இன்றைய காலகட்டத்தில் 40 வயதிற்கு மேலாக இருக்கக்கூடிய பலர் சந்திக்கக்கூடிய மிக முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று சர்க்கரை நோய். இப்பொழுதெல்லாம் பிறந்த குழந்தைகளுக்கும் கூட சர்க்கரை நோய் வருகிறது .
இவை அனைத்திற்கும் காரணம் நம்முடைய வாழ்வியல் மாற்றம் , உணவு பழக்கவழக்கம், உடல் உழைப்பின்மை, அதிக உடல்எடை என பல காரணங்களை சொல்லலாம் ....
நம் உடலில் இன்சுலின் சுரப்பு மிகவும் கம்மியாக சுரப்பதால் நீரிழிவு அல்லது சர்க்கரை நோய் ஏற்படுகிறது.. சர்க்கரையை கட்டுப்படுத்த உணவு கட்டுப்பாடு மிகவும் முக்கியம். இந்த பதிவில் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தக் கூடிய நான்கு முக்கிய மருத்துவ பொருட்களை பற்றி விவரமாக பார்க்கலாம்.
1. ஆவாரம் பூ .
ஆவாரம் பூ பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் ஆவாரம் பூவை தண்ணீரில் கொதிக்க வைத்து வெதுவெதுப்பான பின்பு அருந்தினால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். அல்லது ஆவாரம் பூ பொடியை தண்ணீரிலும் கலந்து குடித்து வரலாம்.
2 . நித்தியகல்யாணி.
நித்திய கல்யாணி பூ மற்றும் இலைகள் என இரண்டுமே சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் தன்மை உடையது. இந்த இலைகளை வெறும் வாயில் போட்டும் மெல்லலாம். அல்லது இந்தப் பூவையும், இலைகளையும் ஒரு கப் தண்ணீரில் கொதிக்கவத்து பின் வெதுவெதுப்பானதும்
வெறும் வயிற்றில் காலை நேரத்தில் குடித்து வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.
3. நாவல் பழம் .
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி, இன்சுலின் சுரப்பை மேம்படுத்தும் தன்மை நாவல் பழத்திற்கு உண்டு . நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கிடைக்கும் நேரங்களில் இந்த நாவல் பழத்தை வாங்கி சாப்பிடுவது நல்லது. மேலும் நாவல் விதை பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது. அதை வாங்கி தண்ணீரில் கலந்து உணவுக்கு பின்பு அல்லது உணவுக்கு முன் என காலை மற்றும் இரவு நேரங்களில் குடித்து வந்தால் சர்க்கரை நோய் குறையும் .
4. சிறுகுறிஞ்சான்.
சிறுகுறிஞ்சான் ஒரு மிக சிறந்த மூலிகை. இது சர்க்கரை நோய், மலச்சிக்கல், இருமல் போன்ற பல பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை தரக்கூடியது . சிறுகுறிஞ்சான் இலைகள் அல்லது சிறு குறிஞ்சான் பொடியை வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து உணவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு குடித்துவந்தால் சர்க்கரை நோயின் தாக்கம் குறையும் .
இவற்றுடன் முறையான உடற்பயிற்சி, சரியான உணவு பழக்கம், ஆகியவற்றை பின்பற்றுங்கள் சர்க்கரை நோய் எளிமையாக கட்டுப்படுத்தலாம்.
நன்றி வணக்கம்