அதற்கு காரணம் அவர்கள் எவ்வளவுக் கெவ்வளவு மிகுதியாக அழுகிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு விருந்தாளிகள் மீது மதிப்பு காட்டுவதாக அர்த்தமாம்.
2. ஆங்கில மொழியில் கிட்டதட்ட 6 லட்சம் வார்த்தைகள் உள்ளன .
இருந்தாலும் , மிகப் பெரிய ஆங்கில அறிவாளியாகளுக்கு கூட 20 ஆயிரம் வார்த்தைகளுக்கு மேல் அறிந்திருக்க மாட்டார்களாம்.
3. இடி இடிக்கும் போது வீட்டில் இருக்கக்கூடிய பால் சீக்கிரமாக புளித்துப் போய் விடுமாம்.
4. ஊட்டி அதாவது உதகமண்டலம் இதற்கு உண்மையான பெயர் " ஒற்றைக்கல் மந்து " என்பதேயாகும்.
இந்த வார்த்தையை ஆங்கிலேயர்களால் எளிதில் உச்சரிக்க முடியவில்லை. அதனால் அவர்கள் உதகமண்டலம் என்று உச்சரித்தார்கள். நாளடைவில் அதுவே அதற்கு பெயரானது .
5. உலகிலேயே மிகப் பழமையான நகரம் சிரியாவின் தலைநகரமான " டமாஸ்கஸ் ".
இது 4500 ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்டது.
6. தும்மல் எப்ப வரும், எப்படி வரும்னு யாருக்கும் தெரியாது.
ஆனால் அப்படி வரும்போது ஒரு வினாடிக்கு 152 அடி வேகத்தில் வெளிவரும்.
7. வானில் , வானவில் தோன்றினால் பார்ப்பதற்கு ஏதோ ஒரு சந்தோசம் ஏற்படும். ஆனால் வானவில் தோன்றினால் ஒரு சில நிமிடங்களிலேயே மறைந்துவிடும் அல்லவா ?
ஆனால் 1979ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி இங்கிலாந்தில் உள்ள " வேல்ஸ் "பகுதியில் மூன்று மணி நேரம் வானவில் தோன்றியது. இதுதான் உலக வரலாற்றிலேயே அதிக நேரம் தெரிந்த வானவில்.
8. நாம் சாதாரணமாக சிரிக்க வேண்டும் என்றால், 13 தசை எலும்புகளை பயன்படுத்தினால் தான் சிரிக்க முடியும்.
9. 12 ஆண்டுக்கு ஒரு முறை பூக்கக்கூடிய பூ எதுவென்று கேட்டால் நாம் எல்லோருமே குறிஞ்சிப்பூ என்று எளிமையாக சொல்லி விடலாம். ஆனால் 50 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் பூவும் உள்ளது.
அது, இந்தியப் பெருங்கடலில் ரீயூனியன் என்ற தீவில் இருக்கிறது . இந்த தீவில் உள்ள " காக்டஸ் " என்னும் மலர்தான் 50 ஆண்டிற்கு ஒரு முறைதான் பூக்குமாம்.
10. வெயில் காலமாக இருந்தாலும் சரி, மழைக் காலமாக இருந்தாலும் சரி, சூடாக ஒரு கப் டீ குடிச்சா சும்மா நட்சுனு இருக்குமில்லையா .
இந்த " டீ "என்ற வார்த்தையை 17ஆம் நூற்றாண்டு வரைக்கும் ஆங்கில உச்சரிப்பின்படி " டே " என்றுதான் சொன்னார்களாம்.
நன்றி வணக்கம்