சிற்றரத்தை நெஞ்சிலிருக்கும் கோழையை அகற்றக்கூடிய மிகச்சிறந்த மாமருந்து என்றே கூறலாம். இது உடலில் குளிர்ச்சியை போக்கி உடலுக்கு சூட்டை தரக்கூடியது.
மிகச் சிறிய அளவு சிற்றரத்தையை எடுத்து வாயிலிட்டு சுவைத்தால் லேசான காரம் ஏற்படும் . அந்த உமிழ்நீரை விழுங்கினால் வறட்டு இருமல் , வாந்தி , குமட்டல் ஆகியவை படிப்படியாக குறையும் .
சிற்றரத்தை 100 கிராம் அளவு எடுத்து பொடி செய்து பனங்கற்கண்டுடன் சேர்த்து பாலில் கலந்து குடித்து வந்தால் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் தீரும்.
ஒரு சிறிய அளவு சித்தரத்தையை தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்கவைத்து நன்றாக குளிர்ந்தபின் அதை வடிகட்டி பனங்கற்கண்டுடன் கலந்து குடித்துவந்தால் வாந்தி, தலைப்பித்தம், வாயுத்தொல்லை ஆகியவை சரியாகும்.
இரவில் சிறுதுண்டு சித்தரத்தையை தண்ணீரில் ஊரவைத்து காலையில் அந்த நீரை குடித்து வந்தால் வயிறு சம்மந்தமான பிரச்சனைகள் தீரும் .
சித்தரத்தையை விளக்கெண்ணையில் தேய்த்து நெருப்பில் சுட்டு கரியாக்கி பின் அதை தேனில் குளப்பி குழந்தைகளுக்கு கொடுத்தால் சளித்தொல்லை நீங்கும் .
நன்றி வணக்கம்