● சிறுநீரகத்தின் மிக முக்கியமான பனிகளில் ஒன்று நம் உடல் மற்றும் இரத்தத்தில் உள்ள கழிவுகளை சிறுநீரின் மூலம் வெளியேற்றுவது தான்.
● அதைத் தவிர தினமும் சுமார் 180 லிட்டர் இரத்தத்தை இரண்டு சிறுநீரகங்களும் சுத்தப்படுத்துகின்றன. மேலும் இரத்த அழுத்தத்தை சரியாக வைத்துக்கொள்ளவும், இரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கும் , எலும்புகளின் வளர்ச்சிக்கும் பெரிதும் உதவுகிறது .
● சிறுநீரகங்கள் பாதிப்படைவதால் இரத்தக் கொதிப்பு , முகம் கை கால்களில் வீக்கம் , மூச்சுத்தினறல், எலும்பு பலவீனம், உடல் சோர்வு போன்ற பலபிரச்சனைகள் ஏற்படுகிறது.
● இந்தப் பதிவில் சிறுநீரகத்தை (KIDNEY) பாதிப்படைய செய்யும் மிக முக்கியமான 7 அடிப்படை காரணங்களைப் பற்றிக் கான்போம்.
1. அதிகமாக வலி மாத்திரை உட்கொள்வது .
அடிக்கடி வலிமாத்திரைகளை பயன்படுத்துவதால் தலைவலி மற்றும் இதர வலிகள் குறையலாம் . ஆனால் இவை சிறுநீரகத்தில் இரத்த ஓட்டத்தை குறைத்து சிறுநீரகத்தை பாதிப்புக்குள்ளாக்கும்,
மேலும் வலி மற்றும் அழற்சி மாத்திரைகளான ( Nonsteroidal anti-inflammatory drugs ) இபுப்புரொஃபென் (IBUPROFEN ) , டிக்ளோஃபெனாக் ( DICLOFENAC ) போன்றவற்றை அதிகமாக பயன்படுத்துவது மிகவும் தவறு.இவை தான் சிறுநீரகத்தின் முதல் எதிரி .
2. போதுமான தண்ணீர் குடிக்காமல் இருப்பது .
நம் உடலை எப்போதும் நீரேற்றமாக வைத்துக்கொள்வது மிகவும் அவசியம். உடலுக்கு தேவையான தண்ணீர் குடித்தால் தான் சிறுநீரின் மூலம் நச்சுப்பொருட்கள் எளிமையாக வெளியேற்றப்படும். தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல. தாகம் எடுக்கும்போது தண்ணீர் குடியுஙாகள்.தாகம் தீரும்வரை தண்ணீர் குடியுங்கள் அதுவே போதும்.
3. சிறுநீர் கழிக்காமல் இருப்பது .
சிறுநீர் கழிக்க நேரும்போது அதை அடக்காமல் வெளியேற்றுவது மிகவும் நல்லது. அதிலும் ஒருசிலர் நன்றாக தூங்கும் நேரத்தில் சிறுநீர் நெருக்கினாலும் அதைக் கழிக்காமல் தூக்கம் தான் பெரிது என்று நினைப்பார்கள்.இந்தப் பழக்கமே சிறுநீரகத்தை பாதிப்புக்குள்ளாக்கிவிடும் .
4. அதிகமான புரதம் உட்கொள்வது .
சிறுநீரக நோயாளிகள் புரத சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்ள கூடாது அதிலும் குறிப்பாக அசைவ உணவுகள் நிறைந்த புரதத்தை தவிர்க்க வேண்டும் . காரணம் புரத உணவுகளை சாப்பிட்டால் உடம்பில் கழிவு பொருட்கள் அதிகமாக உருவாகும். சிறுநீரகம் பாதிக்கப்படும் போது கழிவுகளை வடிகட்டி வெளியேற்றக்கூடிய நெப்ரான்கள் தன்னுடைய வேலையை சரியாக செய்ய முடியாது அதனால் கழிவுகள் உடலில் சேர்ந்து விடும்.
5. உப்பு நிறைந்த உணவுகள் .
உணவில் அதிகமாக உப்பு சேர்த்துக் கொள்வதால் சிறுநீரில் புரதம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இது சிறுநீரக நோய்களுக்கும் இதயம் சம்பந்தமான நோய்களுக்கும் வழி வகுக்கும்.
6. தூக்கமின்மை .
இரவில் குறைந்தது 7 முதல் 8 மணி நேரம் தூக்கம் அவசியம். இரவில் அதிக நேரம் கண் விழித்து ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதன் மூலமே ஒரு சிலர் இரவில் தூங்குவதற்கு மிக நேரமாகிறது இதை முதலில் தவிர்க்க வேண்டும். காரணம் முறையற்ற தூக்கம் உயர் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். உயர் ரத்தத்தை அதிகரிக்க கூடிய எந்த ஒரு செயலுமே மெல்ல மெல்ல சிறுநீரகத்தை பாதிக்கும் என்பதை நாம் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் .
7. புகைபிடித்தல் மற்றும் மதுப்பழக்கம் .
புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துவதால் சிறுநீரகத்தின் செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன அதற்கு காரணம் புகையிலை மற்றும் மது பானங்களில் உள்ள தீங்கு விளைவிக்கும் பொருள்கள் தான். ஆல்கஹால் உடலில் நீர் இழப்பை அதிகரிக்க செய்து சிறுநீரகங்களில் உள்ள செல்கள் மற்றும் நெப்ரான்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
எனவே மேலே கூறிய இந்த பழக்கங்களை தவிர்த்து முறையான உணவு உடற்பயிற்சி போன்றவற்றை பின்பற்றி சிறுநீரகங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்வோம்.
நன்றி வணக்கம்