இதிலுள்ள வைட்டமின் சி , நம் உடலில் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும். மேலும் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும், கெட்ட கொழுப்புகளை கரைக்கவும் உதவுகிறது.
சாதாரனமாக 100 கிராம் நெல்லிக்காயில் 500 மில்லிகிராம் வைட்டமின் சி உள்ளது.பாலுட்டும் தாய்மார்களுக்கு வைட்டமின் சி மிக முக்கியமான ஒன்று.அவர்கள் தினமும் நெல்லிக்காய் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.பல் ஈறுகளை பாதுகாக்கும், ஸ்கர்வி நோய் ஏற்படாமலும் தடுக்கும் .
வாரம் இரண்டு முறை 50 மில்லி நெல்லிக்காய் சாறுடன் தேன் கலந்து குடித்தால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும் .
விந்தனுக்களில் உற்பத்தி அதிகரிக்க தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் போதுமானது .தினமும் தொடர்ந்து சாப்பிடும்போது உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும், சோர்வு ஏற்படாமல் தடுக்கும். லிம்பிக் சிஸ்டத்தை மேம்படுத்தி மூளையை சுறுசுறுப்பாக இயங்கச் செய்யும் .
வாரம் இரண்டு முறை நெல்லிக்காய் ஜூஸ் உடன் தேன் கலந்து குடித்தால் இரத்தம் சுத்தமாகும், கண் பார்வை மேம்படும் .
நெல்லிக்காயில் " கொலைன் "என்னும் ஆன்டி ஆக்ஸிடன்ட் உள்ளது.இது நரம்பு மண்டலத்தை மேம்படுத்தும்,சிறுநீரக வீக்கத்தை குறைக்கும், கல்லீரல் பிரச்சனைகளைக் குறைக்கும். இந்த கொலைன் நெல்லிக்காய் மட்டுமல்லாமல், பீட்ரூட், காலிஃபளவர், முட்டைகோஸ் ஆகியவற்றிலும் அதிகமாக உள்ளது. எனவே அடிக்கடி இதையும் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
நன்றி வணக்கம்