இந்தப் பதிவில் வலம்புரி சங்கின் சிறப்புகள் பற்றியும் அவற்றை வழிபடும் முறைகள் பற்றியும் விவரமாக பார்க்கலாம் .
வலம்புரி சங்கின் சிறப்பு :
சாகாவரம் வேண்டி அசுரர்களும் , தேவர்களும் அமிர்தத்தைப் பெற மந்தார மலையை மத்தாக்கி வாசுகி என்னும் கொடிய நஞ்சைக் கக்கும் பாம்பை கயிறாக்கி பாற்கடலை கடைந்தார்கள்.
அப்பார்கடலைக் கடையும் போது அமிர்தத்திற்கு முன்பாக காமதேனு, ஆலகால விஷம் , ஐராவதம் என்னும் வெள்ளை யானை , உச்சைசிரவஸ் என்னும் உயர்ரக குதிரை ,14 வகை இரத்தினங்கள், லட்சுமி , சங்கு, நிலவு ஆலகால விஷம் போன்ற பல பொருள்கள் வெளிவந்தன .
பாற்கடலை கடையும் போது மகாலட்சுமியுடன் வலம்புரி சங்கும் பிறந்ததினால் இது மகாலட்சுமி ரூபமாகவே கருதப்படுகிறது .
இந்த வகை சங்கில் வலம்புரி சங்கு, இடம்புரி சங்கு என இரண்டு வகைகள் உள்ளன. அவை இரண்டுமே சிறப்பு வாய்ந்தவை தான் . ஆனாலும் வலம்புரி சங்கு என்பது கூடுதல் சிறப்பு வாய்ந்தது.
சங்கின் சுழி வலது புறமாய் இருந்தால் அது வலம்புரி சங்கு. இதுவே சங்கின் சுழி இடது புறமாய் திரும்பி இருந்தால் அது இடம்புரி சங்கு ஆகும் .
வலம்புரி சங்கினை வீட்டில் வைத்து முறையாக வழிபட்டு வந்தால் மகாலட்சுமியின் அருள் கிடைத்து செல்வ வளம், மன நிம்மதி, மகிழ்ச்சி போன்ற எல்லாவிதமான நன்மைகளும் வந்து சேரும் என்பது ஐதீகம்.
வலம்புரி சங்கினை அதிக பணம் கொடுத்து வாங்கி பூஜை அறையில் வைத்து விட்டால் மட்டும் செல்வவளம் கிடைத்துவிடுமா ? என்று கேட்டால் நிச்சயம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதை வைத்து முறையான வழிபாடு செய்தால் மட்டுமே இறைவன் அருளால் கிடைக்கவேண்டிய பலன் உரிய காலத்தில் வந்து சேரும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
வலம்புரி சங்கை எப்படி வைத்து வழிபட வேண்டும் :
எக்காரணம் கொண்டும் வலம்புரி சங்கை வெறுமனே தரையில் வைத்து வழிபடாமல் , பித்தளை அல்லது வெள்ளியால் ஆன சங்கு ஸ்டான்டில் சங்கை வைத்து வழிபடலாம் .
அல்லது பட்டுத்துணியால் சங்கை போர்த்தி வைக்க வேண்டும். இல்லையென்றால் பச்சரிசியை தரையில் கொட்டி வைத்து அதன்மேல் வலம்புரி சங்கை வைக்க வேண்டும்.
வலம்புரி சங்கில் தண்ணீர் ஊற்றி வைக்கலாமா ?
வலம்புரி சங்கில் தண்ணீரை ஊற்றி வைத்து வழிபடலாமா ? என்று கேட்டால் கண்டிப்பாக வழிபடலாம்.
சங்கை நன்றாக சுத்தம் செய்து அதில் தண்ணீரை ஊற்றி அதன் மேல் துளசி இலையையோ, மல்லிகை பூ, போன்றவற்றையோ போட்டு பூஜை அறையில் வைக்கலாம்.
தண்ணீர் ஊற்றி வழிபட்டால் மிகவும் நல்லது. அந்த சங்கு தீர்த்தத்தை தினமும் எடுத்து குடிக்கலாம். வீட்டின் அனைத்து பகுதிகளிலும் தெளித்தும் விடலாம் . அப்படி தினமும் செய்தால் கண்டிப்பாக லட்சுமியின் அருள் கிடைக்கும். குறிப்பாக தண்ணீரை தினமும் மாற்றுவது அவசியம்.
