வைட்டமின்கள் பற்றி தெரிந்து கொள்வோம்..

வைட்டமின்கள் என்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமாக தேவைப்படக் கூடிய ஒரு சத்துப்பொருள். பெரும்பாலும் இந்த வைட்டமின்கள்,   வளர்ச்சிதை மாற்றச் செயல்கள் (METABOLISM ) - இல் மிக முக்கியமான பங்கு வகிக்குறது.





 ● நம் உடலில் உள்ள ஹார்மோன்களையும்,  என்சைம்களையும்  நாம் உட்கொள்ளும் உணவில் இருந்தோ அல்லது வேறு சில பொருட்களைப் பயன்படுத்தியோ,  உடல் தானாகவே தயாரித்துக் கொள்கிறது. 

● ஆனால் வைட்டமின்களை அது போல நமது உடலால் தயாரிக்க இயலாது.  ஆகையால் வைட்டமின்களை நாம் நமது உடலுக்கு உணவின் மூலமே வழங்க வேண்டியதாய் இருக்கிறது.

● வைட்டமின்கள் , நமது உடலுக்கு மிகக் குறைந்த அளவில்தான் தேவைப்படுகின்றன அந்த மிகக் குறைந்த அளவும் நமக்கு கிடைக்காத போதுதான் அவற்றின் பற்றாக்குறையால் மனித உடல் பாதிக்கப்படுகிறது.

● நமது உடலில் செல்கள் தொடர்பான நடவடிக்கைகளுக்கு வைட்டமின்களின் பங்கு சற்று அதிகமாக உள்ளது என்று சொல்லலாம். அதாவது செல்களின் வளர்ச்சி செல்களில் உள்ள பழுதுகளை சரி செய்வது,  போன்றவற்றிற்கு வைட்டமின்கள் தேவைப்படுகின்றன.

● ஏதாவது ஒரு குறிப்பிட்ட வைட்டமின்களை தினமும் நமக்கு தேவையான அளவு எடுத்துக் கொள்ளவில்லை என்றால் நம்முடைய ஆரோக்கியம் சீர்குலைகிறது.

● பொதுவாக வைட்டமின்கள் இரண்டு வகைப்படும் அவை கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் மற்றும் நீரில் கரையக்கூடிய வைட்டமின்கள்.

 

• கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் - 13 உள்ளன.

• நீரில் கரையக்கூடிய வைட்டமின்கள் - 27 உள்ளன.

● எலும்பு மற்றும் பல் வளர்ச்சிக்கு வைட்டமின்கள் மிகவும் அவசியம்.  சருமத்தையும்,  கூந்தலையும் ஆரோக்கியமாக வைத்திருக்கவும் இது உதவுகிறது.

● எப்பொழுதும் சோர்வுடன் உள்ளது,  சுறுசுறுப்பாக எந்த வேலையும் செய்ய முடியவில்லை, முடி கொட்டுகிறது,  சத்து குறைவாக இருக்கும் என்று தோன்றுகிறது,  ஏதாவது சத்து மாத்திரை எழுதிக் கொடுங்க டாக்டர் இப்படிக் கேட்பது சர்வ சாதாரணமாகிவிட்டது .

● ஆரோக்கியமான சரிவிகித உணவை உட்கொள்வது மறந்து , காலையில் இரண்டு மாத்திரை ,மதியம் ஒன்று மாத்திரை,  இரவுக்கு மூன்று மாத்திரை,  என மாத்திரைகள் மூலமே ஆரோக்கியத்தை பெற்று விடலாம் என்று நம்பத் துவங்கிவிட்டோம்.

●  ஊட்டச்சத்து குறைபாடு கண்டறியப்பட்டு , டாக்டரின் ஆலோசனைப்படி மாத்திரை எடுத்துக்கொள்வதில் எந்தத் தவறும் இல்லை ஆனால்  சுயமாக நாமே  மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவதால் பாதிப்புகள் அதிகம்.

● உதாரணமாக இப்பொழுது VITAMIN E கேப்ஸ்யூல்கள் முகத்திற்கு , தலைமுடி,  வளர்வதற்கு உதவும் காஸ்மெட்டிக் பொருட்களாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

● இதில் நன்மைகள் ஒரு பக்கம் இருந்தாலும் வைட்டமின்கள் அளவுக்கு அதிகமாக போகும்போது இரத்த இழப்பு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.




● பெண்கள் மாதவிடாய் மற்றும் கர்ப்ப காலங்களில் இந்த வைட்டமின் ஈ  மாத்திரைகளை கண்டிப்பாக எடுத்துக் கொள்ளக்கூடாது.  தொடர்ச்சியாக இந்த வைட்டமின் ஈ மாத்திரைகளை பயன்படுத்தும்போது புராஸ்டேட் கேன்சரை உண்டாக்கிவிடும்.

● மேலே சொன்னது போல , நம் உடலுக்கு வைட்டமின்கள் மிகக் குறைந்த அளவில்தான் தேவைப்படுகிறது . ஆகையால் அந்த அளவைவிட குறைந்தாலும் பாதிப்புகள் அதிகம் வைட்டமின்கள் அளவு அதிகம் ஆனாலும் பாதிப்புகள் அதிகம் . ஆகவே உணவுப் பழக்கத்தின் மூலமே தேவையான ஆரோக்கியத்தைப் பெற முயற்சி செய்து ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்.


              ••• நன்றி வணக்கம் •••


கருத்துரையிடுக

thankyou for reading the post ... visit again for more information

புதியது பழையவை