கீரைகளில் இல்லாத சத்துக்களே கிடையாது. கீரையில் நார்ச்சத்து, இருபதுக்கும் மேற்பட்ட கனிமங்கள், வைட்டமின்கள் மிகுதியாக உள்ளது. மேலும் இதில் பச்சையம் கூடுதலாய் நிறைந்துள்ள பாலிஃபீனால்களும் அடங்கியுள்ளது.
இப்பொழுது ஒவ்வொரு கீரையில் அடங்கியுள்ள சிறப்புகளைப் பற்றி பார்க்கலாம்.
● பெண்களுக்கு மாதவிடாய் காலத்திற்கு முன்பு ஏற்படக் கூடிய வெள்ளைபடுதல், கண் எரிச்சல் , உடல் சூடு , சிறுநீர் பாதையில் எரிச்சல் இவற்றை எல்லாம் சரி செய்யக்கூடிய தன்னை சிறு கீரைக்கு உண்டு.
● ஆண்களுக்கு ஏற்படக்கூடிய மலட்டுத்தன்மையை நீக்கி ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுத்தும் தன்மை பசலைக் கீரைக்கு உண்டு. மேலும் இது ஒரு மிகச்சிறந்த மலமிளக்கியாகவும் உள்ளது.
● கீரைகளிலேயே குழந்தைகளுக்கு மிக சிறப்பானது , அரைக்கீரை என்று சொல்லக்கூடிய அரைக்கீரை தான். இது குளிர்ச்சியான கீரையாக இருந்தாலும் தொடர் தும்மல், மார்புச் சளி , கபநோய் , சைனஸ் போன்ற பிரச்சனைகளை போக்க வல்லது.
● கீரைகளில் முதன்மையானது என்று சொன்னால் அது முருங்கைக்கீரை தான். காரணம் இதில் வைட்டமின் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. இது நரம்புத் தளர்ச்சியைப் போக்கும். இரத்தக்கொதிப்பு உள்ளவர்கள் முருங்கைக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கிறுகிறுப்பு நீங்கும்.
" வெந்து கெட்டது முருங்கை, வேகாமல் கெட்டது அகத்தி என்று நம் முன்னோர்கள் சொல்வார்கள். "
அதன்படி , அகத்திக்கீரையை நன்றாக வேக வைத்து சாப்பிடவேண்டும் முருங்கைக்கீரை அரை வேக்காட்டில் சாப்பிட வேண்டியது அவசியம்.
● பீட்ரூட் , கேரட், முட்டைகோஸ் ஆகியவற்றை விட பொன்னாங்கண்ணி கீரையிலும், முருங்கைக் கீரையிலும் பீட்டாகரோட்டின் என்று சொல்லக்கூடிய சத்து மிகுதியாகவே உள்ளது . மேலும் இதில் கரையா நார்ச்சத்து மற்றும் கரையும் நார்ச்சத்துக்களும் அதிகமாக உள்ளது.
● கீரையை பெரும்பாலும் மதிய உணவாக எடுத்துக்கொள்ளுங்கள் இரவில் கீரையை தவிர்க்கவும். காரணம், கீரை செரிமானம் ஆகுவதற்கு சற்று நேரம் ஆகும் அதனால் இரவில் தவிர்ப்பது நல்லது.
பொன்னாங்கண்ணிக் கீரைக்கு " மந்திரக் கிரை " என்று இன்னொரு பெயரும் உண்டு. இந்த கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை சீராக இருக்கும் . மேலும் இது கல்லீரலுக்கும் , மண்ணீரலுக்கும் வலிமை சேர்க்க கூடியது.
எனவே தினமும் ஏதாவது ஒரு கீரையை உணவில் சேர்த்துக் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்.
நன்றி வணக்கம்