இந்த உணவை சமைப்பதற்கு குறைந்தது இரண்டு வருடம் அனுபவம் வேண்டுமாம்


வணக்கம் நண்பர்களே! இந்தப் பதிவில் ஒருசில வினோதமான மற்றும் சுவாரசியமான தகவல்களை பற்றி பார்க்கலாம்  .

Fact : 1.

டீ குடிப்பது ஒருசிலரின் அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத பழக்கத்தில் ஒன்றாகிவிட்டது. அப்படிப் பார்த்தால் இந்த உலகம் முழுவதும் தினமும் சராசரியாக 216 கோடி கப் டீ குடிக்கப்படுகிறதாம் .

Fact : 2. 

என்னதான் யானைகள் அளவில் பெரிதாக இருந்தாலும் அவைகள் பேசக்கூடிய ஒலி அலைகளின் FREQUENCY LEVEL , மனிதர்களின் காதால் கேட்கக் கூடிய frequency அளவை விட மிகவும் கம்மியாம். அதனால் ஒரு யானை மற்றொரு யானையுடன் பேசிக்கொள்வதை நம்முடைய காதுகளால் கேட்க முடியாது.

Fact : 3. 

உலகில் இதுவரைக்கும் நடந்த குத்துச்சண்டை போட்டிகளில் அதிக நேரம் நடந்த குத்துச்சண்டை போட்டி எதுவென்றால், 1893 ஆம் ஆண்டு ANTI BOWEN மற்றும் JACK BURKE ஆகியோருக்கும் நடந்த போட்டி தான். இந்த போட்டி 110 ரவுண்டுகள் என சுமார் 7 மணி நேரம் நடந்துள்ளது. இறுதியில் இரண்டு பேரும் பயங்கரமாக சோர்வடைந்தால் அந்த போட்டியை நிறுத்திவிட்டார்களாம்.

Fact : 4. 

பப்ஃபர் பிஷ் (PUFFER FISH) என்ற ஒருவகை மீன் 1200 மடங்கு சயனைடை(CYANIDE)  விட அதிகமான விஷத்தன்மையை கொண்டிருந்தாலும் அதைப் பக்குவமாக சமைத்தால் அதில் உள்ள விஷத்தன்மை நீங்கிவிடும். அந்த மீனின் சுவையை  ஜப்பானிய மக்கள் சிலர் பெரிதும் விரும்புகிறார்கள். அதனால் ஜப்பான் ரெஸ்டாரன்ட்களில் இந்த  மீன்களை சமைப்பதற்கு அங்குள்ள  செஃப்களுக்கு குறைந்தது இரண்டு வருடம் பயிற்சி கொடுக்கிறது  .

Fact : 5.

நம்மால் கண்களைத் திறந்து கொண்டு எப்படி தூங்க முடியாதோ , அதே போல கண்களை திறந்து கொண்டு தும்மவும் முடியாது . வேண்டுமென்றால் தும்மல் வரும்போது பரிசோதித்துப் பாருங்கள்.

Fact : 6 .

 பறவை இனங்களிலேயே மிகப்பெரியது நெருப்புக்கோழி . இந்த நெருப்புக்கோழியின் கண்கள் அதனுடைய மூளையை விட ஐந்து மடங்கு பெரியதாக இருக்குமாம் . அப்படி பார்த்தால் அதனுடைய கண்களின் அளவு ஒரு பில்லியர்ட்ஸ் பந்தின் அளவு இருக்குமாம் .


மேலும் இது போன்ற பதிவுகளை காண எங்களை பின் தொடருங்கள்..


                  நன்றி வணக்கம்


கருத்துரையிடுக

thankyou for reading the post ... visit again for more information

புதியது பழையவை