் .
••• நன்றி வணக்கம் •••