ஜெய் ஹனுமான் என்று சொன்னாலே நம்முடைய மனதில் ஒரு தைரியம் பிறக்கும். அது சரி, ஹனுமான் என்றால் என்ன ?
ஹனு என்றால் தாடை என்று அர்த்தம். மான் என்றால் பெரிய என்று அர்த்தம். அனுமான் என்றால் " பெரிய தாடையை உடையவர் " என்பது பொருள். அதுவே தமிழில் அனுமன் என்று ஆனது.
ஹனுமான் அஞ்சனையின் வயிற்றில் பிறந்த மகன் என்பதால் ஆஞ்சநேயர் என்று அழைக்கப்படுகிறார். அவருக்கு இப்படி பல பெயர்கள் உள்ளன. சரி இப்பொழுது அனுமன் வாலின் இரகசியம் மற்றும் அதில் அடங்கி இருக்கக்கூடிய வெற்றி சூட்சமத்தை பற்றி பார்க்கலாம் .
● விஷ்ணு பகவானின் ஏழாவது அவதாரமான இராமாவதாரம் தோன்றிய காலத்தில், வானத்து தேவர்கள் அனைவரும் அந்த அவதாரத்தில் கலந்துகொள்ள பூமியில் வானரங்களாக பிறந்தார்கள்.
● எம்பெருமான் சிவனும் ஸ்ரீராமருக்கு தொண்டு செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டு அஞ்சனையின் வயிற்றில் அனுமன் என்ற அவதாரமாக பிறந்தார்.
● பூமியில் அனுமன் அவதாரம் எடுப்பதற்கு முன் பார்வதியிடம் சிவபெருமான் இந்த அவதாரம் எடுக்கப் போவதாக அனுமதி பெற்றுக் கொண்டார். என்னதான் உலகையாளும் ஈசனாக இருந்தாலும் தன்னுடைய மனைவியிடம் தான் அனுமதி பெற்றாக வேண்டும் போலும் .
● சிவனைப் பிரிந்து ஒரு கணம் கூட பார்வதி தாயார் இருக்க முடியாது என்று சொல்லி , அனுமன் அவதாரத்தின் போது பார்வதி தாயார் அனுமனின் வாலாக உருவெடுத்தார் .
● அனுமனுடைய வாலில் நவரத்தினங்கள் இருப்பதாக ஐதீகம் உள்ளது .
● திருமணத்தடை உள்ளவர்கள் ஆஞ்சநேயரின் வாலில் துவங்கி அவருடைய நெற்றி கை மற்றும் கால்கள் வரை சந்தனம் வைத்து பிறகு குங்குமமிட்டு தொடர்ந்து வழிபட்டு வந்தால் பார்வதி தாய் மற்றும் ஈசனின் அருள் கிட்டி திருமண சீக்கிரமாய் நடைபெறும்.
● இப்படி தொடர்ந்து 48 நாள் அதாவது ஒரு மண்டலம் , சந்தனம் மற்றும் குங்குமம் இட்டு " ஸ்ரீராமஜெயம் " சொல்லி வழிபட்டு வந்தால் கூடாத காரியங்கள் கூடும் என்பது ஐதீகம் .
மேலும் இதுபோன்ற தகவல்களை பெற எங்களை பின் தொடருங்கள் ....
நன்றி வணக்கம்