காதல் ரோஜாவே ... எங்கே நீ எங்கே... என்று ரோஜா மலரை காதலியை வர்ணிப்பதற்கும் , காதலை வெளிப்படுத்தும் அடையாளச் சின்னமாக மட்டும் பார்க்கும் நாம் , அதை மருத்துவகுணம் நிறைந்ததாகவும் பார்க்க வேண்டும்.
உலகில் சுமார் 150 ரோஜா இனங்கள் உள்ளன, பிறகு நாளடைவில் காலத்திற்கு ஏற்றவாறு ரோஜாக்கள் கலப்பினம் செய்யப்பட்டு இப்போது ஆயிரக்கணக்கான வகைகள் உள்ளன.
என்னதான் பலவிதமான ரோஜாக்கள் இருந்தாலும் பன்னீர் ரோஜா மற்றும் நாட்டு ரோஜா தான் மருத்துவத்திற்கு பயன்படுத்தபடுகிறது.. அவற்றில் அடங்கியுள்ள மருத்துவத் தன்மை பற்றி பார்க்கலாம் ...
1. ஒரு சிலருக்கு பகல் நேரங்களில் அதும் உச்சி வெயிலில் சென்றால் மயக்கம் ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் ரோஜா இதழ்களை முகர்ந்து பார்ப்பதாலும், ரோஜா இதழ்களை சாப்பிடுவதாலும் மயக்கத்திலிரந்து விடுபடலாம். மேலும் இது, மனம் மற்றும் உடலை சுறுசுறுப்படையச் செய்யும்.
2. பொதுவாக உடல் உஷ்ணத்தினாலும், காரமான உணவை சாப்பிடுவதாலும், வைட்டமின் பி பற்றாக்குறை இருப்பதாலும், வயிற்றில் அல்சர் போன்ற பிரச்சனைகள் இருப்பதாலும் கூட ஒரு சிலருக்கு அடிக்கடி வாய்ப்புண் ஏற்படலாம். இதற்காக அடிக்கடி மாத்திரை சாப்பிடுபவர்கள் , மாத்திரையை கொஞ்சம் குறைத்துக் கொண்டு ரோஜா இதழ்களை தினசரி சாப்பிட தொடங்கினால் உடல் சூடு மற்றும் வாய் புண்ணால் ஏற்படும் எரிச்சல், வலி குறையும்.
3. ரோஜா இதழ்கள், வயிற்றில் இருக்கக்கூடிய செரிமான அமிலங்களை சீராக வைத்திருக்க உதவும். மலச்சிக்கலால் அவதிப்படுபவர்களுக்கு இது அருமருந்து .
மேலும் கர்ப்ப காலத்தில் இருக்கக்கூடிய பெண்களுக்கு ஏற்படக்கூடிய மலச்சிக்கலை போக்க தினமும் ரோஜா இதழ்களை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
4. ஒரு சிலருக்கு உடலில் அதிகமாக வியர்வை ஏற்படும் போது வியர்வையில் உள்ள பாக்டீரியா மற்றும் கிருமிகள் மூலமாக உடலில் துர்நாற்றம் ஏற்படும்.
இவர்கள் தினமும் ரோஜா இதழ்களை சாப்பிட்டு வந்தால், உடல் குளிர் அடைவது மட்டுமல்லாமல் துர்நாற்றமும் நீங்கி உடல் புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.
5. ஒரு சில பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் அடி வயிற்றுவலி மற்றும் இரத்தப்போக்கு அதிகமாக இருக்கும்.
இவர்கள் தினமும் காலை வேளையில் ரோஜா இதழ்களை சாப்பிட்டு வந்தால், மாதவிடாய் பிரச்சனைகள் நீங்கும். அத்தோடு ரோஜா இதழ்களை பனங்கற்கண்டுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் போக்கு மற்றும் சீதபேதி குணமாகும் .
நன்றி வணக்கம்