கொஞ்சம் சிரிங்க பாஸ்...


வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பது பழமொழி. ஆனால் நம்மில் பலர் சிரிப்பதையே மறந்து எந்திரங்களை போல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது தான் உண்மை . 

எனக்கு எங்க சிரிக்க நேரம் இருக்கு ?  சொந்த வீடு வாங்கணும்,  கார் வாங்கணும் , நிறைய கமிட்மெண்ட்ஸ்,  கடன் பிரச்சனை, வேலை இல்லை இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகள்  இருக்கிறது. அதன் விளைவாக சிரிப்பு என்பது எட்டி பிடிக்க கூடிய தூரத்தில் இல்லாமல் போய்விட்டது என்றே சொல்லலாம் . 



துன்பம் வரும் வேளையில் சிரிப்பவன் ஞானி என்று சொல்வார்கள். துன்பத்தில் சிரிப்பவன் ஞானியா?  என்று எனக்கு தெரியாது ஆனால் துன்பத்தில் சிரித்தால் ஆரோக்கியமாக இருக்கலாம் என்பது உறுதி.

நாம் எல்லோரும் குழந்தை பருவத்திலேயே இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவோம். ஏனென்றால் குழந்தைகள் எப்போதும்  எந்த கவலையும் இல்லாமல் சிரித்துக்கொண்டே இருப்பார்கள். ஏன் எதற்கு சிரிக்கிறார்கள் என்று குழந்தைகளுக்கும் தெரியாது நமக்கும் தெரியாது . ஆனால் அதைப் பார்க்கும்போது நம் மனதிற்குள்ளே ஒருவிதமான நிம்மதி ஏற்படும் .

ஒரு குழந்தை ஒரு நாளைக்கு  சராசரியாக 400 முறை சிரிக்கிறது,  ஆனால் பெரியவர்கள் ஒரு நாளைக்கு 20 முறை மட்டுமே சிரிக்கிறோம். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் குழந்தையின் சிரிப்பிற்கும் நம்முடைய சிரிப்பிற்குமான  எண்ணிக்கையில்  எவ்வளவு வித்தியாசம் என்று.

எனவே முடிந்தளவு உங்களுக்காக சிறிது நேரம் ஒதுக்கி ,

                                         "கொஞ்சம் சிரிங்க பாஸ்"

நீங்கள் சிரிக்கும்போது உங்களுடைய ஸ்ட்ரெஸ் ஹார்மோன் சீரான அளவில் இருக்கும்..  இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பும் குறையுமென்று  ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

அதேபோல் மிகமுக்கியமான ஒன்று என்னவெனில்,

சிரித்தும் வாழ வேண்டும் பிறரை சிரிக்க வைத்தும் வாழ வேண்டும் என்பதை மனதில் நினைவுகொள்ளுங்கள்..  

காசா பணமா  இப்போதாவது  கொஞ்சம் சிரிக்களாமே !!!

                      .. SMILE PLEASE .. 

இந்தப் சிரிப்பு உங்களுடைய வாழ்வு முழுவதும் தொடரட்டும்..


                    நன்றி வணக்கம்

கருத்துரையிடுக

thankyou for reading the post ... visit again for more information

புதியது பழையவை