1. 100 கிராம் சீத்தாப்பழத்தில்,
● புரதம் - 1.6 கிராம்
● நார்ப்பொருள் - 3.1 கிராம்
● கொழுப்பு சத்து - 0.3 கிராம்
● மாவுப் பொருள் - 23. 5 கிராம்
● கால்சியம் - 17 மில்லி கிராம்
● பாஸ்பரஸ் - 47 மில்லி கிராம்
● இரும்பு சத்து - 1.5 கிராம்
● மெக்னீசியம் - 48 மில்லி கிராம்
● பொட்டாசியம் - 34 மில்லி கிராம்
● வைட்டமின் சி - 37 மில்லி கிராம்
● ஆக்சாலிக்அமிலம்- 30மில்லிகிராம்
மற்றும் பல ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளது.
2. சீத்தாப்பழம் குடல் புண்ணை குணப்படுத்தும், இரத்தத்தை விருத்தி அடைய செய்யும் . மேலும் இது தூக்கத்தை தூண்டும்.
3. அறுவை சிகிச்சைக்குப் பின்பு சீத்தாப் பழம் சாப்பிட்டு வந்தால் உடல் உள்ளுறுப்புகளில் உள்ள இரணங்கள் விரைவாக ஆறும்.
4. மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் தினமும் சீத்தாப்பழத்தை சாப்பிட்டு வந்தால் இந்தப் பிரச்சனையிலிரந்து சீக்கிரம் விடுபடலாம்.
5. உடம்பில் அதிக அளவு ஊளைச்சத்து உள்ளவர்கள் தொடர்ந்து சீத்தாப்பழம் சாப்பிட்டால் கணிசமான அளவு உடல் எடை குறையும்.
6. சீத்தாப்பழத்தில் நம் உடலுக்கு தேவையான அளவு குளுக்கோஸ் உள்ளதால் உடல் சோர்வை அகற்றி சுறுசுறுப்பை ஏற்படுத்தும்.
7. நினைவாற்றலை அதிகரிக்கும் தன்மை சீத்தாப்பழத்திற்கு உண்டு என ஜெர்மன் நாட்டு மருத்துவர்கள் தங்களுடைய ஆராய்ச்சியில் தெரிவித்துள்ளனர்.
8. சீத்தாப்பழத்துடன் சிறிதளவு இஞ்சி சாறு மற்றும் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வந்தால் பித்தம் சரியாகும்.
9. தசைப்பிடிப்பு பிரச்சனை உள்ளவர்கள் அடிக்கடி சீத்தாப் பழம் சாப்பிட்டு வந்தால் தசைப்பிடிப்பு பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
10. சீத்தாப்பழத்துடன் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலில் தேவையற்ற கொலஸ்ட்ரால் சேராமல் தடுக்கும்.
11. திராட்சைப் பழச்சாறுடன் , சீத்தாப்பழச் சாறு கலந்து அவ்வப்போது பருகி வந்தால் நரம்புகள் வலுப்படும்.
எனவே கிடைக்கும் நேரங்களில் சீத்தாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு ஆரோக்கியத்தை அதிகரியுங்கள்.
நன்றி வணக்கம்