அருகம்புல்லின் ஆரோக்கிய நன்மைகள் ...

வணக்கம் நண்பர்களே ! இந்த பதிவில் அருகம்புல்லில் நிறைந்துள்ள ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி விவரமாக பார்க்கலாம்..

நம்முடைய உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் பல வினைகளை வேரறுக்க வல்லது அருகம்புல் .

அருகம்புல்லில் அடங்கியுள்ள சத்துக்கள் :

• மாவுச்சத்து .
• கொழுப்புச்சத்து
• நார்சத்து
• மெக்னீசியம்
• பொட்டாசியம்
• லிக்னின் , ஸ்லோகன்ஸ்
• பால்மிடிக் அமிலம்
• செலினியம்
• வைட்டமின் சி.  உட்பட எண்ணற்ற சத்துக்கள் அருகம்புல்லில் அடங்கியுள்ளது.

அருகம்புல்  மருத்துவ பயன்கள் :

அருகம்புல்லின் தண்டுப் பகுதி, வேர்ப்பகுதி , இலைகள் என அனைத்துமே இதயக் கோளாறுகளைப் போக்கும் தன்மை கொண்டது. இரத்த நாளங்களில் ஏற்படக்கூடிய அலர்ஜியை தடுப்பதற்கும் , மாரடைப்பு ஏற்படாமல் காப்பதற்கும், இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையை குறைப்பதற்கும் அருகம்புல் ஜூஸ் மிகவும் பயன்படுகிறது .

• அருகம்புல் சாறை அதிகாலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் தோலின் மேல் பகுதியில் ஏற்படும் வெண்புள்ளிகள் வருவதை குணப்படுத்தும். 

ஆஸ்துமா பிரச்சனை , சிறுநீரில் இரத்தம் கலந்து வெளியேறுதல்,  உடலில் ஏற்படக்கூடிய வியர்வை துர்நாற்றம் , நெஞ்சு சளி , கண்களில் ஏற்படும் கொடிய தொற்று நோய்கள் போன்ற பிரச்சனைகளுக்கு அருகம்புல் மிகவும் மிகச்சிறந்த தீர்வாகும் .

• தொடர்ந்து அருகம்புல் ஜூஸ் குடித்து வந்தால் பித்தம் , வாதம், கபம், தலைவலி , சளி போன்ற பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம். மேலும் இந்த அருகம்புல் ஒரு மிகச் சிறந்த மலமிளக்கியாக செயல்படுகிறது.

• இன்றைய காலகட்டத்தில் மன அழுத்தம் நம் எல்லோரையும் பெரிதும் பாடாய் படுத்துகிறது என்றே சொல்லலாம். மன அழுத்தப் பிரச்சனை உள்ளவர்கள் அருகம்புல்லை ஜூஸ்  செய்து தொடர்ந்து குடித்துவந்தால் மன அழுத்தம் நீங்கி மனத் தெளிவைத் தரும் . 

சொறி , சிரங்கு , படை போன்ற சரும பிரச்சனைகள் அனைத்திற்கும் மிகச் சிறந்த தீர்வு தரக்கூடியது அருகம்புல்.

• அருகம்புல்லுக்கு ,  நம் உடலிலுள்ள இரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மை சற்று அதிகமாகவே உள்ளது.  ஆகையால் தினமும் அல்லது அடிக்கடி அருகம்புல் ஜூஸை குடித்து வருவதன் மூலம் இரத்த புற்றுநோய் மற்றும் இதர புற்றுநோய்கள் ஏற்படும் தாக்கத்தை வெகுவாய் குறைக்கும் .

எனவே அடிக்கடி அதிகாலையில் வெறும் வயிற்றில் 100ml அளவு அருகம்புல் ஜூஸ் குடித்து உடல் ஆரோக்கியத்தையும், மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்துங்கள் ...

குறிப்பு :

அருகம்புல் கிடைக்கவில்லையெனில்  நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கக்கூடிய அருகம்புல் பொடியை வாங்கி தண்ணீரில் கலந்து  அதிகாலை நேரங்களில் குடியுங்கள் .


                 நன்றி வணக்கம்


கருத்துரையிடுக

thankyou for reading the post ... visit again for more information

புதியது பழையவை