யானைகள் பற்றிய 10 சுவாரசியமான தகவல்கள்..

 
● யானை நாம் அனைவராலும் அதிகம் நேசிக்கப் படக்கூடிய விலங்கு. இது  பெரிய கால்கள் , பெரிய காது , தந்தம் , துதிக்கை என பார்ப்பதற்கு முரட்டு தனமாக இருந்தாலும் மதம் பிடிக்கும் காலத்தைத் தவிர மற்ற நேரங்களில் பரம சாதுவான விலங்கு .. 


● ஆசிய நாடுகளில் அதாவது  இந்தியா,  நேபாளம் , பூடான், இலங்கை  உட்பட 13 நாடுகளில் மொத்தம் 50000 - க்கு  மேலான யானைகள் உள்ளன. இந்தியாவில் 27500 முதல் 29000 யானைகளும் . தமிழகத்தில் 3500 முதல் 4000 யானைகளும் உள்ளதாக  ஆய்வு ஒன்று கூறுகிறது.


● யானைகள் பற்றிச் சொல்ல நிறைய சுவாரசியமான தகவல்கள் இருந்தாலும் ஒரு பத்து சுவாரசியமான தகவல்களைப் பற்றி இப்பொழுது பார்ப்போம் .



1. யானையின் வால் அடிப்பகுதி மேடாக இருந்தால் அது ஆண் யானை.  இதுவே வாலின் அடிப்பகுதி V - வடிவில்  இருந்தால் அது பெண் யானை என்று எளிதில் அடையாளம் கண்டு கொள்ள முடியும்.

2. யானைகளின் சராசரி உடல் எடை சுமார் 4000 கிலோ அதில் அதன் தோலின் எடை மட்டுமே 1000 கிலோ இருக்கும். 

3. பொதுவாக யானைகள் அனைத்துமே தண்ணீர் இருக்கும் இடத்தை சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தே தெரிந்து கொள்ளும் . ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 270 லிட்டர் தண்ணீர் வரை தான் குடிக்கிறது.  ஒரே தடவையில் தன்னிடம் உள்ள துதிக்கை மூலம் 10 லிட்டர் தண்ணீரை உறிஞ்சும் திறன் கொண்டது. 

4. பெண் யானை கருத்தரித்து 22 மாதங்கள் கழித்துதான் குட்டி போடும்.  பிறந்த குட்டி 90 முதல் 135 கிலோ வரை எடை இருக்கும்.

5. யானைகள் சுவாசிப்பது என்னவோ துதிக்கையின் மூலம் தான் என்றாலும்,  வாசனையை அறிவது மட்டும் வாயில் தான் . காரணம் யானைக்கு வாயில்தான் வாசனை நரம்புகள் உள்ளன.

6. யானைக்கு பாதம் மற்றும் நகத்தில் தான் வியர்வை சுரக்கும் மற்ற இடங்களில் வியர்வை சுரக்காது. அதனால் உடல் வெப்பநிலையை சீராக வைத்துக்கொள்ள இரத்தநாளம் அதிகமுள்ள தன்னுடைய காதை ஆட்டிக் கொண்டே இருக்கும் . அப்படி காதை அடிக்கடி ஆட்டுவதால் தன்னுடைய உடல் வெப்பத்தை ஒரு டிகிரி செல்சியஸ்  வரை குறைத்துக் கொள்ளுமாம்.

7. மனிதர்களைப்போல யானை களிலும் ட்வின்ஸ் ( TWINS ) உண்டு. பெண் யானை 15 வயதில் மேஜர் ஆகிவிடும்.  இது  15 முதல் 20 வயதில் தொடங்கி 55 வயது வரை குட்டிபோடும். வாழ் நாளில் எட்டு முதல் 12 குட்டிகளை பெண் யானைகள் ஈன்றெடுக்கும்.

8. ஆசிய யானைகளின் ஆயுட்காலம் 78 வருடங்கள் என்றாலும் அவைகள் அதிகமாக பாலிதீன் கழிவுகளை சாப்பிடுவதாலும் , சாலை மற்றும் ரயில் விபத்துகளின் மூலம் தான் அதிகம் இறக்கின்றன என்பது தான்  வருத்தம் தரக்கூடிய செய்தியாக உள்ளது . எனவே நாம் நம்முடைய சுற்றுச் சூழலை பாதுகாக்க வேண்டும்,  முடிந்தவரை பாலிதீன் பைகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

9. யானை மணிக்கு 32 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும் திறன் கொண்டது. மேலும்  மனிதர்களைப் போலவே  யானைகளுக்கும்  கிட்ட பார்வை உண்டு.  தூரத்தில் இருப்பதை அவற்றில் தெளிவாக பார்க்க முடியாது.

10. யானைகளுக்கு பிடிக்காத நிறங்கள் வெள்ளை மற்றும் சிவப்பு .




             ••• நன்றி வணக்கம் •••

கருத்துரையிடுக

thankyou for reading the post ... visit again for more information

புதியது பழையவை