நாம் சாப்பிடும் உணவுமுறை சரியானதாக அமைந்துவிட்டால் வாழ்நாள் முழுவதும் நோயின்றி ஆரோக்கியத்துடன் வாழ முடியும் என்பது நிதர்சனமான உண்மை.
அப்படி காந்திஜி சுறுசுறுப்புடன் இருந்ததற்கு முதற்காரணம், அவர் தினமும் அத்திப்பழம் சாப்பிட்டது தான் என்று பலர் கூறுகிறார்கள் .
இப்பொழுது தினமும் அத்திப்பழம் அல்லது உலர் அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி விவரமாக பார்க்கலாம்
1. மூளை சுறுசுறுப்புடன் இருக்கும்.
காலையில் எழுந்ததும் இரண்டு அத்திப்பழம் சாப்பிட்டு வந்தால் நம்முடைய மூளை சுறுசுறுப்பாக இயங்கும் , காரணம் இதில் உள்ள பாஸ்பரஸ் உப்பு எலும்பு மண்டலத்தை வலுவுடனும் , மூளையில் உள்ள திசுக்களை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும்.
மேலும் இதில் கால்சியம், கார்போஹைட்ரேட் சத்துக்களும் அதிகமாக உள்ளது.
2. மூலநோய் தாக்கம் குறையும்.
மூலநோய்க்காரர்கள் தினமும் 25 முதல் 30 கிராம் உலர் அத்தி பழங்களை குளிர்ந்த தண்ணீரில் கழுவி ஊறவைத்து மறுநாள் காலையில் அதை நன்றாக பிசைந்து வெந்நீருடன் கலந்து அந்த பலத்தோடு குடித்து வந்தால் மூல நோயின் தாக்கம் குறையும் வாய்ப்பு அதிகம்.
3. வெண்புள்ளிகள் மறையும்.
கி-மு 4000- ஆம் ஆண்டில் வாழ்ந்த பாபிலோனிய மக்கள் அவர்களுக்கு இருந்த வெண்புள்ளிகளை நீக்கவும் , இளமைப் பொலிவுடன் பளபளப்பாக இருக்கவும் அத்திப்பழத்தை சாப்பிட்டார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆம் வெண்புள்ளி நோயால் அவதிப்படுகிறவர்கள் தொடர்ந்து சில ஆண்டுகள் அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்தால் இதில் இருக்கக்கூடிய சோராலன்ஸ் ( Psoralenes) என்னும் ஒருவித பைட்டோ கெமிக்கல் தோலிலுள்ள வெண்புள்ளிகள் படிப்படியாக மறைய உதவிசெய்யும்.
4. இரத்தம் விருத்தியடையும்.
அத்திபழத்தில் அதிக அளவு இரும்பு சத்து உள்ளது.. தினமும் இதை சாப்பிடுவதால் உடலில் இரத்த விருத்தி அதிகரிக்கும் தொடர்ந்து சாப்பிடும்போது 80 வயதுக்காரர்கள் கூட மனஉறுதியுடனும் , சுறுசுறுப்பு திறனுடனும் வாழலாம். மேலும் இது நரம்பு மண்டலத்தைப் பலப்படுத்த வல்லது.
5. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். இவர்கள் தினமும் அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் அதேபோல ஆண்மைக்குறைவு பிரச்சனை இருப்பவர்கள் உலர் திராட்சை, பாதாம் பருப்பு அத்திபழம் ஆகியவற்றை சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை குறைவு பிரச்சனை குணமாக அதிக வாய்ப்பு உள்ளது.
எனவே முடிந்தவரை அனைவரும் தினமும் அத்திப்பழம் அல்லது உலர் அத்திப்பழதாதை சாப்பிட்டு உங்களுடைய உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்
நன்றி வணக்கம்