வலம்புரி சங்கில் பச்சரிசி போடலாமா ?
வலம்புரி சங்கின் கீழே பச்சரிசி போடும்போது அதற்குள்ளேயே பச்சரிசி போட்டு அதன்மேல் வெள்ளிக்காசு முடிந்தால் சிறிய தங்க காசு போட்டு வழிபடலாம். பச்சரிசியை தினமும் மாற்ற இயலவில்லை என்றால் 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்றுங்கள்.
மாற்றிய அரிசியை என்ன செய்யலாம் என்ற சந்தேகம் இருக்கிறதா உங்களுக்கு? அதற்கான பதில் இதோ!
அந்த அரிசியை எறும்புகளுக்கோ, பறவைகளுக்கோ உணவாக வைக்கலாம்.தரையில் கோலம் இடலாம் அல்லது நீங்கள் சாதம் வைக்கும் போது அந்த அரிசியையும் கழுவி ஒன்றாக சேர்த்து சமைத்து சாப்பிடலாம் .
உடைந்த சங்கினை பூஜை அறையில் வைக்கலாமா ?
ஒரு சிலர் உயர்ரக வலம்புரி சங்கினை அதிக பணம் கொடுத்து வாங்கி பூஜை செய்வார்கள். சில நேரங்களில் நுனிப்பகுதி உடைந்துவட்டால் அதை தனியாக வைத்து இதைத் தனியாக வைத்து வழிபடுவார்கள். அப்படி வழிபடக்கூடாது அது பலனற்றது.
ஆகையால் சங்கினை வெள்ளியில் பூன்பிடித்து வைத்துக்கொள்ளலாம் . அது சங்கிற்கு பாதுகாப்பாகவும் சிறப்பு வாய்ந்ததாகவும் இருக்கும்.
வலம்புரி சங்கை எந்த திசையில் வைக்க வேண்டும் ?
பூஜை அறையில் வலம்புரி சங்கை வைக்கும் போது வடக்கு மற்றும் தெற்கு பகுதியை பார்த்தவாறு சங்கினை வைக்க வேண்டும்.
அதாவது சங்கின் தலைப்பகுதி வடக்கு பார்த்ததும் சங்கின் வால்பகுதி தெற்கு பார்த்தும் இருக்கவேண்டும்.
வலம்புரிச் சங்கில் செய்யக்கூடாத தவறுகள் :
வலம்புரி சங்கை கழுவி சுத்தப்படுத்தும் போது சுத்தமற்ற தண்ணீரைக் கொண்டோ, எச்சில் படுத்தப்பட்ட பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரை கொண்டோ கழுவக்கூடாது. அப்படி செய்தால் மன இறுக்கம் மற்றும் மன அமைதியின்மை ஏற்படும் .
ஆகையால் சுத்தமான தண்ணீரை கொண்டோ அல்லது பன்னீரைக் கொண்டோ சங்கினை தூய்மைப்படுத்த வேண்டும்.
எக்காரணம் கொண்டும் சங்கினை சுத்தம் செய்த பிறகு மஞ்சள் குங்குமம் வைக்காமல் இருக்கக்கூடாது .
சங்கில் வாசனை திரவங்கள் பூசலாமா ?
வலம்புரி சங்கில் இயற்கை வாசனைப் பொருளான மரிக்கொழுந்து , சந்தனம், மல்லிகை , ரோஜா போன்ற வாசனை திரவங்களை பூசி வழிபட்டால் நல்ல நறுமணம் கிடைப்பது மட்டுமல்லாமல் சுக்கிரன் அனுக்கிரகமும் கிடைக்கும்.
ஆகையால் மகாலட்சுமியின் உயிரோட்டமாய் இருக்கும் வலம்புரி சங்கினை முறையாக பூஜை அறையில் வைத்து வழிபட்டு வந்தால் நல்லாற்றலையும், செல்வ வளங்களையும் பெறலாம் ..
நன்றி வணக்கம்