வணக்கம் நண்பர்களே!
நம்முடைய வாழ்க்கையில் அன்றாடம் சமையலறை முதல் பூஜை அறை வரை தவிர்க்க முடியாத ஒரு மருத்துவப் பொருள் மஞ்சள் . அதற்குக் காரணம் அதனுடைய முக்கியத்துவமே ஆகும். இந்த பதிவில் மஞ்சளின் மருத்துவ பயன்களை பற்றி விவரமாகப் பார்க்கலாம்.
மஞ்சளின் மருத்துவ பயன்கள் :
● மஞ்சளில் குர்குமின்( CURCUMIN ) என்னும் வேதிப்பொருள் மிகுதியாக அடங்கியுள்ளது . இது மஞ்சளுக்கு மணத்தையும் , நிறத்தையும் கொடுக்கிறது. மேலும் உணவு நீண்ட நேரம் கெடாமல் இருக்கவும், உண்ணும் உணவு நல்ல மருந்தாக இருக்கவும் இதுவே காரணம்.
● மஞ்சளுக்கு இரத்தத்தில் சேரும் கொழுப்புச் சத்துகளை குறைக்கவும், இரத்தத்தில் உள்ள மரபணுக்கள் அழிவை தடுக்கவும், இதயத்தில் ஏற்படக்கூடிய அடைப்பை சரிசெய்யவும் திறன் உண்டு.
● அம்மை கொப்புளங்கள் மீது மஞ்சளையும் சிறிதளவு வேப்பிலையையும் சேர்த்து தடவினால் கொப்புளங்கள் உடைந்து நீர் வெளியேறி அந்தக் காயங்கள் சீக்கிரம் ஆறிவிடும் .
● விரலி மஞ்சளை நெருப்பில் சுட்டு அந்தப் புகையை மெல்ல மெல்ல முகர்ந்தால் பீனிசம் என்னும் மூக்கு ஒழுகுதல் , மண்டைக் குத்தல் , தும்மல் போன்ற பிரச்சனைகள் குணமாகும்.
● மஞ்சள் தூளை சிறிதளவு உப்புடன் சேர்த்து கலந்து காலையில் வெறும் வயிற்றில் 3 நாள் தொடர்ந்து குடித்து வந்தால் வயிற்றில் உள்ள பூச்சிகள் மற்றும் புழுக்கள் அனைத்தும் வெளியேறும் .
● சுளுக்கு மற்றும் தசை பிடிப்பு ஏற்படும் போது மஞ்சளுடன் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் உப்பு. இந்த மூன்றையும் சேர்த்து காய்ச்சி குழம்பாக்கி அது ஆறியவுடன் மேற்பூச்சாக பூசி பயன்படுத்தி வந்தால் தசை பிடிப்பு, சுளுக்கு மற்றும் வீக்கம் ஆகியவை சரியாகும்.
● பாலில் மிகச் சிறிய அளவு மஞ்சள் தூளை கலந்து கொதிக்கவைத்து சுவைக்காக கருப்பட்டி அல்லது பணங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் நம் உடல் உற்சாகமாய் இருக்கும் . மேலும் இரத்தக்கொதிப்பு இரத்தத்தில் சர்க்கரை அளவு, உடல் உஷ்ணம் மற்றும் வயிற்றுப் புண் ஆகியவை குணமாகும்.
● தொண்டைகட்டி தொண்டையில் வலி ஏற்பட்டால் மஞ்சளுடன் சிறிதளவு சுண்ணாம்புடன் தண்ணீர் சேர்த்து கலந்து பற்றுப்போட்டு வந்தால் சீக்கிரம் குணமாகும்.
● சிறிதளவு மரமஞ்சள் தூளை எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் மாதவிடாயின் போது அதிகமான உதிரப்போக்கு மற்றும் வெள்ளைப் போக்கு பிரச்சனைகள் குணமாகும் .
மேலும் இது போன்ற தகவல்களைப் பெற எங்களை பின் தொடருங்கள்....
நன்றி வணக்கம்