நாம் சம்பாதிக்கும் பணத்தில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்து செல்போன், பைக் , கார் போன்றவற்றை வாங்கலாம் என்று யோசிக்கும் அளவு நமக்கு பொறுமை இல்லை இதுதான் இன்றைய சூழல் என்று சொல்லலாம் .இதுவே EMI என்றால் , பொருளை சீக்கிரமும் வாங்கலாம் . அதேசமயம் மாதம் 3000 தானே 5000 தானே மாத சம்பளம் வந்துவிடுமே கட்டிக்கொள்ளலாம் அதனால் பெரிதாக பாதிப்பு இல்லை சமாளித்துக் கொள்ளலாம் என்று எண்ணத் தொடங்கி விடுகிறோம். இதுதான் நாம் செய்யக்கூடிய மிகப்பெரிய தவறு .
எனக்கு தெரிந்த ஒரு பெரியவர் ஒருவர் அடிக்கடி சொல்லுவார் , " நாளை என்பது ஏமாற்று " என்று. அதும் சரிதான் , காரணம் இந்த ஊரடங்கு காலத்தில் லட்சக்கணக்கில் சம்பாதித்தவர்களும் கூட மாதம் 3000 , 5000 பணத்தை அவர்களால் கட்ட முடியவில்லையே. இதை நாம் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இது ஒரு புறமிருக்க எவ்வளவு கடினமாக உழைத்தாலும் ஒரு சிலருக்கு கையில் காசு , பணம் தங்கவே தங்காது. இப்படி கடன் தொல்லையால் மீளமுடியாதவர்கள் தங்களுடைய கடன்களை தீர்க்க அருமையான ஆன்மீக வழிமுறை ஒன்று உள்ளது அதைப் பற்றி இப்போது பார்க்கலாம் .
வெள்ளிக்கிழமையில் ஒரு பாக்கெட் கல் உப்பை வாங்கி ஒரு சிறிய கண்ணாடி பாத்திரத்தில் அல்லது வெங்கல பாத்திரத்தில் அந்த உப்பை கோபுரம் போல கொட்டிக் கொள்ளுங்கள். அதை பூஜை அறையில் வைக்க வேண்டும். அந்த கண்ணாடி பாத்திரம் சாமிக்கு முன்பு வைக்கும் போது ஒரு புதிய முகம் பார்க்கும் கண்ணாடியை அதற்கு முன்பாக வையுங்கள் அதாவது நீங்கள் கண்ணாடி பாத்திரத்தில் கொட்டி வைத்த உப்பு முகம் பார்க்கும் கண்ணாடியில் தெரிய வேண்டும்.
பூஜையறையில் எப்போதுமே ஒரு சிறிய கண்ணாடி இருக்க வேண்டும் ஏனென்றால் நம் முன்னோர்கள் நம்முடைய குலதெய்வம் அந்த கண்ணாடியில் தோன்றுவார்கள் என்பது ஐதீகம்.
கண்ணாடி வைத்து அதன் முன்பு உப்பை குவித்து வைத்து வணங்க வேண்டும் அப்படி வணங்கி வந்தால் பெரிய அளவில் இருந்த கடனும் விரைவில் தீரும். வெள்ளிக்கிழமை முடிந்ததும் மறுநாள் காலையில் அந்த உப்பை எடுத்து வழக்கம் போல் நாம் சமையலுக்கு பயன்படுத்தலாம்.
இதேபோல ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் செய்து வந்தால் சீக்கிரம் கடன் பிரச்சினைகள் யாவும் நிவர்த்தியாகும் புதிதாக கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படாது.
அதற்காக கடனை மென்மேலும் வாங்கிக்கொண்டு இருக்காதீர்கள். விளம்பரத்தை குறைத்துக் கொள்ளுங்கள் . கஷ்டப்பட்டு உழைக்கும் பொருளையும், பணத்தையும் சேமிக்க கற்று கொள்ளுங்கள். கடன் வாங்கும் நிலை ஏற்படாது.
நன்றி வணக்கம்